search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மல்டி லெவல் கார் பார்க்கிங்கை முதல்-அமைச்சர் திறந்து வைப்பார்- மேயர் தகவல்
    X

    தஞ்சையில் மல்டி லெவல் கார் பார்க்கிங்கை மேயர் சண்.ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மல்டி லெவல் கார் பார்க்கிங்கை முதல்-அமைச்சர் திறந்து வைப்பார்- மேயர் தகவல்

    • 30 பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்து விட்டது.
    • மீதமுள்ள பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

    அதில் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைப்பும் ஒன்று. இந்தப் பணிகள் முடிவடைந்துள்ளது.

    இந்த நிலையில் இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதியை மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதில் கார் எப்படி ஏற்பட்டு பார்க்கிங் செய்யப்படுகிறது என்பதை பார்வையிட்டார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைப்பு நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட பணிகள் முடிவடைந்துள்ளது. 6 மாதத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன.

    விரைவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங்கை திறந்து வைப்பார்.

    இதில் 56 கார்கள் நிறுத்தி வைக்கலாம்.

    இது தவிர வளாகத்தில் 10 கார்களை நிறுத்தி வைக்கலாம். கார்களை நிறுத்தி வைப்பதற்கு மிக குறைந்தபட்ச கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 102 திட்டப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 30 பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்து விட்டது.

    மீதமுள்ள பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அந்தப் பணிகளும் விரைவில் முடிவடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மண்டல குழு தலைவர் மேத்தா, கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி , செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×