search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    இந்தியாவில் ரெட்மியின் அடுத்த ஸ்மார்ட்போன் - இணையத்தில் வெளியான தகவல்!
    X

    இந்தியாவில் ரெட்மியின் அடுத்த ஸ்மார்ட்போன் - இணையத்தில் வெளியான தகவல்!

    • சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் மற்றொரு ரெட்மி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் 2023 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வுக்கு முன்பே அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    சியோமியின் துணை பிராண்டு ரெட்மி இந்திய சந்தையில் புதிய ரெட்மி 12C ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. கடந்த வாரம் ரெட்மி பிராண்டு புதிய ரெட்மி 12C ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகம் செய்தது.

    இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வேரியண்ட் சீன மாடலை போன்ற டிசைன் மற்றும் அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி 12C ஸ்மார்ட்போன் 2023 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    2023 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வு பார்சிலோனாவில் பிப்ரவரி 27 ஆம் தேதி துவங்கி மார்ச் 2 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் அதன் சீன வேரியண்டை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது. அந்த வகையில் ரெட்மி 12C ஸ்மார்ட்போனில் 6.71 இன்ச் HD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 5MP செல்ஃபி கேமரா, 50MP பிரைமரி கேமரா, 0.08MP டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது. புதிய ரெட்மி 12C ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி, இந்திய விலை பற்றிய தகவல்கள் மர்மமாகவே உள்ளது. எனினும், இதுபற்றிய அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×