search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எல்.ஜி."

    எல்.ஜி. நிறுவனம் சுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. #LG



    ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பை வெளியிடாத நிறுவனங்களில் எல்.ஜி.யும் ஒன்றாக இருக்கிறது. எனினும், இந்நிறுவனம் பத்து காப்புரிமைகளை பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஐரோப்பிய யூனியன் காப்புரிமை அலுவலகத்தில் எல்.ஜி. பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளின் படி எல்.ஜி. மடிக்கக்கூடிய சாதனங்களுக்கு பதில் சுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்க இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றில் ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களும் அடங்கும்.

    காப்புரிமைகளில் தி ரோல், பை-ரோல், டபுள் ரோல், டூயல் ரோல், ரோல் கேன்வாஸ் மற்றும் இ-ரோல் உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதிகப்படியான காப்புரிமைகளில் ரோல் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவை தவிர மற்ற விண்ணப்பங்களில் சிக்னேச்சர் ஆர், ஆர் ஸ்கிரீன், ஆர் கேன்வாஸ், ரோடோலோ போன்ற பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.



    காப்புரிமை விவரங்களை கொண்டு இந்த சாதனங்கள் உடனே வெளியாகும் என கூறிவிட முடியாது. எனினும், இந்த சாதனங்கள் ஆய்வு அல்லது உருவாக்கப்படலாம் என தெரிகிறது. சமீபத்தில் வெளியான மற்றொரு காப்புரிமை விவரங்களில் எல்.ஜி. ஸ்மார்ட்போன் சுருங்கக்கூடிய தன்மை கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

    எல்.ஜி. பதிவு செய்திருந்த மற்றொரு காப்புரிமையில், வளையும் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் மெல்லிய பெசல்கள் வழங்கப்படும் என காப்புரிமையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காப்புரிமை கொரிய காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டு அக்டோபர் 23, 2018இல் காப்புரிமை வழங்கப்பட்டிருக்கிறது. 

    புகைப்படம் நன்றி: LetsGoDigital
    எல்.ஜி. நிறுவனம் தனது வி50 தின்க் 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 #LGV50ThinQ5G



    எல்.ஜி. நிறுவனம் ஜி8 தின்க் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் வி50 தின்க் 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. இது எல்.ஜி.யின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். 

    எல்.ஜி. வி50 தின்க் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 மற்றும் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனினை அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேப்பர் சேம்பர் சார்ந்து இயங்கும் வெப்பத்தை குறைக்கும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.



    புதிய வி50 தின்க் 5ஜி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் QHD+ OLED ஸ்கிரீன், மூன்று பிரைமரி கேமராக்கள், 16 எம்.பி. 107-டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள், 12 எம்.பி. ஸ்டான்டர்டு மற்றும் 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் 2X ஆப்டிக்கல் சூம் வசதியுடன் வழங்கப்படுகிறது. செல்ஃபிக்களை எடுக்க முன்புறம் 8 எம்.பி. 3D ToF செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    5ஜி ஸ்மார்ட்போனுடன் எல்.ஜி. நிறுவனம் டூயல் ஸ்கிரீன் சாதனம் ஒன்றையும் வழங்கியிருக்கிறது. இது ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் OLED 2160x1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளேவை சேர்த்துக் கொள்ளும் வசதியை வழங்குகிறது. இது ஸ்மார்ட்போனுடன் போகோ பின் மூலம் இணைந்து கொள்கிறது.



    எல்.ஜி. வி50 தின்க் சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 3120x1440 பிக்சல் 19.5:9 ஃபுல்விஷன் OLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 640 GPU 
    - ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம்
    - 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9 பை
    - 12 எம்.பி. பிரமரி கேமரா, f/1.5, 1.4µm, 78° லென்ஸ்
    - 16 எம்.பி. சூப்பர் வைடு கேமரா, f/1.9, 1.0µm, 107° லென்ஸ்
    - 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4, 1.0µm, 45° லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.8, 1.22μm, 80° லென்ஸ்
    - 5 எம்.பி. இரண்டாவது கேமரா, f/2.2, 1.12μm, 90˚ லென்ஸ்
    - கைரேகை சென்சார்
    - வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 32-பிட் மேம்பட்ட ஹை-ஃபை குவாட் DAC
    - DTS: X 3D சரவுண்ட் சவுண்ட், பூம்பாக்ஸ் ஸ்பீக்கர் மற்றும் ஸ்டீரியோ
    - 5ஜி, 4ஜி, வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி 2.0
    - 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவால்காம் க்விக் சார்ஜ் 3.0

    எல்.ஜி. வி50 தின்க் ஸ்மார்ட்போன் ஆஸ்ட்ரோ பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. அமெரிக்கா, தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 5ஜி சேவையை வழங்க எல்ஜி. பல்வேறு டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறது.
    சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் எல்.ஜி. நிறுவனம் எல்.ஜி. ஜி8 தின்க் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் மூன்று பிரைமரி கேமராக்கள், ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. #MWC2019 #LGG8ThinQ



    எல்.ஜி. நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் தனது ஜி8 தின்க் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய ஜி8 தின்க் ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமராக்கள், 16 எம்.பி. 107-டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள், 12 எம்.பி. ஸ்டான்டர்டு மற்றும் 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் 2X ஆப்டிக்கல் சூம் வசதியுடன் வழங்கப்படுகிறது.

    முன்புறம் 3D ToF செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது செல்ஃபிக்களில் மிகத் துல்லியமாக பிரதிபலிக்க அதிகளவு டெப்த் வழங்க உதவும். இத்துடன் மேம்பட்ட பாதுகாப்பு வழங்க ஹேண்ட் ஐ.டி. மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்தவரை ஏர் மோஷன் மூலம் அழைப்புகளை ஏற்கவும், நிராகரிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    எல்.ஜி. ஜி8 தின்க் சிறப்பம்சங்கள்:

    - 6.1 இன்ச் 3120x1440 பிக்சல் 19.5:9 ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 640 GPU
    - 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9 பை
    - 12 எம்.பி. பிரமரி கேமரா, f/1.5, 1.4µm, 78° லென்ஸ்
    - 16 எம்.பி. சூப்பர் வைடு கேமரா, f/1.9, 1.0µm, 107° லென்ஸ்
    - 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4, 1.0µm, 45° லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.7, 1.22μm, 80° லென்ஸ், 3D ToF சென்சார்
    - கைரேகை சென்சார்
    - 3D ஃபேஸ் அன்லாக்
    - வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 32-பிட் மேம்பட்ட ஹை-ஃபை குவாட் DAC
    - DTS: X 3D சரவுண்ட் சவுண்ட், பூம்பாக்ஸ் ஸ்பீக்கர் மற்றும் ஸ்டீரியோ வசதி
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி (2.0)
    - 3,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவால்காம் க்விக் சார்ஜ் 3.0



    எல்.ஜி. ஜி8எஸ் தின்க் சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் 2248x1080 பிக்சல் 19.5:9 FHD பிளஸ் ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 640 GPU
    - 6 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9 பை
    - 12 எம்.பி. பிரமரி கேமரா, f/1.5, 1.4µm, 78° லென்ஸ்
    - 13 எம்.பி. சூப்பர் வைடு கேமரா
    - 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4, 1.0µm, 45° லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.7, 1.22μm, 80° லென்ஸ், 3D ToF சென்சார்
    - கைரேகை சென்சார்
    - 3D ஃபேஸ் அன்லாக்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி (2.0)
    - 3550 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவால்காம் க்விக் சார்ஜ் 3.0

    எல்.ஜி. ஜி8 தின்க் ஸ்மார்ட்போன் கார்மைன் ரெட், நியூ அரோரா பிளாக் மற்றும் நியூ மொராக்கன் புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை மார்ச் மாதம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    எல்.ஜி. நிறுவனத்தின் ஜி8 தின்க் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. #LGG8ThinQ #Smartphone



    எல்.ஜி. நிறுவனம் தனது அடுத்த ஃபிளாஇக்‌ஷிப் ஸ்மார்ட்போனான எல்.ஜி. ஜி8 தின்க் மாடலை 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுதம் செய்ய இருக்கிறது. சோனி எக்ஸ்பீரியா சீரிஸ் மாடலின் 4K டிஸ்ப்ளேவுக்கு அடுத்தப்படியாக எல்.ஜி.யின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்டபோனின் தோற்றம், சில அம்சங்கள் தெரியவந்துள்ளது. பிரபல ஸ்மார்ட்போன் வல்லுநரான எவான் பிளாஸ் எல்.ஜி. ஜி8 தின்க் மாடலின் விவரங்களை தனது ட்விட்டரில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

    அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் நாட்ச் டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா, 3.5 எம்.எம். உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் கேமரா மாட்யூலின் அருகில் எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் கைரேகை சென்சார் இடம்பெற்றிருக்கிறது. இவற்றின் கீழ் எல்.ஜி. ஜி8 தின்க் பிராண்டிங் செய்யப்பட்டிருக்கிறது.

    இத்துடன் ஸ்மார்ட்போனின் முன்பக்கம் ஒற்றை செல்ஃபி கேமரா, மெட்டல் ஃபிரேம் வடிவமைப்பு மற்றும் கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் இடதுபுறத்தில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், வால்யூம் ராக்கர் உள்ளிட்டவையும், வலதுபுறம் பவர் பட்டன் மற்றும் சிம் டிரே இடம்பெற்றிருக்கிறது.



    எல்.ஜி. ஜி8 தின்க் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

    - நாட்ச் டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட்
    - 6 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
    - டூயல் பிரைமரி கேமரா (ToF லென்ஸ்)
    - ஒற்றை செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    எல்.ஜி. நிறுவனத்தின் கியூ9 ஒன் ஸ்மார்ட்போன் ராணுவ தர பாதுகாப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #LG #Smartphone



    எல்.ஜி. நிறுவனம் தனது புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் கியூ9 ஒன் என அழைக்கப்படுகிறது. இதில் 6.1 இன்ச் QHD பிளஸ் 19.5:9 ஃபுல்விஷன் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4 ஜி.பி. ரேம், IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டிருக்கிறது.

    எல்.ஜி. நிறுவனம் சமீபத்தில் தனது கியூ9 ஸ்மார்ட்போனினை கொரியாவில் அறிமுகம் செய்தது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் ஜி7 ஒன் என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐ.எஃப்.ஏ. விழாவில் அறிமுகமானது. எல்.ஜி. ஜி7 ஒன் ஸ்மார்ட்போனில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.



    எல்.ஜி. கியூ9 ஒன் சிறப்பம்சங்கள்

    - 6.1 இன்ச் 3120x1440 பிக்சல் 19.5:9 ஃபுல் விஷன் சூப்பர் பிரைட் IPS டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
    - அட்ரினோ 540 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.6, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.9
    - கைரேகை சென்சார்
    - பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    - வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
    - MIL-STD 810G சான்று
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், பூம்பாக்ஸ் ஸ்பீக்கர், எஃப்.எம். ரேடியோ
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்விக் சார்ஜ் 3.0

    எல்.ஜி. கியூ9 ஒன் ஸ்மார்ட்போன் மொராக்கன் புளு நிறத்தில் கிடைக்கிறது. கொரியாவில் இதன் விலை 599,500 கொரியன் வொன் (இந்திய மதிப்பில் ரூ.37,940) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    எல்.ஜி. நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள் மற்றும் சில சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. #MWC2019 #5G



    எல்.ஜி. நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் ஜி8 ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி வழங்கப்படாது என தகவல் வெளியானது. இந்நிலையில், எல்.ஜி. நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 24 ஆம் தேதி சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் மற்றும் வேப்பர் சேம்பர் பயன்படுத்தப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் வேப்பர் சேம்பர் ஸ்மார்ட்போன்களில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது.

    இந்த வேப்பர் சேம்பர் எல்.ஜி. வி40 தின்க் ஸ்மார்ட்போனின் ஹீட் பைப்-ஐ விட 2.7 மடங்கு பெரியது என்றும் இதில் இருமடங்கு அதிகளவு நீர் இருப்பதாக எல்.ஜி. தெரிவித்துள்ளது. வேப்பர் சேம்பரில் செம்பு பகுதி பெரியதாக இருப்பதால் ஸ்மார்ட்போனில் ஏற்படும் வெப்பம் அதிவேகமாக குறைக்கப்படும்.



    சேம்பரில் இருக்கும் நீர் செம்பு பகுதியில் ஏற்படும் வெப்பத்தை குறைத்து ஸ்மார்ட்போன் அதிக சூடாகாமல் பார்த்து கொள்ளும். இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. இது எல்.ஜி. வி40 தின்க் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருப்பதை விட 20% அதிகம் ஆகும்.

    புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போனில் 5ஜி வழங்கப்படுகிறது என்றாலும், ஸ்மார்ட்போனின் பேட்டரி அதிகளவு பயன்படுத்தப்படாது என எல்.ஜி. தெரிவித்துள்ளது. கொரியா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதில் எல்.ஜி. கவனமாக இருக்கிறது.
    எல்.ஜி. நிறுவனம் சுருட்டக்கக்கூடிய வசதி கொண்ட சிக்னேச்சர் OLED டி.வி. ஆர் மாடலை சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்தது. #CES2019 #LGCES2019



    எல்.ஜி. நிறுவனம் தனது சுருட்டக்கக்கூடிய சிக்னேச்சர் OLED ரக டி.வி. ஆர் மாடலை சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்தது. முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் எல்.ஜி. இந்த டி.வி. மாடல்களின் ப்ரோடோடைப் பதி்ப்புகளை அறிமுகம் செய்திருந்தது. 

    தற்சமயம் எல்.ஜி. அறிமுகம் செய்திருக்கும் சுருட்டக்கக்கூடிய சிக்னேச்சர் OLED டி.வி.க்கள் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் விற்பனைக்கு வருகிறது. மற்ற ஸ்மார்ட் டி.வி.க்கள் போன்று இல்லாமல், எல்.ஜி.யின் புதுவித சிக்னேச்சர் OLED டி.வி. ஆர் மாடலில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது திரையை சுருட்டி வைக்கும் வசதியை வழங்குகிறது.

    புதிய எல்.ஜி. சிக்னேச்சர் டி.வி. மாடல் பார்க்க சிறிய பெட்டி போன்று காட்சியளிக்கிறது, பின் டி.வி.யை ஆன் செய்ததும் திரை பெட்டியில் இருந்து மெல்ல வெளியே வரும் படி உருவாக்கப்பட்டுள்ளது. திரை சுருட்டப்பட்டு இருந்தாலும், காட்சிகள் மிகவும் தெளிவாக இருக்கும் படி அதிநவீன தொழில்நுட்பம் நிறைந்திருக்கிறது.



    அலெக்சா மற்றும் ஏர்பிளே 2 போன்ற பல்வேறு அம்சங்களுடன் கிடைக்கும் எல்.ஜி. சிக்னேச்சர் OLED டி.வி. ஆர் தற்சமயம் 65 இன்ச் அளவில் மட்டும் கிடைக்கிறது. எனினும் இதனை மூன்று விதங்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதலாவதாக ஃபுல் வியூ ஆப்ஷனில் பெரிய திரை, ஏ.ஐ. பிக்சர் மற்றும் சவுண்ட் செட்டிங்ஸ் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

    இரண்டாவது ஆப்ஷன் லைன் வியூ. இந்த ஆப்ஷனில் டி.வி. பாதி அளவில் வெளியே தெரியும். பயனர்கள் இதில் கடிகாரம் மோட் செட் செய்து நேரம், வானிலை அல்லது ஃபிரேம் மோட் மூலம் குடும்ப புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை ஸ்மார்ட்போனில் இருந்து >ஷேர் செய்து பார்க்க முடியும். மூன்றாவது ஆப்ஷனான சீரோ வியூ திரை முழுமையாக உள்ளேயே இருக்கும். எனினும், பயனர்கள் இசையை டால்பி அட்மோஸ் ஆடியோ தரத்தில் அனுபவிக்க முடியும். 



    இதுவரை எல்.ஜி.யின் புதிய சிக்னேச்சர் OLED டி.வி. ஆர் மாடலின் விலையை அறிவிக்கவில்லை. புதிய சுருட்டக்கூடிய டி.வி. தவிர எல்.ஜி. நிறுவனம் க்ரிஸ்டல் சவுண்ட் ஸ்கிரீன் தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வெர்ஷனை அறிமுகம் செய்தது. இதனுடன் 88 இன்ச் 8K OLED, 65 இன்ச் 8K OLED, ஒலியெழுப்பும் திறன் கொண்ட 65 இன்ச் 4K OLED ஸ்கிரீன் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்தது. 

    முன்னதாக இந்த தொழில்நுட்பம் 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 8K OLED ஸ்கிரீன் 3.2.2-சேனல் டால்பி அட்மோஸ் ஆடியோவை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
    எல்.ஜி. நிறுவனம் சார்பில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் காப்புரிமைகளில் அந்நிறுவனம் தனது எதிர்கால ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் இந்த அம்சத்தை வழங்க இருப்பது தெரியவந்துள்ளது. #LG #smartwatch



    ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா வழங்கும் வழக்கத்தை சாம்சங் நிறுவனம் தான் துவங்கியது. சாம்சங்கின் முதல் கியர் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் அந்நிறுவனம் கேமராவினை வழங்கியது, எனினும் அதன்பின் சாம்சங் அறிமுகம் செய்த ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா வழங்கப்படவில்லை.

    இந்நிலையில், எல்.ஜி. நிறுவனம் தனது எதிர்கால ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா வழங்க இருப்பது பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. எல்.ஜி. நிறுவனம் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமைகளில் அந்நிறுவனம் தனது எதிர்கால ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா வழங்க இருப்பது தெரியவந்துள்ளது.



    அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் எல்.ஜி. பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில், அந்நிறுவனம் தனது ஸ்மார்ட்வாட்ச்களில் கேமராக்களை எவ்வாறு வழங்கும் என்பது பற்றி பல்வேறு வடிவமைப்புகள் இடம்பெற்றிருந்தன. புதிய ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா மட்டுமின்றி, மொபைல் டெர்மினல் வசதி வழங்கப்பட்டிருப்பதால் இதில் செல்லுலார் கனெக்டிவிட்டி அம்சமும் வழங்கப்படலாம்.

    புகைப்படங்கள் எடுக்கப்படுவதை எளிமையாக்கும் வகையில், கேமராவினை ஸ்மார்ட்வாட்ச்சில் புகுத்தும் பணிகளில் எல்.ஜி. ஈடுபட்டுள்ளது. இந்த காப்புரிமைகளில் இது எவ்வாறு சாத்தியமாகும் என்பதை விளக்கும் வரைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவ்வாறு ஸ்மார்ட்வாட்ச்சில் ரிஸ்ட் பேண்ட்-ஐ மாற்றக்கூடிய வகையில், எளிமையாக கேமரா கோணத்தை மாற்ற முடியும்.

    அடுத்ததாக வாட்ச் பேண்ட் மாடலில் கேமராவினை இணைக்கும் மெட்டல் லின்க் காணப்படுகிறது. மூன்றாவதாக வாட்ச் பேண்ட் முழுக்க பயனர் விரும்பும் இடத்தில் ஸ்ப்ரிங் க்ளிக் ஒன்றை இணைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுவதை போன்று காட்சியளிக்கிறது. 


    ஸ்மார்ட்ச்களில் கேமரா வழங்குவதன் மூலம் பயனர்கள் உட்கொள்ளும் உணவுகளை புகைப்படம் எடுத்து அதன் கலோரி அளவுகளை கணக்கிட முடியும், க்யூ.ஆர். கோடு ஸ்கேன் செய்து ஷாப்பிங் மற்றும் இதர இடங்களில் பயன்படுத்தலாம்.

    எல்.ஜி. புதிய அம்சத்தை வழங்குவதற்கான காப்புரிமைகளை மட்டுமே பதிவு செய்திருக்கும் நிலையில், உண்மையில் இந்த சாதனம் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
    எல்.ஜி. நிறுவனம் 'பாய்' போன்று சுருட்டி வைத்துக் கொள்ளும் வகையிலான தொலைகாட்சி மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #LG #TV



    எல்.ஜி. நிறுவனம் பெரிய திரை கொண்ட புதிய டி.வி. மாடல்களை அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய டி.வி. மாடல்கள் 'பாய்' போன்று சுருட்டி வைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய டி.வி. மாடலில் 65 இன்ச் அளவில் சுருட்டக்கூடிய திரை கொண்டிருக்கும் என்றும், இதில் வழங்கப்பட்டிருக்கும் சிறிய பட்டனை க்ளிக் செய்ததும் திரை கீழ் இருந்து மேலே எழும்பும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டி.வி.யில் OLED ஸ்கிரீன்கள் பொருத்தப்பட்டு இருப்பதால், படங்கள் அதிக துல்லியமாக தெரியும் என்றும் இவை வழக்கமான எல்.சி.டி. ஸ்கிரீன்களை விட எளிமையாக மடிக்கக்கூடியதாக இருக்கிறது.



    எல்.ஜி. நிறுவனத்தின் சுருட்டக் கூடிய தொலைகாட்சி மாடல்கள் அந்நிறுவனத்திற்கு விற்பனை அளவில் ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சீன நிறுவங்களுடனான போட்டியை எதிர்கொள்ளவும் உதவும் என கூறப்படுகிறது. தென்கொரிய நிறுவனமான எல்.ஜி. எதிர்கால தொழில்நுட்பங்களில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது.

    சீயோல் நகரில் உள்ள எல்.ஜி. ஆராய்ச்சி மையத்தில் சுருட்டக்கூடிய டி.வி.யின் ப்ரோடோடைப் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த டி.வி. பயன்படுத்தாத போது, பெட்டியில் சுருட்டி வைத்துக் கொள்ளும் வசதியை பயனர்களுக்கு வழங்குகிறது.



    எல்.ஜி. தனது சுருட்டக் கூடிய டி.வி. மாடல்களை ஏற்கனவே அறிமுகம் செய்தது. எனினும், 2019 வாக்கில் வர்த்தக ரீதியில் இந்த டி.வி. மாடல்களின் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இது குறித்து எல்.ஜி. சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    சமீபத்தில் வெளியான தகவல்களின் படி தொலைகாட்சி சந்தையில் OLED ரக பேனல்களை கொண்ட டி.வி. மாடல்கள் வெறும் 1.1 சதவிகிதம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது என தெரியவந்துள்ளது. எல்.சி.டி. ரக டி.வி.க்கள் சந்தையில் 98 சதவிகித பங்குகளை கொண்டுள்ளது. எனினும் அடுத்த ஆண்டு வாக்கில் OLED  டி.வி. மாடல்களின் விநியோகம் 70 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
    எல்.ஜி. நிறுவனம் 16 கேமரா லென்ஸ் கொண்ட ஸமார்ட்போனினை உருவாக்கி வருவதாக அந்நிறுவனம் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது. #smartphone



    சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் டூயல் பிரைமரி கேமரா செட்டப் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் தற்போதைய டிரெண்ட் ஆக இருக்கும் நிலையில், சில நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் மூன்று, நான்கு கேமராக்களை வழங்கி வருகின்றன.

    இந்நிலையில், எல்.ஜி. நிறுவனம் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமையில் 16 பிரைமரி கேமரா லென்ஸ் கொண்ட ஸ்மார்ட்போனினை அந்நிறுவனம் உருவாக்க இருப்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. நவம்பர் 20, 2018 தேதியில் எல்.ஜி. நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை பெற்று இருக்கிறது. 



    16 லென்ஸ்களும் ஸ்மார்ட்போனின் பின்புறம் மேட்ரிக்ஸ் வடிவில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த லென்ஸ்கள் வெவ்வேறு பரிணாமங்களை கொண்டிருக்கும் என்றும் இவற்றில் பயனர்கள் தேர்வு செய்யும் லென்ஸ்கள் மட்டும் பயன்படுத்த முடியும். வெவ்வேறு லென்ஸ்களில் எடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்களை ஒன்றிணைத்து அசையும் படமாகவும் மாற்ற முடியும்.

    வெவ்வேறு லென்ஸ்களில் எடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தின் ஒரு பகுதியை மற்ற லென்ஸ்களில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையோ அல்லது புகைப்படத்தின் ஒரு பகுதியை மட்டும் ஒன்றாக இணைக்க முடியும். இதனை பயனர்கள் எப்படி வேண்டுமானாலும் தேர்வு செய்ய முடியும்.



    கேமராக்களின் பின்புறம், கண்ணாடியும் வழங்கப்பட்டுள்ளது, இதனை செல்ஃப்-போர்டிரெயிட் ஃபேஷனாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இதே காப்புரிமையில் ஸ்மார்ட்போனின் பின்புறம் இரண்டாவது டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என்றும் காப்புரிமை விவரங்களில் தெரியவந்துள்ளது.

    எனினும், காப்புரிமை வரைபடங்களில் இரண்டாவது டிஸ்ப்ளே வழங்கப்படுவது குறித்து எவ்வித தகவல்களும் இல்லை. ஸ்மார்ட்போனில் ஸ்பீக்கர் கிரில் பின்புறம் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்பீக்கர் ஸ்மார்ட்போனின் முன்புற ஸ்பீக்கருடன் இணைந்து ஸ்டீரியோ சவுன்ட் வழங்கும்.
    எல்.ஜி. நிறுவனம் உருவாக்கி வரும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான பெயர்களை காப்புரிமை செய்து வருகிறது. #LG #foldablephone
     


    எல்.ஜி. நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்கி வருவதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி வாங் ஜியோங் வான் சமீபத்தில் அறிவித்தார். புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை எல்.ஜி. நிறுவனம் 2019 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    எனினும், இதுவரை எல்.ஜி.யின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் பெயர் அறியப்படாமலே இருந்தது. சமீபத்தில் எல்.ஜி. பதிவு செய்து இருக்கும் காப்புரிமைகளில் எல்.ஜி. நிறுவனம் தனது மடிக்கக்கூடிய மொபைல் போன் மாடல்களில் வழங்க பரிசீலனை செய்து வைத்திருக்கும் பெயர்கள் தெரியவந்துள்ளது.

    எல்.ஜி. எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் ஐரோப்பிய காப்புரிமை அலுவலத்தில் நவம்பர் 21, 2018 தேதியன்று பதிவு செய்யப்பட்டு இருக்கும் காப்புரிமைகளில் புதிய பிரான்டு பெயர்கள் இடம்பெற்றுள்ளது.



    அதன்படி புதிய ஸ்மார்ட்போன்களில் ஃபிளெக்ஸ், ஃபோல்டி மற்றும் டூப்லெக்ஸ் உள்ளிட்ட பெயர்களை சூட்ட இருப்பது தெரியவந்துள்ளது. மூன்று காப்புரிமை விண்ணப்பங்கள் படிவம் 9 என குறிப்பிடப்பட்டு இருப்பதால், இவை ஸ்மார்ட்போன் மாடல்களில் சூட்டப்படுகிறது.  

    எல்.ஜி. நிறுவனம் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட பல்வேறு சாதனங்களை உருவாக்கி வருகிறதா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கு என எல்.ஜி. பதிவு செய்திருந்த பல்வேறு காப்புரிமை விவரங்கள் வெளியாகி இருந்தது. இவை வெவ்வேறு வடிவமைப்புகளை கொண்டிருந்ததால், இறுதி வடிவம் எவ்வாறு இருக்கும் என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. 

    இரண்டு டிஸ்ப்ளேவுடன் டூப்ளெக்ஸ் என்ற பெயரில் எல்.ஜி. நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை பதிவு செய்திருந்தது. டூப்ளெக்ஸ் என்றால் இரண்டு என அர்த்தம் ஆகும். எல்.ஜி. ஃபிளெக்ஸ் மற்றும் எல்.ஜி. ஃபோல்டி பெயர் அடிப்படையில் ஒன்றாக தெரிகிறது, ஃபோல்டி என்றால் மடிக்கக்கூடியதாகும்.

    2014ம் ஆண்டில் எல்.ஜி. நிறுவனம் எல்.ஜி. ஜி ஃபிளெக்ஸ் ஸ்மார்ட்போனினை வளைந்த ஸ்கிரீனுடன் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
    எல்.ஜி. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட் டிஸ்ப்ளே சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. #LG #SmartDisplay



    எல்.ஜி. நிறுவனம் ஒருவழியாக தனது புதிய ஸ்மார்ட் டிஸ்ப்ளே சாதனத்தை அறிமுகம் செய்தது. புதிய சாதனம் எல்.ஜி. எக்ஸ் பூம் ஏ.ஐ. தின்க் WK9 என அழைக்கப்படுகிறது. எல்.ஜி.யின் புதிய ஸ்மார்ட் டிஸ்ப்ளே முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்றும் அதன்பின் மற்ற நாடுகளில் கிடைக்கும்.

    முன்னதாக இந்த சாதனம் ஆகஸ்டு மாதத்தில் நடைபெற்ற ஐ.எஃப்.ஏ. விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட் டிஸ்ப்ளே கூகுள் அசிஸ்டன்ட் வசதியுடன் மெரிடியன் ஆடியோ சவுன்ட் தரம் கொண்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட் டிஸ்ப்ளே கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருப்பதோடு WK9 மாடலில் மெரிடியன் ஆடியோவுடன் கூடிய அதிக துல்லியமான ஆடியோ, குரல் அங்கீகாரம் மற்றும் சிறப்பான பேஸ் உள்ளிட்டவை கொண்டிருக்கிறது.



    5 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் 20 வாட் ஸ்பீக்கர்களை கொண்டிருக்கும் எல்.ஜி. ஸ்மார்ட் டிஸ்ப்ளேவில் 8.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, எல்.ஜி தின்க் வசதி கொண்ட மற்ற சாதனங்களை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் எல்.ஜி. WK9 ஸ்மார்ட் டிஸ்ப்ளே 1.51 கிலோ எடை கொண்டுள்ளது.

    எல்.ஜி. WK9 எக்ஸ் பூம் ஸ்மார்ட் டிஸ்ப்ளே விலை மற்றும் விற்பனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என எல்.ஜி. தெரிவித்துள்ளது. 

    கூகுள் மற்றும் மெரிடியன் ஆடியோவுடனான கூட்டணி மூலம் சிறப்பான ஹோம் என்டர்டெயின்மென்ட் அனுபவத்தை ஸ்மார்ட் வசதிகளுடன் வழங்க முடிகிறது. மற்ற ஏ.ஐ. ஸ்பீக்கர்களை போன்று இல்லாமல், WK9 மாடல் முதல் ஹை ஃபிடிலிட்டி ஆடியோ வசதி கொண்டதாக இருக்கிறது. என எல்.ஜி. ஹோம் என்டர்டெயின்மென்ட் கம்பெனி வியாபார பிரிவு தலைவர் யங்-ஜெ தெரிவித்தார்.
    ×