search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை மாத்திரை"

    • வாலிபர் ஒருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக பல்லாவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • வாலிபரை போலீசார் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

    தாம்பரம்:

    பல்லாவரம் சந்தையில் வாலிபர் ஒருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக பல்லாவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், அந்த வாலிபரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    போலீசாரின் விசாரணையில், அவர் சென்னை, ஆதம்பாக்கம், டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்த வசந்த் (வயது 21) என்பது தெரிய வந்தது. அவர் வைத்திருந்த பையை சோதனை செய்து பார்த்தபோது, அதில் 40 போதை மாத்திரைகள் மற்றும் 2 செல்போன்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

    • மதுரை மாவட்டத்தில் தமிழழகன் உள்பட 10 பேர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளனர்.
    • போதை மருந்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார்.

    மதுரை

    மதுரை மாநகரில் புகையிலை, கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூக விரோதிகளை பிடிக்க வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில் தல்லா குளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த தனிப்படை போலீ சார் நகர் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி வைகை வடகரை சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை கண்டதும் தப்ப முயன்றனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 3 பேரில் ஒருவரை மட்டும் விரட்டி சென்று பிடித்த னர். அவரிடம் விசா ரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    இதையடுத்து அவர் போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டார்.அங்கு விசாரணை நடத்தி யதில் பிடிபட்ட நபர் விக்கிரமங்கலம் அருகே உள்ள வடகாட்டுப்பட்டியை சேர்ந்த சேகர் மகன் தமிழழகன் என்பது தெரிய வந்தது. இவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    மதுரை மாவட்டத்தில் தமிழழகன் உள்பட 10 பேர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளனர். தமிழழகன் கொடுத்த தகவலின்பேரில் அண்ணாநகர் முத்துராம லிங்கதேவர் தெருவில் உள்ள மருந்து கடையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 17,030 போதை மாத்திரைகள், 150 போதை தரக்கூடிய மருந்து பாட்டில்கள் இருந்தன. இவை அனைத்தும் காலாவதியானது.

    இதனை தமிழழகன், அவருக்கு உடந்தையாக இருந்த முரளிதாஜ் ஆகியோர் விற்று வந்துள்ளனர். இதை யடுத்து போதை மாத்திரை களை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். இதற்கு மூளையாக செயல்பட்ட பி.பார்ம் பட்டதாரி தினேஷ் என்பவரை போலீ சார் தேடி வருகின்றனர்.

    இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறியதாவது:-

    போலீசாரின் கெடுபிடி காரணமாக கஞ்சா விற்பனை குறைந்து வருகிறது. ஆனால் போதை மாத்திரை புழக்கம் அதிகரித்துள்ளது. வலி நிவாரண மாத்திரை, மருந்துகளை போதைக்கு பயன்படுத்தி வருகின்றனர். டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் சிலர் இதனை அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.

    மேலும் ஆயிரக்கணக்கில் வாங்கி குடோன்களில் இருப்பு வைத்து அதிக விலைக்கு சமூகவிரோத கும்பல் விற்பனை செய்து வரு கிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் கிட்னி செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

    காலாவதியான மாத்திரைகள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடி யவை. இது போதை கும்பலுக்கு நன்றாகவே தெரியும். இருந்தபோதிலும் அவர்கள் காலாவதியான போதை மாத்திரைகளை விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து உள்ளனர்.

    கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • சிவசங்கர் அங்குள்ள மருந்து கடையில் ஊழியராகவும், கார்த்திக் காய்கறி கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    கோவை:

    கோவை ரத்தினபுரி பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக ரத்தினபுரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் ரத்தினபுரி சம்பத் வீதியில் உள்ள மயானம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, அங்கு 6 பேர் கும்பலாக நின்றிருந்தனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அருகே சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் வாலிபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    போலீசார் விடாமல் அவர்களை துரத்தி சென்று அந்த கும்பலில் 2 பேரை மடக்கி பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது, அதில் 4 விதமான 500 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், அவர்கள் வேலாண்டிபாளையம் மருதகோனார் வீதியை சேர்ந்த சிவசங்கர்(39), ரத்னபுரி சம்பத் வீதியை சேர்ந்த கார்த்திக் என்பதும் தெரியவந்தது. சிவசங்கர் அங்குள்ள மருந்து கடையில் ஊழியராகவும், கார்த்திக் காய்கறி கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    மேலும் அவர்களுடன் இருந்தது ஆகாஷ், சிரஞ்சிவி, விவேக், சீனு கார்த்திக் என்பதும் தெரியவந்தது. இவர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் சிவசங்கர், கார்த்திக் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இதுபோன்று வேறு எங்காவது போதை மாத்திரைகளை விற்பனை செய்துள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பள்ளி பகுதியில் விற்பனை செய்ய வைத்திருந்த 300 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • 2 வாலிபர்களை கைது செய்தனர்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை நகர் பகுதியில் குறிப்பாக பள்ளிப்பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசுக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது தனியார் பள்ளி அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த அஜீஸ் நகரை சேர்ந்த நடராஜ் (22), நேரு மைதான பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (19) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி இளைஞர்களுக்கு விற்று வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 300 போதை மாத்திரைகள், ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • சித்தோடு போலீசார் போதை மாத்திரை சப்ளை செய்த வாலிபரை கைது செய்தனர்.
    • மேலும் அவரிடம் இருந்த 1400 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சித்தோடு:

    பவானி அருகில் உள்ள ஆர்.என். புதூர் பகுதியில் கடந்த 7-ந் தேதி சித்தோடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அப்பகுதியில் சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன்னுக்கு பின்னாக அவர்கள் பதில் அளித்த நிலையில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    அதில், சித்தோடு ராயபாளையம் புதூர் பகுதியில் வசிக்கும் திலிப் குமார் மற்றும் வினித் குமார் ஆகிய இருவரும் வீட்டில் டேப்பேன்டாட்டல் என்ற போதை மாத்திரைகள் வைத்து டாக்டர் அனுமதி சீட்டு இல்லாமல் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    மேலும் சேலத்தில் இருந்து வாங்கி வந்து விற்கப்பட்ட இந்த மாத்திரைகளை ஈரோடு கனிராவுத்தர் குளத்தை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் சப்ளை செய்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து திலிப் குமார் மற்றும் வினித் குமார் ஆகிய 2 பேரையும் சித்தோடு போலீசார் கைது செய்து தலை மறைவான முக்கிய நபரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு, கனி ராவுத்தர் குளம் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் சஞ்சய் குமார் என்கிற சஞ்சய் (23) என்பதும் போதை மாத்திரைகள் வைத்து விற்பனை செய்து தலைமறைவாக இருந்த முக்கிய நபர் என்பதும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து சித்தோடு போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 1400 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

    • அத்தாணி பாலம் அருகே 5 வாலிபர்கள் அமர்ந்து கொண்டு இருந்தவர்கள் போதை மாத்திரைகள் பயன்படுத்தி மயக்கு நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
    • போதைப் பொரு ட்களுக்கு அடிமையாக வேண்டாம் என அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும்சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி பாலம் அருகே 5 வாலிபர்கள் அமர்ந்து கொண்டு இருந்தனர். அவர்கள் போதை மாத்திரைகள் பயன்படுத்தி மயக்கு நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அந்தப் பகுதியை சேர்ந்த பொது மக்கள் போலீசாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று அவர்க ளிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் என்பதும், அவர்கள் போதை மாத்திரை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபர்களை அந்தியூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து அவர்களுக்கு போதைப் பொருட்களுக்கு அடிமையாக வேண்டாம் என அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும்சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை மாத்திரைகளை பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாநகரில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதை மாத்திரைகளை பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    வலி நிவாரணி மாத்திரைகளை டாக்டரின் பரிந்துரை கடிதம் இல்லாமல் சட்ட விரோதமாக சிலர் வாங்கி போதைக்காக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    போதை மாத்திரைகள் விற்பனை செய்வதை தடுக்க மாநகர போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை மாநகரில் மட்டும் இதுவரை போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.தொடர்ந்து மாநகரில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தநிலையில், குனியமுத்தூர் ஆசாத் நகரில் உள்ள மைதானத்தில் சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு போைத மாத்திரை விற்பது உறுதியானது.

    இதையடுத்து அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்ற கரும்புக்கடையை சேர்ந்த அசாருதீன்(வயது25), முகமது யாசர்(22) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 22 போதை மாத்திரைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்பவர்களை கைது செய்து அவர்களது வங்கி கணக்குகளையும் முடக்கி வருகிறார்கள்‌.
    • அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல் கொலை மிரட்டல் விடுத்தல் கஞ்சா விற்பனை செய்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழுவ தும் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப் டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் தனி படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர்.

    கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்பவர்களை கைது செய்து அவர்களது வங்கி கணக்குகளையும் முடக்கி வருகிறார்கள்‌.

    இந்த நிலையில் வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் தலைமையிலான போலீசார் வடசேரி அறுகுவிளை பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு சந்தேகப்படும்படியாகநின்ற இரண்டு வாலிபர்களை பிடித்தனர்.

    பிடிபட்டவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் பிடிபட்ட இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் இருவரும் போலீசை தகாத வார்த்தையால் பேசியதுடன் தாக்க முயன்றனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை வடசேரி போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு வந்து விசாரித்த போது பிடிப ட்டவர்கள் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 21) என்பதும் மற்றொருவர் அறுகுவிளை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் மீது அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல் கொலை மிரட்டல் விடுத்தல் கஞ்சா விற்பனை செய்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை முடக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • வாலிபர்கள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஒரு கும்பல் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
    • இது வரை மாநகரில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் போதை மாத்திரை விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    கோவை:

    கோவையில் வாலிபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்தும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாலிபர்கள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஒரு கும்பல் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

    மாநகரில் போதை மாத்திரை விற்பனை செய்வதை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இது வரை மாநகரில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் போதை மாத்திரை விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் தடாகம் ரோடு எரிமேடு முத்தண்ணன் குளம் பகுதியில் சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்ற ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த திருஞானம் (வயது 25), சாய்பாபா காலனியை சேர்ந்த அபாஸ் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 114 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அண்ணாநகர் சினிமா தியேட்டர் பின்பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.
    • இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    மதுரை:

    மதுரை மாநகரில் போதை மாத்திரை விற்கப்படுவதாக புகார் வந்தது. இதனைத்தொடர்ந்து மாநகரம் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அண்ணாநகர் சினிமா தியேட்டர் பின்பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 3 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 400 போதை மாத்திரைகள், 9 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து அவர்களை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் அனுப்பானடி தெய்வகன்னி தெருவைச் சேர்ந்த பாலமுருகன் மகன் சாம் நிகேதன் (வயது 20), அண்ணா நகர் அன்னை தெரு சங்கரநாராயணன் மகன் பாலசுப்பிரமணி (வயது 23), தென்காசி மாவட்டம் புளியரை நாயுடு தெரு, சுப்புராமன் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 23) என்பது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து போதை மாத்திரைகள் விற்றதாக மேற்கண்ட 3 பேரையும் அண்ணாநகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்லில் மருந்து கடைகளில் போதை மாத்திரைகள் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது.
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் ஆர்.எம்.காலனி, கோவிந்தாபுரம், காட்டாஸ்பத்தரி ஆகிய பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் போதை தரும் அல்ப்ராக்ஸ் எனும் மாத்திரைகள் சாதாரணமாக விற்கப்படுகிறது. இந்த மாத்திரையின் வீரிய தன்மைக்கு ஏற்ப அதன் செயல்பாடு மாறுபடுகிறது. 10 மாத்திரைகள் ரூ.50-க்கு விற்கப்படுகிறது. இதனால் இந்த மாத்திரைகளை கூலித் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், மாணவர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். டாக்டர்கள் பரிந்துரை இல்லாமலேயே இந்த மாத்திரைகளை கடைக்காரர்கள் விற்பனை செய்வதால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இது குறித்து மாத்திரையை பயன்படுத்தும் தொழிலாளர்கள் கூறுகையில், டாஸ்மாக் கடையில் மது பாட்டில் விலை ரூ.120-க்கு விற்கிறது. அதற்கும் கூடுதலாக தண்ணீர் பாக்கெட், இதர செலவுகள் ஏற்படுகிறது.

    ஆனால் மருந்து கடைகளில் கிடைக்கும் இந்த மாத்திரைகள் ரூ.50-க்கு விற்கப்படுகிறது. கூடுதல் செலவும் தேவையில்லை. முக்கியமாக மது அருந்துவதால் ஏற்படும் கெட்ட வாடை இருப்பதில்லை. 6 முதல் 8 மணி நேரம் வரை போதை இருப்பதால் ஏதோ ஒரு வகையில் உடல் வலியை போக்கிக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.

    மாத்திரைகளின் வீரியம் அறியாமல் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றியும் கவலைப்படாமல இது போன்ற போதை மாத்திரைகளை வாங்கி ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இதனை தடுக்க அரசு மருத்துவ குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    ×