என் மலர்

  தொழில்நுட்பம்

  உலகின் அதிவேக மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த ஹூவாய்
  X

  உலகின் அதிவேக மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த ஹூவாய்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹூவாய் நிறுவனம் உலகின் அதிவேக மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது. #MWC2019 #ConnectingTheFuture  ஹூவாய் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் உலகின் அதிவேக மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

  ஹூவாயின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மேட் எக்ஸ் என அழைக்கப்படுகிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் டூயல்-ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்தவரை ஹூவாயின் மேட் எக்ஸ் உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் அதிவேக மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. 

  ஸ்மார்ட்போனின் பின்புறம் இருக்கும் இரண்டாவது டிஸ்ப்ளேவை கொண்டு பிரைமரி கேமரா மூலம் செல்ஃபி எடுக்க முடியும். 8 ஜி.பி. ரேம் மற்றும் 512 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் நாட்ச் போன்ற இடையூறின்றி ஃபுல் டிஸ்ப்ளே அனுபவத்தை வழங்குகிறது. 

  மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் 6.6 இன்ச் (2480x1148 பிக்சல்) மெயின் டிஸ்ப்ளேவும், ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் 8-இன்ச் மெயின் டிஸ்ப்ளே (2480x2200 பிக்சல்), ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் பின்புறம் 6.4 இன்ச் (25:9. 2480x892 பிக்சல்) டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.  ஹூவாய் தனது மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் உலகில் முதன் முறையாக 7 என்.எம். 5ஜி மல்டி-மோட் மோடெம் வழங்கி இருக்கிறது. இத்துடன் பலோங் 5000 பிளஸ் கிரின் 980 பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் ஹூவாயின் நானோ மெமரி கார்டுகளை சப்போர்ட் செய்கிறது.

  ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் வெறும் 11 எம்.எம். அளவு தடிமனாக இருக்கிறது. அதிவேக 5ஜி வசதியை வழங்கும் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

  இத்துடன் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனில் 55 வாட் ஹூவாய் சூப்பர் சார்ஜ் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனினை வெறும் 30 நிமிடங்களில் 85 சதவிகிதம் அளவு சார்ஜ் செய்துவிடும். இத்துடன் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் இருக்கும் பவர் பட்டனிலேயே கைரேகை சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது.  ஹூவாய் மேட் எக்ஸ் சிறப்பம்சங்கள்:

  - மடிக்கப்பட்ட நிலையில் 6.6 இன்ச் 2480x1148 பிக்சல் மெயின் டிஸ்ப்ளே
  - திறக்கப்பட்ட நிலையில் 8.0 இன்ச் 2480x2200 பிக்சல் மெயின் டிஸ்ப்ளே 
  - மடிக்கப்பட்ட நிலையில் பின்புறம் 6.4 இன்ச் 25:9. 2480x892 பிக்சல் டிஸ்ப்ளே
  - 7 என்.எம். 5ஜி மல்டி-மோட் மோடெம்
  - பலோங் 5000 பிளஸ் கிரின் 980 பிராசஸர்
  - 8 ஜி.பி. ரேம்
  - 512 ஜி.பி. மெமரி
  - டூயல் சிம் ஸ்லாட்
  - 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  - 55 வாட் ஹூவாய் சூப்பர் சார்ஜ் வசதி
  - கைரேகை சென்சார்

  ஹூவாய் நிறுவனம் தனது மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனினை இன்டர்ஸ்டெலார் புளு என ஒற்றை நிறத்தில் கிடைக்கிறது. 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை 2229 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1,79,579) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×