தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது. அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும்.
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞர்கள் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்டு வருகிறது.

இதில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதேபோல இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்ட ப்படிப்பு வரை முடித்த வேலை நாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்துகொண்டு தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பினை பெறலாம்.

இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்கள் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் கலந்து கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலை வாய்ப்பு அலுவலகபதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளில் கோரப்ப டும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com