search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    போக்கோ பிராண்டிங்கில் இந்தியா வரும் ரெட்மி நோட் 12 5ஜி
    X

    போக்கோ பிராண்டிங்கில் இந்தியா வரும் ரெட்மி நோட் 12 5ஜி

    • சியோமி நிறுவனம் கடந்த வாரம் ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது.
    • புதிய ரெட்மி நோட் 12 சீரிஸ் இந்திய வெளியீடு பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இத்துடன் புதிய ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டன. ரெட்மி நோட் 12 சீரிசில் ரெட்மி நோட் 12 டிஸ்கவரி எடிஷன், ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி, ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி போன்ற மாடல்கள் இடம்பெற்று இருந்தன.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் போக்கோ பிராண்டிங்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 12 5ஜி மாடலில் உள்ளதை போன்ற அம்சங்கள் கொண்ட போக்கோ ஸ்மார்ட்போன் இந்த மாதமே இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    இதுதவிர ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி மற்றும் நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி போன்ற மாடல்கள் சியோமி 12i மற்றும் சியோமி 12i ஹைப்பர்சார்ஜ் பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் 22111317PI மாடல் நம்பர் கொண்ட போக்கோ ஸ்மார்ட்போன் பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.

    சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 12 5ஜி மாடல் 22101317C எனும் மாடல் நம்பர் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இது M17 எண்ணின் சுருக்கப்பட்ட வடிவம் ஆகும். இதே போன்று புதிய போக்கோ சாதனத்தின் சுருக்கப்பட்ட வடிவம் M17 ஆகும். அந்த வகையில் புது போக்கோ ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 12 5ஜி-யின் ரிபிராண்டு செய்யப்பட்ட மாடல் என கூறப்படுகிறது.

    Next Story
    ×