search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jobs"

    • இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு எழுத வேண்டும் என மத்திய அரசு உத்தரவு
    • மறுபரிசீலனை செய்யக்கோரி மீண்டும் ஒருமுறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவேன்

    மத்திய அரசு வேலைகளுக்கான போட்டித் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்படுகிறது. இதனால் இந்தி அல்லாத மொழியை, தாய்மொழியாகக் கொண்டு படிக்கும் மாநிலங்களின் மாணவர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

    இந்தியில் தேர்வு நடத்தப்படுவதால், வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் தேர்வு செய்யப்படுவதாக தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள், மத்திய அரசை கண்டித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறும்போது, குழந்தைகளுக்கு (மாணவ- மாணவிகள்), அவர்களுக்கு தெரிந்த மொழிகளில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

    இதுகுறித்து மறுபரிசீலனை செய்யக்கோரி மீண்டும் ஒருமுறை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவேன். வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளை இந்தியில் அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்ற மத்திய அரசு முடிவை நாங்கள் எதிர்க்கிறோம்'' என்றார்.

    • மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் வேலைகளை திறம்பட செய்ய வேண்டும்.
    • 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுப்பதை கலெக்டர் பார்வையிட்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பொறக்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்குழுவினை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.மேலும் இந்த குழுவில் இடம் பெறும் மாணவ மாணவிகள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் வேலைகளை திறம்பட செய்து பள்ளியின் வளர்ச்சிக்கு வழி வகுக்க வேண்டும் என மாணவ மாணவர்களுடைய கேட்டுக் கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் ஜெயந்தி,வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர்,ஒன்றிய குழு துணை தலைவர் திருமேனி,ஊராட்சி மன்ற தலைவர் சீதளா பாலாஜி,பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி, திருக்கண்ணபுரம் வருவாய் ஆய்வாளர் ரம்யா மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உடன் இருந்தனர். அதனை தொடர்ந்து திருக்கண்ண புரம் அரசினர் மேல்நி லைப்பள்ளியில் பள்ளிப்பா ர்வை திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு மாண வர்களுக்கு வேதியியல் பாடம் எடுப்பதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.

    • கிளைசிறைகளில் தூய்மைப்பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
    • காலியாக உள்ள 2 தூய்மை பணியாளர் பணியிடத்துக்கு எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

    அரியலூர்,

    திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் கிளைச் சிறைகளில் காலியாக உள்ள 2 தூய்மை பணியாளர் பணியிடத்துக்கு எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது வரம்பு எஸ்.சி.ஏ,எஸ்.சி, எஸ்.டியினருக்கு 37, எம்.பி.சி, பி.சி.யினருக்கு 34, ஓ.சி.யினருக்கு 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். மேற்படி தூய்மை பணியாளர் பதவிக்கு தகுதி பெற்றவர்கள் சுய விவரங்களை வருகிற 13-ந் தேதிக்குள் திருச்சி மத்திய சிறைக் கண்காணிப்பாளர், திருச்சி-20 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 12 இடங்களில் 14 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • தேர்வு எழுதுவதற்காக ஆயிரத்து 852 பேர் மட்டுமே வந்திருந்தனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு நெல்லை மாவட்டத்தில் இன்று நடைபெற்றது.

    இதற்காக மாவட்டத்தில் 12 இடங்களில் 14 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்காக மொத்தம் 3 ஆயிரத்து 974 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் ஆயிரத்து 852 பேர் மட்டுமே தேர்வெழுத வந்திருந்தனர். 2 ஆயிரத்து 122 பேர் தேர்வு எழுத வரவில்லை.

    • 20 வயதிற்கு மேற்பட்டவராகவும், 45 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
    • எந்த அரசியல் அமைப்பைச் சார்ந்தவராகவும் இருக்கக்கூடாது.

     திருப்பூர் :

    திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படை பணிகளுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அறிவித்துள்ளது. திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, திருப்பூர் மாநகரில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆண், பெண் ஆகியோர் ஆளினர் பதவிக்கு நிரப்பப்பட உள்ளனர்.

    இந்த பணிகளுக்கான விண்ணப்பத்தை திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இந்தப் பணியில் சேர 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 20 வயதிற்கு மேற்பட்டவராகவும், 45 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். நல்ல உடல் தகுதியுடனும், நன்னடத்தை உடையவராகவும் இருக்க வேண்டும். எந்த அரசியல் அமைப்பைச் சார்ந்தவராகவும் இருக்கக்கூடாது. திருப்பூர் மாநகரப் பகுதிக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். தகுதியுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் 24-ந் தேதிக்குள் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஊர்க்காவல் படை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • 30 பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்து விட்டது.
    • மீதமுள்ள பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

    அதில் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைப்பும் ஒன்று. இந்தப் பணிகள் முடிவடைந்துள்ளது.

    இந்த நிலையில் இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதியை மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதில் கார் எப்படி ஏற்பட்டு பார்க்கிங் செய்யப்படுகிறது என்பதை பார்வையிட்டார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைப்பு நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட பணிகள் முடிவடைந்துள்ளது. 6 மாதத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன.

    விரைவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங்கை திறந்து வைப்பார்.

    இதில் 56 கார்கள் நிறுத்தி வைக்கலாம்.

    இது தவிர வளாகத்தில் 10 கார்களை நிறுத்தி வைக்கலாம். கார்களை நிறுத்தி வைப்பதற்கு மிக குறைந்தபட்ச கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 102 திட்டப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 30 பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்து விட்டது.

    மீதமுள்ள பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அந்தப் பணிகளும் விரைவில் முடிவடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மண்டல குழு தலைவர் மேத்தா, கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி , செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • ராமநாதபுரத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • அரசுத்துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதம் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலைநாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பை பெறலாம்.

    இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்கள் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்துகொள்ளலாம்.

    இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத்துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும்.

    மேலும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்களுக்கு கட்டணமின்றி தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் Tamil Nadu Private Job Portal www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது.

    இந்த இணையதளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞர்களும் பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
    • அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞர்கள் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதேபோல இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்ட ப்படிப்பு வரை முடித்த வேலை நாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்துகொண்டு தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பினை பெறலாம்.

    இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்கள் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் கலந்து கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலை வாய்ப்பு அலுவலகபதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளில் கோரப்ப டும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×