கிளைசிறைகளில் தூய்மைப்பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கிளைசிறைகளில் தூய்மைப்பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதுகாலியாக உள்ள 2 தூய்மை பணியாளர் பணியிடத்துக்கு எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
கிளைசிறைகளில் தூய்மைப்பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
Published on

அரியலூர்,

திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் கிளைச் சிறைகளில் காலியாக உள்ள 2 தூய்மை பணியாளர் பணியிடத்துக்கு எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது வரம்பு எஸ்.சி.ஏ,எஸ்.சி, எஸ்.டியினருக்கு 37, எம்.பி.சி, பி.சி.யினருக்கு 34, ஓ.சி.யினருக்கு 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். மேற்படி தூய்மை பணியாளர் பதவிக்கு தகுதி பெற்றவர்கள் சுய விவரங்களை வருகிற 13-ந் தேதிக்குள் திருச்சி மத்திய சிறைக் கண்காணிப்பாளர், திருச்சி-20 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com