என் மலர்
நீங்கள் தேடியது "ரெட்மி"
- ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.17,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5110mAh பேட்டரியை வழங்கியுள்ளது.
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, ரெட்மி நோட் 14 5ஜி விலை குறைக்கப்பட்டுள்ளது. இது ரெட்மி நோட் 15 சீரிசின் இந்திய வெளியீட்டுக்கு முன் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ரெட்மி நோட் 15 சீரிஸ் வருகிற ஜனவரி 6ஆம் தேதி அறிமுகமாகும் என்று சியோமி உறுதிப்படுத்தியது.
நாட்டில் தனது சந்தைப் பங்கை வளர்த்துக் கொள்ளும் நோக்கில் சியோமி நிறுவனத்திற்கு இது ஒரு முக்கியமான ஸ்மார்ட்போன் சீரிசாக இருக்கும்.
புதிய விலை விவரங்கள்:
ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.17,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 2024ஆம் ஆண்டில் ரெட்மி நோட் 14 5ஜி சீரிசின் ஆரம்ப விலையாகும். தற்போது, இந்த விலை ரூ.1,500 குறைக்கப்பட்டு ரூ.16,499 ஆக மாறியுள்ளது.
இத்துடன் HDFC வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் போது, நீங்கள் ரூ.1,000 கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,499 ஆகக் குறையும். இவைதவிர மாத தவணை சலுகைகளும் உள்ளன. பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனினை சியோமி இந்தியா வலைத்தளத்தில் இருந்து நேரடியாக வாங்கலாம்.
அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், இந்த ஸ்மார்ட்போன் அதன் பிரிவில் அதிக பிரைட்னஸ் கொண்டிருந்தது. இத்துடன் சோனி நிறுவனத்தின் மூன்று கேமரா சென்சார்களை கொண்டிருந்தது. இதில் 50MP சோனி பிரைமரி கேமரா, 8MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்கு, முன்புறத்தில் 20MP சென்சார் உள்ளது.
இந்த நிறுவனம் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5110mAh பேட்டரியை வழங்கியுள்ளது. பாதுகாப்பிற்காக, திரையின் மேல் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7025 பிராசஸரால் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சியோமியின் ஹைப்பர்ஓஎஸ் கொண்டிருக்கிறது.
- ரெட்மி நோட் 15 5ஜி மாடலில் 108MP பிரைமரி கேமரா கொண்டுள்ளது.
- நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் மட்டும் 2MP மேக்ரோ லென்ஸ் உள்ளது.
ரெட்மி நிறுவனம், ரெட்மி நோட் 15 5ஜி, நோட் 15 ப்ரோ 5ஜி மற்றும் நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி ஆகியவற்றை போலந்தில் அறிமுகம் செய்தது. இதன் மூலம் புதிய நோட் 15 சீரிஸ் உலகளவில் வெளியாகியுள்ளது. இவை பிரகாசமான AMOLED டிஸ்ப்ளே, பெரிய சிலிக்கான்-கார்பன் பேட்டரிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா கொண்டுள்ளன.
புதிய நோட் 15 5ஜி மாடலில் 6.77-இன்ச் AMOLED FHD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது. நோட் 15 ப்ரோ மற்றும் நோட் 15 ப்ரோ பிளஸ் ஆகியவை அதிகரித்த பிரைட்னஸ் மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 உடன் சற்றே பெரிய 6.83-இன்ச் CrystalRes பேனல்களுடன் வருகின்றன. மூன்று மாடல்களிலும் 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதியுடன் வருகின்றன.
இத்துடன் நோட் 15 மாடலில் IP65 ரேட்டிங், நோட் 15 ப்ரோ மற்றும் நோட் 15 ப்ரோ பிளஸ் மாடல்களில் IP68 ரேட்டிங் உடன் வருகின்றன. நோட் 15 5ஜி 4nm ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 பிராசஸர் பயன்படுத்துகிறது. நோட் 15 ப்ரோ உலகளவில் மீடியாடெக் டிமென்சிட்டி 7400 அல்ட்ரா பிராசஸருடன் வருகிறது. நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 4 சிப் பயன்படுத்துகிறது. ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் 12 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.
பேட்டரியை பொருத்தவரை ரெட்மி நோட் 15 மாடலில் 5,520mAh, நோட் 15 ப்ரோ மாடலில் 6,580mAh மற்றும் நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் 100W சார்ஜிங் கொண்ட 6,500 mAh யூனிட் வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க ரெட்மி நோட் 15 5ஜி மாடலில் 108MP பிரைமரி கேமரா கொண்டுள்ளது. ரெட்மி நோட் 15 ப்ரோ மற்றும் நோட் 15 ப்ரோ பிளஸ் மாடல்களில் 4x ஆப்டிகல் ஜூம் கொண்ட 200MP சென்சார்களை கொண்டிருக்கின்றன. மூன்று மாடல்களிலும் 8MP அல்ட்ரா-வைடு கேமரா உள்ளது. நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் மட்டும் 2MP மேக்ரோ லென்ஸ் உள்ளது.
மூன்று மாடல்களும் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 2 கொண்டிருக்கிறது. இத்துடன் கூகுள் ஜெமினி AI சப்போர்ட் உள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை 5ஜி, வைபை 6E, ப்ளூடூத், NFC, GPS/GLONASS/Galileo/BeiDou, IR பிளாஸ்டர் மற்றும் யுஎஸ்பி சி கொண்டிருக்கின்றன.
- இத்துடன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படலாம்.
- ரெட்மி நோட் 15 5ஜி சீரிசுடன், சியோமி நிறுவனம் உலகளவில் சியோமி 17சீரிசையும் அறிமுகப்படுத்தலாம்.
ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிறுவனம் தற்போது புதிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தியுள்ளது. சியோமி சமீபத்தில் தனது ரெட்மி 15C ஸ்மார்ட்போனினை ரூ.11,999 விலையில் அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது ரெட்மி நோட் 15 5ஜி சீரிசை இந்திய சந்தையில் கொண்டுவர இருக்கிறது. ரெட்மி நோட் 15 சீரிஸ் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 15 5ஜி சீரிஸ் இந்தியாவில் ஜனவரி 6ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 108MP பிரைமரி கேமரா வழங்கப்படலாம். இந்த சீரிசில் ஸ்டான்டர்டு ரெட்மி நோட் 15 மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ, நோட் 15 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது.
இவற்றில் ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6s Gen 3 பிராசஸர் மூலம் இயக்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படலாம். ரெட்மி நோட் 15 5ஜி சீரிசுடன், சியோமி நிறுவனம் உலகளவில் சியோமி 17சீரிசையும் அறிமுகப்படுத்தலாம்.
சியோமி 17 மற்றும் சியோமி 17 அல்ட்ரா ஆகிய மாடல்கள் 2026 ஆம் ஆண்டில் உலகளவில் சியோமி அறிமுகம் செய்ய இருக்கும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இந்த ஸ்மார்ட்போன்கள் தலைசிறந்த பிராசஸர், அதிநவீன கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.
- பேட்டரிகளை 50 சதவீதம் சலுகையில் மாற்றிக் கொள்ளலாம்.
- ஆகஸ்ட் 30ஆம் தேதி வரைதான் இந்த சலுகை வழங்கப்படும்.
இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி முக்கிய இடம் வகித்து வருகிறது. குறைந்த பட்ஜெட் விலையில் கிடைப்பதால் அதிக அளவில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. ரெட்மி ஸ்மார்ட்போனை தயாரிக்கும் நிறுவனம் சியோமி (Xiaomi) ஆகும்.
இந்த நிறுவுனம் ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு50 சதவீதம் தள்ளுபடியில் பேட்டரி மாற்றித் தரப்படும். ஆகஸ்ட் 25 முதல் 30ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் இச்சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என சியோமி அறிவித்துள்ளது.
பராமரிப்பு மற்றும் இணைப்பு சேவை வாரம் என்ற பெயரில் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.
- ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 பிரசஸரால் இயக்கப்படுகிறது.
- 45W அதிவேக சார்ஜிங்குடன் 5800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
ரெட்மி நோட் 15 ப்ரோ சீரிசுடன் , சியோமி நிறுவனம் தனது ஸ்டான்டர்டு ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 120Hz ரிப்ரெஷ் ரேட் உடன் கூடிய 6.77-இன்ச் FHD+ OLED ஸ்கிரீன், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 7.35 மிமீ அளவில் மிக மெல்லிய டிசைன் கொண்டுள்ளது.
இத்துடன் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 பிரசஸரால் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம் கொண்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் மற்றும் 8MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் IP66 தரச்சான்று பெற்ற டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.
மேலும், 45W அதிவேக சார்ஜிங்குடன் 5800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சியோமி ஹைப்பர் ஓஎஸ் 2 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.1, GPS + GLONASS, யுஎஸ்பி டைப் சி, NFC வழங்கப்பட்டுள்ளது.
புதிய ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஸ்கை புளூ மற்றும் ஸ்டார் ஒயிட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 12,145 (தோராயமாக) என தொடங்குகிறது.
- மேல், வலது மற்றும் இடது விளிம்புகளில் சமமான பெசல்களைக் கொண்டதாகத் தெரிகிறது.
- செவ்வக கேமரா ஐலேண்ட் பின்புற பேனலின் மற்ற பகுதிகளை விட சற்று உயரமாக உள்ளது.
சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி 15 பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனாக உருவாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில், ரெட்மி 15 ஸ்மார்ட்போன் தொடர்பாக கசிந்த ரெண்டர்களில் புது தகவல்கள் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக டிப்ஸ்டர் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களின்படி, இந்த ஸ்மார்ட்போன் மூன்று வண்ண விருப்பங்களில் வரக்கூடும். ரெட்மி 15 ஸ்மார்ட்போன் மூன்று கேமரா அமைப்புடன் வரும் என்று தெரிகிறது. ரெட்மி பிராண்ட் சமீபத்தில் அதன் வலைத்தளத்தில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை வெளியிட்டது. அதன்படி விரைவில் ரெட்மி 15 மற்றும் ரெட்மி 15C ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.
வடிவமைப்பு, அம்சங்கள்:
ரெட்மி 15 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் ஆர்சீன் லூபின் என்ற டிப்ஸ்டரால் கசிந்துள்ளன. இதிலுள்ள முதல் ரெண்டர் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே காட்டுகிறது. இது மேல், வலது மற்றும் இடது விளிம்புகளில் சமமான பெசல்களைக் கொண்டதாகத் தெரிகிறது.
டிப்ஸ்டர் பகிர்ந்துள்ள மற்ற மூன்று ரெண்டர்களில், ரெட்மி 15 ஸ்மார்ட்போன் பர்பில், கோல்டு மற்றும் பிளாக் என மூன்று வண்ணங்களில் இருப்பதை காட்டுகின்றன. ரெட்மி 15 ஸ்மார்ட்போனின் மூன்று ரெண்டர்களிலும், பின்புற பேனலின் மேல் இடது மூலையில் அமைந்துள்ள மூன்று பின்புற கேமரா அமைப்பையும் காணலாம்.
இந்த கேமராக்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளன. மேலும் முதல் கேமரா வளையத்தின் வலதுபுறத்தில் ஒரு LED ஃபிளாஷ் அமைந்துள்ளது. செவ்வக கேமரா ஐலேண்ட் பின்புற பேனலின் மற்ற பகுதிகளை விட சற்று உயரமாக உள்ளது.
இதுதவிர இத்தாலிய சில்லறை விற்பனையாளரின் வலைத்தளத்தில் ரெட்மி 15 ஸ்மார்ட்போனிற்கான பட்டியலில், இந்த மாடல் 4ஜி வெர்ஷனை கொண்டுள்ளது என்றும் இது 6.9-இன்ச் LCD ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இத்துடன் 108MP பிரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 2 கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியை வழங்கும் IP64 தரச்சான்று பெற்றிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ரெட்மி 15 அறிமுகத்தை நிறுவனம் வெளிப்படையாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், சமீபத்தில் நாட்டில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களின் வருகையை அறிவித்தது.
- 50MP பிரதான OIS கேமரா, அதனுடன், 8MP அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளது.
- 90W வேகமான வயர்டு சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் சார்ஜிங்கையும் கொண்டுள்ளது.
சியோமி ரெட்மி நிறுவனம், சக்திவாய்ந்த பேட்டரியுடன் கூடிய ரெட்மி டர்போ 4 ப்ரோ என்ற புதிய மாடலை வெளியிட்டுள்ளது .
இது 16 ஜிபி ரேம் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 4 செயலி போன்ற சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த ரெட்மி போனின் பின்புறத்தில் ஐபோன் 16 போன்ற கேமரா வடிவமைப்பு உள்ளது.
இந்த ரெட்மி போன் 6.83-இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த போன் Qualcomm Snapdragon 8s Gen 4-இல் இயங்குகிறது. 16GB LPDDR5X ரேம் மற்றும் 1TB வரை சேமிப்பு உள்ளது. 50MP பிரதான OIS கேமரா, அதனுடன், 8MP அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளது.
இந்த ரெட்மி போனில் 7,550mAh பெரிய பேட்டரி உள்ளது. இது 90W வேகமான வயர்டு சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் சார்ஜிங்கையும் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஹைப்பர் ஓஎஸ் உடன் வருகிறது.
ரெட்மி டர்போ 4 ப்ரோ நான்கு சேமிப்பு வகைகளில் கிடைக்கிறது. – 12 ஜிபி ரேம் + 256 ஜிபி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி, 16 ஜிபி ரேம் + 1 டிபி.
இதன் தொடக்க விலை 2199 சீன யுவான் (தோராயமாக ரூ. 25,700). அதே நேரத்தில், அதன் உயர் வகையின் விலை 2,999 யுவான் (ரூ. 35,100).
இந்த ஸ்மார்ட்போனை கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் வாங்கலாம். தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மாடல் விரைவில் இந்திய சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சியோமி நிறுவனம் கடந்த வாரம் ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது.
- புதிய ரெட்மி நோட் 12 சீரிஸ் இந்திய வெளியீடு பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இத்துடன் புதிய ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டன. ரெட்மி நோட் 12 சீரிசில் ரெட்மி நோட் 12 டிஸ்கவரி எடிஷன், ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி, ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி போன்ற மாடல்கள் இடம்பெற்று இருந்தன.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் போக்கோ பிராண்டிங்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 12 5ஜி மாடலில் உள்ளதை போன்ற அம்சங்கள் கொண்ட போக்கோ ஸ்மார்ட்போன் இந்த மாதமே இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

இதுதவிர ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி மற்றும் நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி போன்ற மாடல்கள் சியோமி 12i மற்றும் சியோமி 12i ஹைப்பர்சார்ஜ் பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் 22111317PI மாடல் நம்பர் கொண்ட போக்கோ ஸ்மார்ட்போன் பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 12 5ஜி மாடல் 22101317C எனும் மாடல் நம்பர் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இது M17 எண்ணின் சுருக்கப்பட்ட வடிவம் ஆகும். இதே போன்று புதிய போக்கோ சாதனத்தின் சுருக்கப்பட்ட வடிவம் M17 ஆகும். அந்த வகையில் புது போக்கோ ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 12 5ஜி-யின் ரிபிராண்டு செய்யப்பட்ட மாடல் என கூறப்படுகிறது.
- இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக சியோமி விளங்குகிறது.
- இந்தியாவில் ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களை சியோமி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் களமிறங்கி டிசம்பர் 01 ஆம் தேதியுடன் எட்டு ஆண்டுகள் நிறைவு செய்தது. 2014 ஆண்டு வாக்கில் ரெட்மி நோட் 4ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டதில் இருந்து இதுவரை 72 கோடி ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து இருப்பதாக சியோமி நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
"ரெட்மி நோட் பயணத்தில் உடனிருக்கும் இந்தியா மற்றும் சியோமி பிரியர்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் இல்லாமல் இதை எங்களால் செய்திருக்க முடியாது," என ரெட்மி இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது.

"ஒவ்வொரு புதிய ரெட்மி நோட் சீரிஸ் அறிமுகத்தின் போதும், இந்த பிரிவில் அனைவரும் திரும்பி பார்க்கச் செய்யும் அப்கிரேடுகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த எட்டு ஆண்டுகளாக நோட் சீரிஸ் நாங்கள் அறிமுகம் செய்த மிகவும் தலைசிறந்த தொழில்நுட்பமாக கேமரா இருக்கிறது."
"பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் 48MP சென்சாரை நாங்கள் தான் முதலில் கொண்டு வந்தோம். இதே வரிசையில் 64MP மற்றும் 108MP என மிட்-பிரீமியம் பிரிவின் கேமராக்கள் தொடர்ந்து MP கணக்கை கூட்டுவதில் நாங்கள் முன்னணியில் இருந்து வருகிறோம்," என்று சியோமி இந்தியா மூத்த விளம்பர பிரிவு அலுவலர், அனுஜ் ஷர்மா தெரிவித்து இருக்கிறார்.
- சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 12 ப்ரோ சீரிஸ் இந்திய வெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது.
- புதிய ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் சில வாரங்களுக்கு முன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புது ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் தொடர்ந்து வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இந்திய வெளியீட்டு தேதியை சியோமி அறிவித்துள்ளது. முன்னதாக சீன சந்தையில் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, டால்பி விஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர், 200MP 1/1.4-இன்ச் சாம்சங் HMX சென்சார், 2.24μm மற்றும் 16-இன்-1 பிக்சல் பின்னிங் பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் OIS, 7P லென்ஸ், 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, சர்ஜிங் P1 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனினை 19 நிமிடங்களில் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்திடும். இந்த ஸ்மார்ட்போனுடன் 120 வாட் GaN சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனுடன் ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து சியோமி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. வரும் வாரங்களில் இது பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
- சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் மற்றொரு ரெட்மி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் 2023 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வுக்கு முன்பே அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
சியோமியின் துணை பிராண்டு ரெட்மி இந்திய சந்தையில் புதிய ரெட்மி 12C ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. கடந்த வாரம் ரெட்மி பிராண்டு புதிய ரெட்மி 12C ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகம் செய்தது.
இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வேரியண்ட் சீன மாடலை போன்ற டிசைன் மற்றும் அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி 12C ஸ்மார்ட்போன் 2023 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

2023 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வு பார்சிலோனாவில் பிப்ரவரி 27 ஆம் தேதி துவங்கி மார்ச் 2 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் அதன் சீன வேரியண்டை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது. அந்த வகையில் ரெட்மி 12C ஸ்மார்ட்போனில் 6.71 இன்ச் HD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 5MP செல்ஃபி கேமரா, 50MP பிரைமரி கேமரா, 0.08MP டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது. புதிய ரெட்மி 12C ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி, இந்திய விலை பற்றிய தகவல்கள் மர்மமாகவே உள்ளது. எனினும், இதுபற்றிய அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
- ரெட்மி பிராண்டின் புதிய அதிவேக சார்ஜர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
- ரெட்மியின் புதிய ஃபாஸ்ட் சார்ஜர் ஸ்மார்ட்போனை ஐந்து நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விடுகிறது.
210 வாட் சார்ஜரை அடுத்து ரெட்மி பிராண்டு 300 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிவித்து இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனை ஐந்து நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். சியோமி நிறுவனத்தின் துணை பிராண்டு ரெட்மி புகதிய சார்ஜப் ஸ்மார்ட்போனினை 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாகவே எடுத்துக் கொள்கிறது.
300 வாட் இம்மார்டல் செகண்ட் சார்ஜர் என அழைக்கப்படும் புதிய தொழில்நுட்பத்தை ரெட்மி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. எனினும், இந்த சார்ஜரின் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

ரெட்மி பிராண்டு 4100 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட மாடிஃபை செய்யப்பட்ட ரெட்மி நோட் 12 டிஸ்கவரி ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யப்படும் வீடியோவினை வெளியிட்டு உள்ளது. இதற்காக ரெட்மி பிராண்டு 4300 எம்ஏஹெச் பேட்டரிக்கு மாற்றாக 4100 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ரெட்மி நோட் 12 டிஸ்கவரி எடிஷன் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி இருக்கிறது.
வீடியோவில் ஸ்மார்ட்போன் 50 சதவீதம் வரை சார்ஜ் ஆக வெறும் 2 நிமிடங்கள் 11 நொடிகளையே எடுத்துக் கொள்கிறது. புதிய அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் பற்றிய இதர விவரங்களை ரெட்மி பின்னர் வெளியிடுவதாக அறிவித்து இருந்தது. இதுகுறித்த வெய்போ பதிவில், "நோட் 12 ப்ரோ பிளஸ் மேஜிக் வெர்ஷனில் 300 வாட் சார்ஜிங் டெஸ்ட் இது, " என குறிப்பிடப்பட்டு உள்ளது.
சீன சந்தையில் விற்பனை செய்யப்படும் ரெட்மி நோட் 12 டிஸ்கவரி எடிஷன் ரெட்மி பிராண்டின் அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கிறது. இதனுடன் இணைக்கப்பட்டு இருக்கும் வீடியோவில் ரெட்மி போன் 300 வாட் வயர்டு சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இது ஸ்மார்ட்போனினை 10 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 43 நொடிகளையே எடுத்துக் கொள்கிறது. இந்த சார்ஜருடன் வரும் அடாப்டரில் இரண்சு GaN தொழில்நுட்பங்கள் உள்ளன. மேலும் இதில் 50-க்கும் அதிக பாதுகாப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாக ரெட்மி தெரிவித்து இருக்கிறது. 300 வாட் சார்ஜர் என்ற போதிலும், வீடியோவில் இது அதிகபட்சமாக 290 வாட் அளவையே எட்டி இருக்கிறது.
புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் ரியல்மி சமீபத்தில் அறிமுகம் செய்த ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை பின்னுக்குத் தள்ளி இருக்கிறது. 240வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ரியல்மி GT3 ஸ்மார்ட்போன் பத்து நிமிடங்களுக்குள் முழு சார்ஜ் ஆகிவிடும்.






