என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » mwc 2019
நீங்கள் தேடியது "MWC 2019"
பிளாக்பெரி நிறுவனத்தின் கீ1 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #MWC2019 #BlackBerryKey2
பிளாக்பெரி கீ2 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பிளாக்பெரி கீ2 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய ரெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் யூசர் இன்டர்ஃபேஸ் மாற்றப்பட்டிருக்கிறது.
அதன்படி ரெட் எடிஷன் பிளாக்பெரி கீ2 ஸ்மார்ட்போனின் செயலிகள் நவீன தோற்றம் பெற்றிருக்கின்றன. புதிய ஸ்மார்ட்போனின் பக்கவாட்டுகள் மற்றும் முன்புறம் சிவப்பு நிறம் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருப்பதை போன்று கீ2 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போனில் 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஹப் பிளஸ் மென்பொருள் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் ஹப் பிளஸ் செயலிகளின் கீழ் புதிதாக ஆக்ஷன் பார் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது. இதில் பயனர்களுக்கு சர்ச், சார்ட் மற்றும் கம்போஸ் போன்ற அம்சங்களை இயக்க முடியும். இதேபோன்று பிளாக்பெரி ஹப் சேவையின் இன்டர்ஃபேசும் மாற்றப்பட்டுள்ளது.

பிளாக்பெரி கீ2 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. புதிய பிளாக்பெரி கீ2 ரெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை 779 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.63,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக வட அமெரிக்கா, ஐரோப்பியா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா உள்ளிட்ட சந்தைகளில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
புதிய ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு பிளாக்பெரி இயர்பட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பிய பிளாக்பெரி மொபைல் ஆன்லைன் தளத்தில் முன்பதிவு துவங்கி இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #MWC2019 #OnePlus5G
ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டு இயங்கும் தனது முதல் ப்ரோடோடைப் ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது.
ஒன்பிளஸ் ப்ரோடோடைப் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது. ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் மற்றும் குவால்காம் ஆர்.எஃப். தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருக்கிறது.

சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவின் குவால்காம் டெக்னாலஜீஸ் அரங்கில் ஒன்பிளஸ் 5ஜி கிளவுட் கேமிங்கின் எதிர்கால செட்டிங்கை செயல்படுத்தி காண்பித்தது. இதற்கு பயனர்களிடம் ஸ்மார்ட்போன் மற்றும் கேம்பேட் மட்டும் இருந்தாலே போதுமானது. கிளவுட் பிராசசிங் மற்றும் 5ஜி செயல்பாடு மூலம் பயனர்கள் ஆன்லைனில் மிகப்பெரிய கேம்களையும் சீராக விளையாட முடியும்.
ஸ்னாப்டிராகனின் எலைட் கேமிங் அம்சங்கள் மற்றும் ஆப்டிமைசேஷன்களை கொண்டு பயனர்கள் இதுவரை இல்லாத அளவு ஹெச்.டி. தரத்தில் கேமிங் அனுபவத்தை பெற முடியும். ஸ்மார்ட்போனில் 5ஜி சேவையை வழங்க ஒன்பிளஸ் பல்வேறு டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டுள்ளது.
லண்டனில் சீரான 5ஜி சேவையை வழங்கும் நோக்கில் இ.இ. நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக ஒன்பிளஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது.
சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா 10, எக்ஸ்பீரியா 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 #Sony
சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா 10 மற்றும் எக்ஸ்பீரியா 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபிளாக்ஷிப் எக்ஸ்பீரியா 1 மாடலை போன்று இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 21:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட வைடு டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. சோனி எக்ஸ்பீரியா 10 பிளஸ் மாடலில் பெரிய டிஸ்ப்ளே, பேட்டரி, சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சோனி எக்ஸ்பீரியா 10 சிறப்பம்சங்கள்:
- 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 ரக டிஸ்ப்ளே
- ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர்
- 3 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்.பி. வைடு-ஆங்கிள் கேமரா, f/2.0
- 5 எம்.பி. கேமரா, f/2.4
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு பை
- 2870 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

சோனி எக்ஸ்பீரியா 10 பிளஸ் சிறப்பம்சங்கள்:
- 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 21:9 ரக டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர்
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 12 எம்.பி. வைடு-ஆங்கிள் கேமரா, f/1.75
- 8 எம்.பி. கேமரா, f/2.4
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு பை
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
சோனி எக்ஸ்பீரியா 10 ஸ்மார்ட்போன் பிளாக், நேவி புளு, பின்க் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 349.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.24,800) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்பீரியா 10 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு, நேவி புளு, மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 429.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.30,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சோனி நிறுவனம் சினிமா வைடு டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமரா கொண்ட எக்ஸ்பீரியா 1 ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 #Xperia1
சோனி மொபைல் நிறுவனம் தனது எக்ஸ்பீரியா 1 ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது.
சோனியின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் 21:9 சினிமா வைடு 4K ஹெச்.டி.ஆர். டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர், அட்ரினோ 640 கிராஃபிக்ஸ், 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, 16 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ், 26 எம்.எம். ஸ்டான்டர்டு லென்ஸ், 52 எம்.எம். லென்ஸ், 2X ஆப்டிக்கல் சூம் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஸ்மார்ட்போனில் Eye AF மற்றும் 10FPS AF/AE வசதி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை எக்ஸ்பீரியா 1 இருக்கிறது. இதன் சினிமா ப்ரோ சினி ஆல்டா 21:9 தரத்தில் 4K ஹெச்.டி.ஆர். வீடியோக்களை படமாக்கும் திறன் கொண்டிருக்கிறது.

சோனி எக்ஸ்பீரியா 1 சிறப்பம்சங்கள்:
- 6.5 இன்ச் 1644x3840 பிக்சல் 4K OLED ஹெச்.டி.ஆர். டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- சிங்கிள் / டூயல் சிம்
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எக்ஸ்மார் RS சென்சார், 1/2.6″, f/1.6, ஹைப்ரிட் OIS/EIS, 1.4μm, பிரெடிக்டிவ் கேப்ச்சர்
- 12 எம்.பி. கேமரா, f/2.4,1/3.4″ 1.0μm 135° அல்ட்ரா வைடு-ஆங்கிள்
- 12 எம்.பி. கேமரா, f/2.4 aperture 1/3.4″ 1.0μm 45° டெலிபோட்டோ லென்ஸ், ஹைப்ரிட் OIS/EIS, 2x ஆப்டிக்கல் சூம்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, 1/ 4″ எக்ஸ்மார் RS சென்சார், f/2.0, 1.12μm, 84° வைடு ஆங்கிள் லென்ஸ்
- யு.எஸ்.பி. டைப்-சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர், DSEE HX, LDAC, டால்பி அட்மாஸ்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP65/IP68)
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- Qnovo அடாப்டிவ் சார்ஜிங் தொழில்நுட்பம்
- குவால்காம் க்விக் சார்ஜ் 3.0
- Qi வயர்லெஸ் சார்ஜிங்
சோனி எக்ஸ்பீரியா 1 ஸ்மார்ட்போன் பிளாக், பர்ப்பிள், கிரே மற்றும் வைட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 799 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.74,270) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டி.சி.எல். நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த புதுவித தொழில்நுட்பத்தை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 #TCL
டி.சி.எல். கம்யூனிகேஷன் நிறுவனம் காப்புரிமை பெற்ற தனது டிராகன்ஹின்ஜ் தொழில்நுட்பத்தை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது.
இத்துடன் அந்நிறுவனம் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட சாதனத்தையும் அறிமுகம் செய்தது. டி.சி.எல். மடிக்கக்கூடிய மொபைல் சாதனங்களில் மடிக்கக்கூடிய AMOLED டிஸ்ப்ளேக்களை பயன்படுத்த இருக்கிறது. இந்த டிஸ்ப்ளேக்களை சிசாட் எனும் நிறுவனம் வழங்குகிறது.

இந்நிறுவனம் டி.சி.எல். கம்யூனிகேஷன் நிறுவன குழுமத்தை சேர்ந்தது. சிசாட் தற்சமயம் உருவாக்கி இருக்கும் டிராகன் ஹின்ஜ் தொழில்நுட்பம் சாதனங்களை பல்வேறு விதங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ப மடிக்கவும், வளைக்கவும் முடியும். இது எதிர்கால மடிக்கக்கூடிய சாதனங்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இருக்கும் என தெரிகிறது.
டி.சி.எல். கம்யூனிகேஷன் நிறுவனம் தனது முதல் டிராகன் ஹின்ஜ் கான்செப்ட் கொண்ட சாதனங்களை வரும் நாட்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதைத்தொடர்ந்து நுகர்வோர் பயன்படுத்தக்கூடிய மடிக்கக்கூடிய சாதனங்களை 2020 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய டி.சி.எல். திட்டமிட்டுள்ளது.
எல்.ஜி. நிறுவனம் தனது வி50 தின்க் 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 #LGV50ThinQ5G
எல்.ஜி. நிறுவனம் ஜி8 தின்க் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் வி50 தின்க் 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. இது எல்.ஜி.யின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும்.
எல்.ஜி. வி50 தின்க் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 மற்றும் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனினை அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேப்பர் சேம்பர் சார்ந்து இயங்கும் வெப்பத்தை குறைக்கும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய வி50 தின்க் 5ஜி ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் QHD+ OLED ஸ்கிரீன், மூன்று பிரைமரி கேமராக்கள், 16 எம்.பி. 107-டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள், 12 எம்.பி. ஸ்டான்டர்டு மற்றும் 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் 2X ஆப்டிக்கல் சூம் வசதியுடன் வழங்கப்படுகிறது. செல்ஃபிக்களை எடுக்க முன்புறம் 8 எம்.பி. 3D ToF செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
5ஜி ஸ்மார்ட்போனுடன் எல்.ஜி. நிறுவனம் டூயல் ஸ்கிரீன் சாதனம் ஒன்றையும் வழங்கியிருக்கிறது. இது ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் OLED 2160x1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளேவை சேர்த்துக் கொள்ளும் வசதியை வழங்குகிறது. இது ஸ்மார்ட்போனுடன் போகோ பின் மூலம் இணைந்து கொள்கிறது.

எல்.ஜி. வி50 தின்க் சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 3120x1440 பிக்சல் 19.5:9 ஃபுல்விஷன் OLED டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம்
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9 பை
- 12 எம்.பி. பிரமரி கேமரா, f/1.5, 1.4µm, 78° லென்ஸ்
- 16 எம்.பி. சூப்பர் வைடு கேமரா, f/1.9, 1.0µm, 107° லென்ஸ்
- 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4, 1.0µm, 45° லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.8, 1.22μm, 80° லென்ஸ்
- 5 எம்.பி. இரண்டாவது கேமரா, f/2.2, 1.12μm, 90˚ லென்ஸ்
- கைரேகை சென்சார்
- வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 32-பிட் மேம்பட்ட ஹை-ஃபை குவாட் DAC
- DTS: X 3D சரவுண்ட் சவுண்ட், பூம்பாக்ஸ் ஸ்பீக்கர் மற்றும் ஸ்டீரியோ
- 5ஜி, 4ஜி, வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி 2.0
- 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- குவால்காம் க்விக் சார்ஜ் 3.0
எல்.ஜி. வி50 தின்க் ஸ்மார்ட்போன் ஆஸ்ட்ரோ பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. அமெரிக்கா, தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 5ஜி சேவையை வழங்க எல்ஜி. பல்வேறு டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறது.
சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் எல்.ஜி. நிறுவனம் எல்.ஜி. ஜி8 தின்க் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் மூன்று பிரைமரி கேமராக்கள், ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. #MWC2019 #LGG8ThinQ
எல்.ஜி. நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் தனது ஜி8 தின்க் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஜி8 தின்க் ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமராக்கள், 16 எம்.பி. 107-டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள், 12 எம்.பி. ஸ்டான்டர்டு மற்றும் 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் 2X ஆப்டிக்கல் சூம் வசதியுடன் வழங்கப்படுகிறது.
முன்புறம் 3D ToF செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது செல்ஃபிக்களில் மிகத் துல்லியமாக பிரதிபலிக்க அதிகளவு டெப்த் வழங்க உதவும். இத்துடன் மேம்பட்ட பாதுகாப்பு வழங்க ஹேண்ட் ஐ.டி. மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்தவரை ஏர் மோஷன் மூலம் அழைப்புகளை ஏற்கவும், நிராகரிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

எல்.ஜி. ஜி8 தின்க் சிறப்பம்சங்கள்:
- 6.1 இன்ச் 3120x1440 பிக்சல் 19.5:9 ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9 பை
- 12 எம்.பி. பிரமரி கேமரா, f/1.5, 1.4µm, 78° லென்ஸ்
- 16 எம்.பி. சூப்பர் வைடு கேமரா, f/1.9, 1.0µm, 107° லென்ஸ்
- 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4, 1.0µm, 45° லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.7, 1.22μm, 80° லென்ஸ், 3D ToF சென்சார்
- கைரேகை சென்சார்
- 3D ஃபேஸ் அன்லாக்
- வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 32-பிட் மேம்பட்ட ஹை-ஃபை குவாட் DAC
- DTS: X 3D சரவுண்ட் சவுண்ட், பூம்பாக்ஸ் ஸ்பீக்கர் மற்றும் ஸ்டீரியோ வசதி
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி (2.0)
- 3,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- குவால்காம் க்விக் சார்ஜ் 3.0

எல்.ஜி. ஜி8எஸ் தின்க் சிறப்பம்சங்கள்:
- 6.2 இன்ச் 2248x1080 பிக்சல் 19.5:9 FHD பிளஸ் ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9 பை
- 12 எம்.பி. பிரமரி கேமரா, f/1.5, 1.4µm, 78° லென்ஸ்
- 13 எம்.பி. சூப்பர் வைடு கேமரா
- 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4, 1.0µm, 45° லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.7, 1.22μm, 80° லென்ஸ், 3D ToF சென்சார்
- கைரேகை சென்சார்
- 3D ஃபேஸ் அன்லாக்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப்-சி (2.0)
- 3550 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- குவால்காம் க்விக் சார்ஜ் 3.0
எல்.ஜி. ஜி8 தின்க் ஸ்மார்ட்போன் கார்மைன் ரெட், நியூ அரோரா பிளாக் மற்றும் நியூ மொராக்கன் புளு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை மார்ச் மாதம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் ஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #Nokiamobile #MWC19
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஐந்து புதிய மொபைல் போன்களை அறிமுகம் செய்தது. இதில் நோக்கியா 9 பியூர் வியூ மற்றும் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் விலையை தொடர்ந்து பார்ப்போம்.
இதில் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் ஐந்து பிரைமரி கேமரா செட்டப் கொண்டிருக்கிறது. நோக்கியாவின் புதிய ஃபிளாக்ஷிப் மாடலாக உருவாகி இருக்கும் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

நோக்கியா 9 பியூர் வியூ சிறப்பம்சங்கள்:
- 5.99 இன்ச் 2560x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. pOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 630 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள், f/1.82, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP67)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3320 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்
- வயர்லெஸ் சார்ஜிங்
நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 699 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.49,650) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா 4.2 சிறப்பம்சங்கள்:
- 5.71 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
- 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்.பி. பிரமரி கேமரா, F2.2/1.12µm பிக்சல்
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, F2.2/1.75µm பிக்சல் 2 பேஸ் டிடெக்ஷன் மற்றும் பிளாஷ்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, F2.0/1.12µm பிக்சல்
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- கைரேகை சென்சார்
- கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
- வைபை, வோல்ட்இ, ப்ளூடூத்
நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் சிக்னேச்சர் சேண்ட் பின்க் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 169 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,005) முதல் துவங்குகிறது.
சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் பட்ஜெட் விலையில் மூன்று புதிய நோக்கியா மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 # #Nokiamobile
பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் புதிய நோக்கியா மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது.
நோக்கியாவின் புதிய மொபைல்களான நோக்கியா 1 பிளஸ், நோக்கியா 3.2 மற்றும் நோக்கியா 210 மாடல்கள் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கிறன.

நோக்கியா 1 பிளஸ் சிறப்பம்சங்கள்:
- 5.45 இன்ச் FWVGA+ IPS டிஸ்ப்ளே
- குவாட்கோர் மீடியாடெக் MT6739WW பிராசஸர்
- 1 ஜி.பி. ரேம்
- 8 ஜி.பி. மெமரி
- 8 எம்.பி. பிரைமரி கேமரா, ஃபிளாஷ்
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 9 பை (கோ எடிஷன்)
- 2500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- மைக்ரோ யு.எஸ்.பி.
நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போன் ரெட், புளு மற்றும் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.7,030) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா 3.2 சிறப்பம்சங்கள்:
- 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் TFT LCD ஸ்கிரீன், செல்ஃபி நாட்ச்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட்
- 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, F2.2/1.12µm
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா, F2.2/1.12µm
- பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- வோ-வைபை, ப்ளூடூத் 4.2, வைபை
- ஆண்ட்ராய்டு 9 பை
- மைக்ரோ யு.எஸ்.பி.
- ஃபேஸ் அன்லாக்
- கைரேகை சென்சார் (32 ஜி.பி. மெமரி மாடலில் மட்டும்)
நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஸ்டீல் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை 139 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.9,873) என்றும் 3 ஜி.பி. ரேம் வெர்ஷனின் விலை 169 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,005) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா 210 சிறப்பம்சங்கள்:
- 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே
- மீடியாடெக் MT6260A பிராசஸர்
- வி.ஜி.ஏ. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 16 எம்.பி. இன்டெர்னல் மெமரி
- எஃப்.எம். ரேடியோ
- எம்.பி.3 பிளேயர்
- ஃபேஸ்புக், ஸ்நேக் கேம்
- செயலிகளை டவுன்லோடு செய்ய ஆப் ஸ்டோர்
- டூயல் சிம் ஸ்லாட்
- 1020 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்
நோக்கியா 210 மொபைல் போன் சார்கோல், ரெட் மற்றும் கிரே என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 35 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.2,480) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.