search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    புகைப்படம் நன்றி: LetsGoDigital
    X
    புகைப்படம் நன்றி: LetsGoDigital

    எல்.ஜி. எதிர்கால ஸ்மார்ட்வாட்ச்களில் இந்த அம்சம் நிச்சயம் இருக்கும்

    எல்.ஜி. நிறுவனம் சார்பில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் காப்புரிமைகளில் அந்நிறுவனம் தனது எதிர்கால ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் இந்த அம்சத்தை வழங்க இருப்பது தெரியவந்துள்ளது. #LG #smartwatch



    ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா வழங்கும் வழக்கத்தை சாம்சங் நிறுவனம் தான் துவங்கியது. சாம்சங்கின் முதல் கியர் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் அந்நிறுவனம் கேமராவினை வழங்கியது, எனினும் அதன்பின் சாம்சங் அறிமுகம் செய்த ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா வழங்கப்படவில்லை.

    இந்நிலையில், எல்.ஜி. நிறுவனம் தனது எதிர்கால ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா வழங்க இருப்பது பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. எல்.ஜி. நிறுவனம் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமைகளில் அந்நிறுவனம் தனது எதிர்கால ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா வழங்க இருப்பது தெரியவந்துள்ளது.



    அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில் எல்.ஜி. பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில், அந்நிறுவனம் தனது ஸ்மார்ட்வாட்ச்களில் கேமராக்களை எவ்வாறு வழங்கும் என்பது பற்றி பல்வேறு வடிவமைப்புகள் இடம்பெற்றிருந்தன. புதிய ஸ்மார்ட்வாட்ச்களில் கேமரா மட்டுமின்றி, மொபைல் டெர்மினல் வசதி வழங்கப்பட்டிருப்பதால் இதில் செல்லுலார் கனெக்டிவிட்டி அம்சமும் வழங்கப்படலாம்.

    புகைப்படங்கள் எடுக்கப்படுவதை எளிமையாக்கும் வகையில், கேமராவினை ஸ்மார்ட்வாட்ச்சில் புகுத்தும் பணிகளில் எல்.ஜி. ஈடுபட்டுள்ளது. இந்த காப்புரிமைகளில் இது எவ்வாறு சாத்தியமாகும் என்பதை விளக்கும் வரைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவ்வாறு ஸ்மார்ட்வாட்ச்சில் ரிஸ்ட் பேண்ட்-ஐ மாற்றக்கூடிய வகையில், எளிமையாக கேமரா கோணத்தை மாற்ற முடியும்.

    அடுத்ததாக வாட்ச் பேண்ட் மாடலில் கேமராவினை இணைக்கும் மெட்டல் லின்க் காணப்படுகிறது. மூன்றாவதாக வாட்ச் பேண்ட் முழுக்க பயனர் விரும்பும் இடத்தில் ஸ்ப்ரிங் க்ளிக் ஒன்றை இணைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுவதை போன்று காட்சியளிக்கிறது. 


    ஸ்மார்ட்ச்களில் கேமரா வழங்குவதன் மூலம் பயனர்கள் உட்கொள்ளும் உணவுகளை புகைப்படம் எடுத்து அதன் கலோரி அளவுகளை கணக்கிட முடியும், க்யூ.ஆர். கோடு ஸ்கேன் செய்து ஷாப்பிங் மற்றும் இதர இடங்களில் பயன்படுத்தலாம்.

    எல்.ஜி. புதிய அம்சத்தை வழங்குவதற்கான காப்புரிமைகளை மட்டுமே பதிவு செய்திருக்கும் நிலையில், உண்மையில் இந்த சாதனம் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
    Next Story
    ×