search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எஸ்.டி.பி.ஐ.,  கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    ராமநாதபுரத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

    எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    • ராமநாதபுரத்தில் எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ராமநாதபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ராமநாதபுரம்

    தமிழக முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கும், கைது நடவடிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடந்தது.

    ராமநாதபுரம் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராமநாதபுரம் மேற்கு மாவட்டத்தலைவர் பரக்க த்துல்லா உள்ளிட்டோரை விடுதலை செய்யக்கோரி ராமநாதபுரம் அரசு பணிமனை முன்பு மாவட்ட துணைத்தலைவர் சோமு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். பாப்புலர் பிரண்ட் மாவட்ட பேச்சா ளர் ஹமீது இப்ராஹிம், பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ரஞ்சித், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் முஹம்மது யாசின் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.முன்னதாக ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பீர் முஹைதீன் வரவேற்று ேபசினார். முதுகுளத்தூர் தொகுதி தலைவர் ஆரிபு நன்றி கூறினார். முன்னதாக ராமநாதபுரத்தில் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சாா்பில் புதிய பஸ் நிலைய நுழைவுவாயில் முன்பு சாலை மறியல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனா். அப்போது மறியலில் ஈடுபட்டவா்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

    அதன் பின்பு மறியலில் ஈடுபட்ட 22 ஆண்கள், 4 பெண்கள் என 26 பேரை போலீசார் கைது செய்தனர். அவர் வெளிப்பட்டினத்தில் உள்ள தனியாா் மஹாலில் தங்க வைக்கப்பட்டனர். ராமநாதபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×