என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "imran ali"

    பாகிஸ்தானில் 7 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற காமுகனுக்கு இன்று காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது கற்பழித்து கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை உடன் இருந்தார். #ImranAli
    லாகூர்:

    பாகிஸ்தானில் லாகூர் பகுதியை சேர்ந்தவன் இம்ரான் அலி (30). இவன் 9 சிறுமிகளை கற்பழித்தான்.

    அவர்களில் 7 வயது சிறுமியை கற்பழித்து கொன்று அவளது உடலை குப்பையில் வீசினான். இது குறித்து அவனை கைது செய்த போலீசார் லாகூர் தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த கோர்ட்டு அவனுக்கு தூக்கு தண்டனை விதித்தது. அத்துடன் 3 ஆயுள் தண்டனை மற்றும் 23 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

    அவன் லாகூரில் உள்ள காட் லாக்பாட் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். இந்த நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் மாஜிஸ்திரேட்டு அடில் சர்வார் முன்நிலையில் இம்ரான் அலி தூக்கில் போடப்பட்டான்.

    அப்போது கற்பழித்து கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் தந்தையும் உடன் இருந்தார். தூக்கில் போடப்பட்ட பின் இம்ரான் அலியின் உடல் அவரது சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டது. #ImranAli
    ×