search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "haryana accident"

    • மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது திடீரென்று தாறுமாறாக ஓடிய பஸ், அங்குள்ள மரத்தில் மோதி கவிழ்ந்தது.
    • விபத்துக்குள்ளான பள்ளி பஸ் தகுதி சான்றிதழ் 6 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் மகேந்திர கர்க் மாவட்டம் நர்னால் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ் ஒன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 4 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

    பள்ளி பஸ் உன்ஹானி கிராமத்தில் சென்ற போது விபத்தில் சிக்கியது. மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது திடீரென்று தாறுமாறாக ஓடிய பஸ், அங்குள்ள மரத்தில் மோதி கவிழ்ந்தது.

    இதில் பஸ்சில் இருந்த பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். உடனே கிராம மக்கள், போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த மாணவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் 6 மாணவர்கள் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் கூறும்போது, முதற்கட்ட விசாரணையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மரத்தில் மோதியுள்ளது. டிரைவர் குடிபோதையில் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது என்றார்.

    விடுமுறை நாளான இன்று பள்ளி இயங்கி உள்ளது. மேலும் விபத்துக்குள்ளான பள்ளி பஸ் தகுதி சான்றிதழ் 6 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பல்வேறு கிராமங்களில் இருந்து ராஜஸ்தானின் கோகமெடிக்கு பக்தர்கள் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது
    • டிராக்டரின் கொக்கி அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சண்டிகர்:

    பஞ்சாபிலிருந்து ராஜஸ்தானில் உள்ள கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர், அரியானா மாநிலம் சிர்சாவில் உள்ள கிராமம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.

    டிராக்டரின் கொக்கி அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள பட்ரான் அருகே உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ராஜஸ்தானின் கோகமெடிக்கு பக்தர்கள் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    அரியானா மாநிலத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். #HaryanaAccident #HeavyFog
    அம்பாலா:

    வடமாநிலங்களில் தற்போது கடும் குளிருடன் பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. கண்ணை மறைக்கும் பனிமூட்டம் காரணமாக சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காலையில் வெகுநேரம் ஆகியும் பனிமூட்டம் விலகாததால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே மெதுவாக செல்ல வேண்டி உள்ளது. ஆனாலும் ஒரு சில பகுதிகளில் பனி மூட்டத்தால் விபத்து ஏற்படுகிறது.

    இந்நிலையில், அரியானா மாநிலம் சண்டிகர்- அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை கடும் பனி மூட்டத்திற்கு மத்தியில் சென்றுகொண்டிருந்த ஒரு லாரி, கட்டுப்பாட்டை இழந்து இரண்டு சொகுசு கார்கள் மீது மோதியது. அம்பாலா அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் சண்டிகரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.


    இதேபோல் திங்கட்கிழமை ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 8 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. #HaryanaAccident #HeavyFog
    அரியானாவில் கடுமையான மூடுபனியால் நெடுஞ்சாலையில் சென்ற சுமார் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். #DenseFog #HaryanaAccident
    புதுடெல்லி:

    டெல்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது. குளிர் சீசனில் இந்த காலக்கட்டத்தில் நிலவும் சராசரி வெப்பநிலையை விட, மிகவும் குறைவான வெப்பநிலை இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக காலை வேளையில் அருகில் இருப்பவர்கள்கூட தெரியாத வகையில் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையும் மீறி சில இடங்களில் விபத்து ஏற்படுகிறது.

    இந்நிலையில், அரியானா மாநிலத்தில் ரோத்தக்-ரேவாரி நெடுஞ்சாலையில் இன்று காலையில் வாகனங்கள் சென்றபோது மூடுபனி காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. சுமார் 50 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதில் 7 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



    இந்த விபத்து காரணமாக அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை வெளியேற்றி, போக்குவரத்தை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.  இதற்காக ஏராளமான ஜேசிபி வாகனங்கள்  வரவழைக்கப்பட்டன. #DenseFog #HaryanaAccident
    ×