search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒன்பிளஸ் 7 ப்ரோ"

    சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புதிய 7 சீரிஸ் சிப்செட் அந்நிறுவன பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களிலும் மூன்று கேமரா பயன்படுத்த வழி செய்யும். #Samsung



    சாம்சங் நிறுவனம் புதிதாக ஆக்டா-கோர் மொபைல் சிப்செட் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. எக்சைனோஸ் 7 சீரிஸ் - எக்சைனோஸ் 7904 என்ற பெயரில் புதிய சிப்செட் அறிமுகமாகி இருக்கிறது.

    சாம்சங் தனது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் வழங்குவதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய சிப்செட் இந்திய சந்தைக்கென உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்சைனோஸ் 7904 சிப்செட் மல்டி-மீடியா மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை அதிவேகமாக செயல்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.



    இதன்மூலம் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களிலும் சீரான வேகத்தில் மல்டி-டாஸ்கிங் செய்ய முடியும். புதிய எக்சைனோஸ் 7904 சிப்செட்டை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யும் பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. எனினும், இந்த சிப்செட் கொண்டு வெளியாகும் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    எட்டு கோர்களில் 14 என்.எம். வழிமுறையில் சாம்சங் புதிய சிப்செட் உருவாகி இருக்கிறது. இதில் இரண்டு கார்டெக்ஸ் ஏ73 கோர்கள் 1.8 ஜிகாஹெர்ட்சில் கிளாக் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஆறு கார்டெக்ஸ் ஏ53 கோர்கள் 1.6 ஜிகாஹெர்ட்சில் கிளாக் செய்யப்பட்டுள்ளது. 

    மல்டி டாஸ்கிங் மட்டுமின்றி புதிய எக்சைனோஸ் சிப்செட் மூன்று கேமரா சென்சார்களை சப்போர்ட் செய்யும். இதனால் உயர் ரக புகைப்படங்களுடன், வீடியோக்களையும் படமாக்க முடியும். கனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்த வரை சாம்சங் எக்சைனோஸ் 7904 சிப்செட் எல்.டி.இ. மோடெம் வசதி கொண்டிருக்கிறது.
    ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #RedmiNote7Pro #Smartphone



    ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் கடந்த வாரம் சீனாவில் அறிமுகமானதை தொடர்ந்து விரைவில் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கியுள்ளன. ரெட்மி நோட் 7 அறிமுக விழாவிலேயே ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என ரெட்மி அறிவித்திருந்தது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    மேலும் ரெட்மி நோட் 7 போன்றே புதிய நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என தெரிகிறது. சமீபத்தில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் டீசர் சீனாவின் வெய்போ தளத்தில் லீக் ஆனது. அதில் நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. சோனி IMX586 பிரைமரி சென்சார் வழங்கப்படுகிறது. 

    ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. சாம்சங் ISOCELL GM1 சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 7 ப்ரோ இருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது.



    முன்னதாக குவால்காம் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது. இத்துடன் ஆக்டா-கோர் க்ரியோ 675 சி.பி.யு. மற்றும் அட்ரினோ 612 GPU வழங்கப்படுகிறது. புதிய பிராசஸர் ஸ்னாப்டிராகன் 670 சிப்செட்டின் மேம்பட்ட வடிவில் 11 என்.எம். தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கிறது. 

    இந்த பிராசஸரில் குவால்காமின் க்விக் சார்ஜ் 4 பிளஸ் தொழில்நுட்பத்திற்கான வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் அல்ட்ரா-ஹெச்.டி. (4K @ 30fps) தரத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் வசதியும் உள்ளது. 

    ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை CNY 1499 (இந்திய மதிப்பில் ரூ.15,800) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை CNY 999 (இந்திய மதிப்பில் ரூ.10,500) என்றும், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் CNY1199 (இந்திய மதிப்பில் ரூ.12,600) என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி விலை CNY 1399 (இந்திய மதிப்பில் ரூ.14,700) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    அரியானாவில் கடுமையான மூடுபனியால் நெடுஞ்சாலையில் சென்ற சுமார் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். #DenseFog #HaryanaAccident
    புதுடெல்லி:

    டெல்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது. குளிர் சீசனில் இந்த காலக்கட்டத்தில் நிலவும் சராசரி வெப்பநிலையை விட, மிகவும் குறைவான வெப்பநிலை இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக காலை வேளையில் அருகில் இருப்பவர்கள்கூட தெரியாத வகையில் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையும் மீறி சில இடங்களில் விபத்து ஏற்படுகிறது.

    இந்நிலையில், அரியானா மாநிலத்தில் ரோத்தக்-ரேவாரி நெடுஞ்சாலையில் இன்று காலையில் வாகனங்கள் சென்றபோது மூடுபனி காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. சுமார் 50 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதில் 7 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



    இந்த விபத்து காரணமாக அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை வெளியேற்றி, போக்குவரத்தை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.  இதற்காக ஏராளமான ஜேசிபி வாகனங்கள்  வரவழைக்கப்பட்டன. #DenseFog #HaryanaAccident
    மோட்டோரோலாவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இணையத்தில் லீக் ஆகி வரும் நிலையில், புதிய மோட்டோ ஜி7 பவர் விவரங்கள் வெளியாகியுள்ளது. #smartphone



    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

    அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் வலைதளத்தில் லீக் ஆகியிருக்கும் புகைப்படங்களில் புதிய மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக மோட்டோ ஜி7 மற்றும் மோட்டோ ஜி7 பிளே ஸ்மார்ட்போன் மாடல்களின் விவரங்கள் வெளியாகி இருந்தது.

    புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் XT1955-4 என்ற மாடல் நம்பருடன் சான்று பெற்று இருக்கிறது. இணையத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை பிரைமரி கேமரா வழங்கப்பட்டிருக்கிறது.


    புகைப்படம் நன்றி: FCC

    ஸ்மார்ட்போனின் செல்ஃபி கேமரா குறித்து எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில், புதிய மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனில் என்.எஃப்.சி. சப்போர்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மாடல் நம்பர் XT1955-1 பிரேசில் நாட்டிற்கும், XT1955-2 லத்தீன் அமெரிக்காவிற்கும், XT1955-4 மாடலில் என்.எஃப்.சி. வசதி வழங்கப்படவில்லை, XT1955-7 மாடலில் என்.எஃப்.சி. வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் ஓசன் என்ற குறியீட்டு பெயர் கொண்டிருப்பதாகவும், இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், அட்ரினோ 506 ஜி.பி.யு. வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் 2 ஜி.பி., 3 ஜி.பி. மற்றும் 4 ஜி.பி. ரேம் ஆப்ஷன்களிலும், 32 ஜி.பி. மற்றும் 64 ஜி.பி. என இருவித மெமரி ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனில் 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.0, 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர் கொண்டிருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஓன் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும், இதில் ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இதுதவிர மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே நாட்ச் கொண்டிருக்கும் என்றும், இந்த ஸ்மார்ட்போன் பிளாக், பிளஷ், இன்டிகோ மற்றும் சில்வர் நிறங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    பாகிஸ்தானில் 7 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற காமுகனுக்கு இன்று காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது கற்பழித்து கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை உடன் இருந்தார். #ImranAli
    லாகூர்:

    பாகிஸ்தானில் லாகூர் பகுதியை சேர்ந்தவன் இம்ரான் அலி (30). இவன் 9 சிறுமிகளை கற்பழித்தான்.

    அவர்களில் 7 வயது சிறுமியை கற்பழித்து கொன்று அவளது உடலை குப்பையில் வீசினான். இது குறித்து அவனை கைது செய்த போலீசார் லாகூர் தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த கோர்ட்டு அவனுக்கு தூக்கு தண்டனை விதித்தது. அத்துடன் 3 ஆயுள் தண்டனை மற்றும் 23 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

    அவன் லாகூரில் உள்ள காட் லாக்பாட் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். இந்த நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் மாஜிஸ்திரேட்டு அடில் சர்வார் முன்நிலையில் இம்ரான் அலி தூக்கில் போடப்பட்டான்.

    அப்போது கற்பழித்து கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் தந்தையும் உடன் இருந்தார். தூக்கில் போடப்பட்ட பின் இம்ரான் அலியின் உடல் அவரது சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டது. #ImranAli
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழைக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். #UPRain
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்பான விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

    மழையால் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஏற்கனவே 5 பேர் பலியாகினர். மேலும், தண்ணீரில் மூழ்கி 5 வயது சிறுமி பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.

    கடந்த இரு தினங்களாக பெய்த மழைக்கு உ.பி.யில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #UPRain
    எல்ஜி நிறுவனத்தின் ஜி7 ஒன், ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன், ஜி7 ஃபிட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #lgg7



    எல்ஜி நிறுவனம் ஜி7 ஒன், ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன், ஜி7 ஃபிட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. எல்ஜி ஜி7 ஒன் ஸ்மார்ட்போனில் ஸ்டாக் ஆன்ட்ராய்டு வழங்கப்பட்டுள்ளது.

    இரண்டு புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்களிலும் 6.1 இன்ச் QHD பிளஸ் 19:5:9 ஃபுல் விஷன் எல்.சி.டி. சூப்பர் பிரைட் டிஸ்ப்ளே, IP68 தரச் சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், MIL-STD 810G ரானுவ உறுதித்தன்மை, ஹைஃபை குவாட் டி.ஏ.சி., 8 எம்பி செல்ஃபி கேமரா, 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்விக் சார்ஜ் 3.0 வழங்கப்பட்டுள்ளது.

    எல்ஜி ஜி7 ஒன் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்ன்ப்டிராகான் 835 சிப்செட், ஜி7 ஃபிட் மாடலில் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட், 4 ஜிபி ரேம் வழஹ்கப்பட்டுள்ளது. ஜி7 ஒன் மாடலில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், 16 எம்பி பிரைமரி கேமரா F/1.6 அப்ரேச்சர், ஜி7 ஃபிட் மாடலில் 16 எம்பி பிரைமரி கேமரா, F/2.2 அப்ரேச்சர் கொண்டுள்ளது.



    எல்ஜி ஜி7 ஒன் சிறப்பம்சங்கள்:

    - 6.1 இன்ச் 3120x1440 பிக்சல் 19.5:9 ஃபுல் விஷன் சூப்பர் பிரைட் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
    - அட்ரினோ 540 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.6, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.9
    - கைரேகை சென்சார், பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    - வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 32-பிட் மேம்படுத்தப்பட்ட ஹைஃபை குவாட் டி.ஏ.சி.
    - பூம்பாக்ஸ் ஸ்பீக்கர், எஃப்.எம். ரேடியோ
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்விக் சார்ஜ் 3.0



    எல்.ஜி. ஜி7 ஃபிட் சிறப்பம்சங்கள்:

    - 6.1 இன்ச் 3120x1440 பிக்சல் 19.5:9 ஃபுல் விஷன் சூப்பர் பிரைட் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட்
    - அட்ரினோ 530 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் எல்ஜி UX
    - 16 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.9
    - கைரேகை சென்சார்
    - வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 32-பிட் மேம்படுத்தப்பட்ட ஹைஃபை குவாட் டி.ஏ.சி.
    - பூம்பாக்ஸ் ஸ்பீக்கர், எஃப்.எம். ரேடியோ
    - 4ஜி எல்.டி.இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்விக் சார்ஜ் 3.0

    எல்ஜி ஜி7 ஒன் புதிய அரோரா பிளாக் மற்றும் புதிய மொராக்கன் புளு நிறங்களில் கிடைக்கிறது, எல்ஜி ஜி7 ஃபிட் புதிய பிளாட்டினம் கிரே மற்றும் புதிய அரோரா பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இரண்டு புதிய எல்ஜி மாடல்களும் இந்த வாரம் துவங்க இருக்கும் ஐ.எஃப்.ஏ. விழாவில் வெளியிடப்படுகிறது. இவற்றின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் வெளியிடப்படலாம்.
    சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை மற்றும் ஸ்மார்ட்போன் விவரங்களை பார்ப்போம். #Samsung #smartphone


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ7 டுயோ ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏப்ரல் மாதம் அறிமுகமான கேலக்ஸி ஜெ7 டுயோ விலை ரூ.16,990 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக இதன் விலை குறைக்கப்பட்டு ரூ.13,990-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், கேலக்ஸி ஜெ7 டுயோ விலை மீண்டும் குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.12,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி ஜெ7 டுயோ புதிய விலை அமேசான் இந்தியா மற்றும் சாம்சங் ஆன்லைன் ஸ்டோர்களில் மாற்றப்பட்டு விட்டது. எனினும், ப்ளிப்கார்ட் தளத்தில் இதன் விலை ரூ.13,990 என்றே காட்சியளிக்கிறது.

    புதிய விலை குறைப்பு மூலம் கேலக்ஸி ஜெ7 டுயோ 4ஜிபி ரேம் கொண்ட அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 மற்றும் ஒப்போ ரியல்மி 1 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. கேலக்ஸி ஜெ7 டுயோ புதிய விலை அமேசான் தளத்தில் மாற்றப்பட்டு விட்ட நிலையில், பயனர்கள் அமேசான் ஃப்ரீம் சேல் விற்பனையை பயன்படுத்தி, ஸ்மார்ட்போனுக்கு கூடுதல் சலுகை அல்லது தள்ளுபடி பெற முடியும்.



    சாம்சங் கேலக்ஸி ஜெ7 டியோ சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்.டி. சூப்பர் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் 7 சீரிஸ் பிராசஸர்
    - 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமராஸ எல்இடி ஃபிளாஷ், f/1.9
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி ஜெ7 டியோ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 
    எல்.ஜி. நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக ஜி7 தின்க் பிளஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #LGG7ThinQ


    எல்.ஜி. நிறுவனத்தின் ஜி7 பிளஸ் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஜி7 பிளஸ்  தின்க் ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் QHD பிளஸ் 19.5:9 ஃபுல் விஷன் எல்சிடி சூப்பர் பிரைட் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மூலம் பாதுகாக்கப்படும் எல்.ஜி. ஜி7 பிளஸ்  தின்க் ஸ்மார்ட்போனில் பாலிஷ் செய்யப்பட்ட மெட்டல் ரிம், IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், ஒரு அறையில் எங்கு இருந்தாலும் குரலை அங்கீகரித்து, புரிந்து கொள்ளும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

    மற்ற ஸ்மார்ட்போன்களை விட இருமடங்கு அதிக ஒலியெழுப்பும் வகையில் பூம்பாக்ஸ் ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் DTS:X இருப்பதால் விர்ச்சுவல் 3D சவுன்டு, இயர்போன்களில் அதிகபட்சம் 7.1 சேனல் ஆடியோ மற்றும் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் Hi-Fi குவாட் DAC தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.



    எல்.ஜி. ஜி7 பிளஸ்  தின்க் சிறப்பம்சங்கள்

    – 6.1 இன்ச் 3120×1440 பிக்சல் 19.5:9 ஃபுல் விஷன் சூப்பர் பிரைட் IPS டிஸ்ப்ளே
    – கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    – ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
    – அட்ரினோ 630 GPU
    – 6 ஜிபி ரேம்
    – 128 ஜிபி மெமரி
    – மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    – ஆன்ட்ராய்டு 8.0 (ஓரியோ) மற்றும் எல்.ஜி. UX
    – ஹைப்ரிட் டூயல் சிம்
    – 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.6
    – 16 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.9, எல்இடி ஃபிளாஷ்
    – 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.9
    – கைரேகை சென்சார்
    – பிரத்யேக கூகுள் அசிஸ்டன்ட் பட்டன்
    – வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் IP68
    – MIL-STD 810G சான்று
    – 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    – 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    – க்விக் சார்ஜ் 3.0, வயர்லெஸ் சார்ஜிங்

    எல்.ஜி. ஜி7 பிளஸ்  தின்க் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.39,990 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஆகஸ்டு 10 தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் புதிய எல்.ஜி. ஜி7 பிளஸ்  தின்க் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 6, அசுஸ் சென்ஃபோன் 5இசட், விவோ நெக்ஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. #LGG7ThinQ #smartphone
    ஆலங்காயம் அருகே மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. இதனால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
    வாணியம்பாடி:

    ஆலங்காயம் அருகே உள்ள ராஜாபாளையம் கிராமம் மலையடிவாரத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் விவசாயிகள் ஆடு, மாடுகள் அதிகளவில் வளர்த்து வருகின்றனர்.

    அந்த ஊரை சேர்ந்த தட்சிணாமூர்த்தி அவருக்கு சொந்தமான ஆடுகளை விவசாய நிலத்தின் அருகே அடைத்து வைத்திருந்தார். நள்ளிரவில் மர்ம விலங்கு புகுந்து ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதில் 7 ஆடுகள் குடல் சரிந்து இறந்தன. இன்று காலை ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு கிராம மக்கள் திடுக்கிட்டனர். ஆலங்காயம் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் இறந்த ஆடுகளை பார்வையிட்டனர்.

    அந்த இடத்தில் செந்நாய்கள் கால் தடங்கள் இருந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். ஆலங்காயம் மலைபகுதியில் செந்நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன.

    செந்நாய்கள் ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து கொன்றிருக்க அதிக வாய்ப்புள்ளது. வாணியம்பாடி அருகே உள்ள செட்டியப்பனூர் துரையேறி கிராமத்தில் செந்நாய்கள் ஆடுகளை கடித்து கொன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.

    இதனால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். ஆடுகளை கொன்றது செந்நாய்களா அல்லது வேறு ஏதாவது விலங்குகளா என்பது குறித்து வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே குழந்தைகள் தொடர்பான தகராறில் இரு குடும்பத்தினர் இடையே வெடித்த மோதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். #clashbetweenrivalgroups #SevenkilledinPeshawar
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே உள்ள மீரா சோரேசாய் பகுதியில் இரு குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்குள் ஏற்பட்ட தகராறு தொடர்பாக நேற்றிரவு பெரியவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.



    வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறிய நிலையில் இருதரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் ஒருதரப்பினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பிரேதங்களை பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர். #clashbetweenrivalgroups #SevenkilledinPeshawar
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் திடீரென பாறைகள் உருண்டு விழுந்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் சியார் பாபா எனும் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி பிரபலமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.

    இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அந்த நீர்வீழ்ச்சியில் திரண்டனர். அவர்கள் அனைவரும் அருவியில் உற்சாகமாக நீராடிக் கொண்டிருந்தனர்.

    அந்த சமயத்தில் திடீரென மலை உச்சியில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்தன. இதில் சிக்கி சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் மேலும் 30 பேர் காயமடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர்.

    பாறைகள் விழுந்து உயிரிழந்தவர்கள் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மேலும், அங்கு பாறைகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×