search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு பணி"

    • வாய்க்காலை சீரமைக்க ரூ.733 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.
    • மே 1-ந் தேதி முதல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு , திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்ட ங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்த வாய்க்காலை சீரமைக்க ரூ.733 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. வாய்க்காலை புனரமைக்க ஒருத்தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்தனர். அமைச்சர் முத்துசாமி இருதரப்பு விவசாயிகளையும் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். எனினும் சுமுகமான முடிவு ஏற்படவில்லை.

    இந்நிலையில் கீழ்பவானி முறைநீர் பாசன கூட்டமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மே 1-ந் தேதி முதல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டத்தை கைவிட கோரியும், விவசாயம் காக்க வேண்டியும், மண் கால்வாயிகவே இருக்க வேண்டும் என வலியுறுத்தி அரச்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக விவசாயிகள் கடை வியாபாரிகளிடம் ஆதரவு கேட்டிருந்தனர்.

    அதன்படி இன்று காலையில் இருந்து அரச்சலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியான பிச்சாண்டாம் பாளையம், கருக்கம் பாளையம், வாய்க்கால் மேடு ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து விவசாயிகள் மற்றும் வணிகர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரச்சலூர் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் அரச்சலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடையடைப்பு போராட்டம் காரணமாக ஆட்கள் நடமாட்டம் இன்றி வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    கீழ்பவானி வாய்க்காலில், பழைய கட்டுமானங்களில் உள்ள மராமத்துப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

    புதிதாக வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க கூடாது. வாய்க்காலின் மண் கரை அப்படியே தொடர வேண்டும், கசிவுநீர் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று அரச்சலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது. விழாவை யொட்டி மகாபாரதக் கதைக்கேற்ப கதாபாத்தி ரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வும் நடந்தது. பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதனை முன்னிட்டு காலை வைகை ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து பூக்குழி மைதா னத்தில் தெளித்தனர்.

    பின்னர் பூ வளர்த்தனர் மாலை 2 மணியளவில் அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு பூக்குழி மண்டகப்படியில் வந்து சேர்ந்தது. அங்கு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று காமதேனு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6 மணியளவில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி மற்றும் பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள்.

    இதைத்தொடர்ந்து அம்மன் சங்கங்கோட்டை கிராமம், முதலியார் கோட்டை கிராமம், ரெயில்வே பீடர் ரோடு வழியாக மார்க்கெட் ரோடு, நான்கு ரதவீதி வழியாக கோவிலை வந்தடைந்தது.

    சங்கங்கோட்டை கிராமத்தார்கள் பூக்குழி திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பசும்பொன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே ஞானகுருதட்சிணாமூர்த்தி கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது.
    • 8.30 மணிக்கு கலச மகா அபிஷேகம் மகா தீபாரதனைகள் சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பாக நடைபெற்றது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே பையூர் கிராமத்தில் உள்ள ஞானகுருதட்சிணாமூர்த்தி கோவிலில் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. குருபெயர்ச்சி விழாவினை முன்னிட்டு மாலை 7மணிக்கு விநாயகர் பூஜை மஹா சங்கல்பம் கலச பூஜை சங்கு பூஜை குரு பரிகார ஹோமம் மகா பூர்ணாஹுதி பாலபிஷேகம் 8.30 மணிக்கு கலச மகா அபிஷேகம் மகாதீபாரதனைகள் சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பாக நடைபெற்றது.

    அதன் பிறகு 12 ராசிகளுக்கும் அதிபதியாக விளங்கக்கூடிய 12 அடி குரு பகவானுக்கு கலச அபிஷேகம் 108 சங்காபிஷேகம் பரிகார ஹோமங்களும் நடைபெற்றன. இரவு 11.28 மணிக்கு மீனராசியிலிருந்து மேஷராசிக்கும் பிரவேசிக்கும் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.விழா கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. விழாவினை காண சுற்று வட்டார மற்றும் வெளியூர் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பாதுகாப்பு பணியில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் 

    • பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.
    • கண்காணிப்பு பணியில் 13 டிரோன் காமிராக்கள், 92 நிரந்தர காமிராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற 30-ந் தேதி சுதந்திரப் போராட்ட தியாகி முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்

    ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பல்வேறு சமுதாய அமைப்பினரும், பொது மக்கள் என 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனர்.

    இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கமுதி ஆயுதப்படை கூட்ட அரங்கில் தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் தலைமையில் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை முன்னிலை வகித்தார்.

    இதில் கோவை, ராமநாதபுரம் உட்பட 5 சரக டி.ஐ.ஜி.கள், 28 மாவட்டங்களை சேர்ந்த எஸ்.பி.க்கள் பங்கேற்றனர். பின்னர் நிருபர்களிடம் தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் கூறுகையில், தேவர் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆயிரம் போலீசார் இன்று (27-ந் தேதி) முதல் 30-ந் தேதி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    தடை செய்யப்பட்டுள்ள பகுதிகள், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் உத்தரவுகளை மீறி செயல்படும் வாகனங்கள் மீது கண்காணிப்பு காமிரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கண்காணிப்பு பணியில் 13 டிரோன் காமிராக்கள், 92 நிரந்தர காமிராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழா வருகிற 30-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக வருகின்றனர்.

    திருப்பூர் :

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழா வருகிற 30-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    விழாவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்பு நிர்வாகிகள் தொண்டர்கள் தேவரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

    இதனையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக வருகின்றனர்.

    இந்த பாதுகாப்பு பணிக்காக திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 315 போலீசார் ராமநாதபுரம் சென்றுள்ளனர். அதன்படி திருப்பூர் மாநகரில் இருந்து 135 போலீசார், மாவட்டத்திலிருந்து 180 போலீசார் என மொத்தம் 315 பேர் ராமநாதபுரத்திற்கு பாதுகாப்பு பணிக்காக சென்று உள்ளனர்.

    • முக்கிய சந்திப்புகளில் கூடுதல் கண்காணிப்பு
    • ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வீடுகளிலும் போலீசார் கண்காணிப்பு

    நாகர்கோவில்:

    கோவை மதுரை சேலம் பகுதிகளில் பாரதிய ஜனதா பிரமுகர் வீடுகளில் பெட்ரோல் கொண்டு வீசப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கல்யாண சுந்தரம் (வயது 55) என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குமரி மாவட்டத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கல்யாணசுந்தரம் வீட்டில் குண்டு வீசியது தொடர்பான வழக்கில் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து குளச்சல் பகுதியை சேர்ந்த முஸ்ஸாமில் என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் கோர்ட்டில் ஆஜர்ப டுத்தப்பட்டு நாகர்கோ வில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தலைமறைவாகியுள்ள மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகி றார்கள்.

    இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகி றார்கள். ஆரல்வா ய்மொழி களியக்காவிளை அஞ்சுகிராமம் சோதனை சாவடிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு உள்ளனர்.

    இதேபோல் தக்கலை குளச்சல் கன்னியாகுமரி சப் டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளிலும் வாகன சோதனை நடந்து வருகிறது. போலீசார் இரண்டு ஷிப்டுகளாக பிரிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடலோர கிரா மங்களிலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    முக்கிய சந்திப்புகள் மற்றும் கலெக்டர் அலுவலக பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    பாரதிய ஜனதா நிர்வாகிகள் வீடுகளுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கபட்டுள்ளது. நாகர்கோவிலில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், எம்.ஆர். காந்தி வெள்ளாடிச்சி விளையில் உள்ள பாரதிய ஜனதா மாவட்ட பொருளாளர் முத்துராமன் உள்பட முக்கிய நிர்வாகிகள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வீடுகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ராமநாதபுரத்தில் எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ராமநாதபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ராமநாதபுரம்

    தமிழக முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கும், கைது நடவடிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடந்தது.

    ராமநாதபுரம் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராமநாதபுரம் மேற்கு மாவட்டத்தலைவர் பரக்க த்துல்லா உள்ளிட்டோரை விடுதலை செய்யக்கோரி ராமநாதபுரம் அரசு பணிமனை முன்பு மாவட்ட துணைத்தலைவர் சோமு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். பாப்புலர் பிரண்ட் மாவட்ட பேச்சா ளர் ஹமீது இப்ராஹிம், பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ரஞ்சித், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் முஹம்மது யாசின் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.முன்னதாக ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பீர் முஹைதீன் வரவேற்று ேபசினார். முதுகுளத்தூர் தொகுதி தலைவர் ஆரிபு நன்றி கூறினார். முன்னதாக ராமநாதபுரத்தில் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சாா்பில் புதிய பஸ் நிலைய நுழைவுவாயில் முன்பு சாலை மறியல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனா். அப்போது மறியலில் ஈடுபட்டவா்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

    அதன் பின்பு மறியலில் ஈடுபட்ட 22 ஆண்கள், 4 பெண்கள் என 26 பேரை போலீசார் கைது செய்தனர். அவர் வெளிப்பட்டினத்தில் உள்ள தனியாா் மஹாலில் தங்க வைக்கப்பட்டனர். ராமநாதபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ஓசூர் சப்-டிவிஷனில் சுமார் 1,000 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
    • 500 சிலைகள் 4-ந்தேதி கரைக்கப்படவுள்ளன.

    ஓசூர்,

    ஓசூரில் விநாயகர் சதுர்த்தி பந்தோபஸ்து மற்றும் சிலை ஊர்வல பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னிட்டு, போலீசாரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஓசூர் எம்.ஜி.ரோடு காந்தி சிலை அருகே கொடி அணிவகுப்பை, மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் டாகூர் தொடங்கிவைத்தார்.

    மேலும், எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு, போஸ் பஜார் வழியாக சென்று மீண்டும் காந்தி சிலையருகே நிறைவடைந்த இந்த அணிவகுப்பினை, அவர் தலைமை தாங்கி நடத்திச் சென்றார்.

    முன்னதாக, அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -

    விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, விரிவான பந்தோபஸ்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, யாரும் அச்சப்பட தேவையில்லை. பொதுமக்களும், இந்து மற்றும் முஸ்லீம் அமைப்புகளும் நல்லமுறையில் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    ஓசூர் சப்-டிவிஷனில் சுமார் 1,000 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 500 சிலைகள் வருகிற 3-ந்தேதியும், அதேபோல் சுமார் 500 சிலைகள் 4-ந்தேதியும் கரைக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து மீதமுள்ள சிலைகளும் கரைக்கப்படும்.

    விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது, 1, 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 இடங்கள் பதற்றமான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன அதில், ஓசூரில் 2 இடங்கள் பதற்றமான பகுதியாகும்.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். அப்போது ஓசூர் ஏ.எஸ்.பி. அரவிந்த் மற்றும் ஓசூர் சரக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உடன் இருந்தனர்.

    • தியாகதுருகம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
    • சாலையின் இருபுறமும் நிலம் உள்ள 2 விவசாயிகள் பாலம் அமைத்தால் எங்களுக்கு இடையூறாக இருக்கும் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே திம்மலை கிராமத்தில் இருந்து அலங்கிரி கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் குறுக்கே சிறு பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு தொடங்கப்பட்டது.

    அப்போது சாலையின் இருபுறமும் நிலம் உள்ள 2 விவசாயிகள் பாலம் அமைத்தால் எங்களுக்கு இடையூறாக இருக்கும் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி நில அளவையர்கள் நடராஜன், சக்திவேல் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் நிலங்களை அளவீடு செய்யும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

    அதன்படி நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதில் இரண்டு பொக்லைன் எந்திரங்கள் மூலம் சாலையோர ஆக்கிரமிப்பு–கள் அகற்றப்பட்டன.அப்போது உதவி திட்ட அலுவலர் சீனிவாசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சி வேல், ஒன்றிய பொறியாளர் கோபி, வருவாய் ஆய்வாளர் சுகன்யா, ஊராட்சி மன்ற தலைவர் தேவி ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் 20 -க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னெ–ச்சரிக்கை நடவடிக்கை யாக ஆம்புலன்ஸ் ஒன்று சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது அப்பகுதியில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×