search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "7 dead"

    மேற்கு வங்காளத்தில் விஷ சாராயம் குடித்த பழங்குடி இனத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Liquor #WestBengal
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள சாந்திப்பூர் என்கிற பகுதியில் வசித்து வரும் பழங்குடி இனத்தை சேர்ந்த பலர் நேற்று முன்தினம் இரவு விஷ சாராயம் குடித்தனர். அடுத்து சில மணி நேரங்களில் அவர்களுக்கு வாந்தி, பேதி போன்ற உபாதைகள் ஏற்பட்டது.

    உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 60 வயது மூதாட்டி ஒருவர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 4 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர்.
    பாகிஸ்தானில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். #PakistanViolence #CricketDispute
    பெஷாவர்:

    பாகிஸ்தானில் வன்முறைகள் நிறைந்த கைபர் பாக்துன்க்வா மாகாணத்தின் அபோதாபாத் மாவட்டத்தில் நேற்று சிறுவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து கிரிக்கெட் விளையாடியபோது அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டை அவர்களின் பெற்றோர்களின் காதுக்கு எட்ட, அவர்கள் காவல் உதவி மையம் அருகே திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரிடையே கடும் மோதல் வெடித்தது.

    அப்போது இரு தரப்பினரும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.

    காவல் உதவி மையம் அருகில் நடந்த இந்த மோதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #PakistanViolence #CricketDispute
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் திடீரென பாறைகள் உருண்டு விழுந்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் சியார் பாபா எனும் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி பிரபலமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.

    இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அந்த நீர்வீழ்ச்சியில் திரண்டனர். அவர்கள் அனைவரும் அருவியில் உற்சாகமாக நீராடிக் கொண்டிருந்தனர்.

    அந்த சமயத்தில் திடீரென மலை உச்சியில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்தன. இதில் சிக்கி சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் மேலும் 30 பேர் காயமடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர்.

    பாறைகள் விழுந்து உயிரிழந்தவர்கள் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மேலும், அங்கு பாறைகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஊட்டி அருகே 500 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். #OotyAccident
    ஊட்டி:

    ஊட்டியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு அரசு பஸ் இன்று காலை குன்னூருக்கு புறப்பட்டது. பஸ் மதியம் 12 மணியளவில் ஊட்டி அருகே உள்ள மந்தாடா என்ற பகுதியில் வந்தது.



    அப்போது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த 500 அடி பள்ளத்தில் பஸ் உருண்டு கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் காயம் அடைந்து அலறிதுடித்தனர்.

    இதுபற்றி தெரியவந்ததும் நீலகிரி மாவட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் கிடுகிடு பள்ளத்தில் கீழே இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 ஆண்கள், 1 பெண் உள்பட 4 பேர் இறந்து கிடந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துடன் அலறினர். அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.

    இதனால் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. அவர்கள் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. காயம் அடைந்த 15-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. விபத்தில் பஸ் உருக்குலைந்ததாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் காயம் அடைந்த சிலரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    மேலும் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மலைபாதையில் மண் உறுதிதன்மை இழந்து காணப்படுகிறது. எனவே வளைவு பாதையில் பஸ்சை திருப்பியபோது உறுதிதன்மை இல்லாத மண் சறுக்கி பஸ் பள்ளத்தில் விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனங்களை மெதுவாக இயக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. #OotyAccident
    ×