search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அசம்பாவிதங்களை தடுக்க குமரியில் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்
    X

    அசம்பாவிதங்களை தடுக்க குமரியில் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்

    • முக்கிய சந்திப்புகளில் கூடுதல் கண்காணிப்பு
    • ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வீடுகளிலும் போலீசார் கண்காணிப்பு

    நாகர்கோவில்:

    கோவை மதுரை சேலம் பகுதிகளில் பாரதிய ஜனதா பிரமுகர் வீடுகளில் பெட்ரோல் கொண்டு வீசப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கல்யாண சுந்தரம் (வயது 55) என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குமரி மாவட்டத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கல்யாணசுந்தரம் வீட்டில் குண்டு வீசியது தொடர்பான வழக்கில் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து குளச்சல் பகுதியை சேர்ந்த முஸ்ஸாமில் என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் கோர்ட்டில் ஆஜர்ப டுத்தப்பட்டு நாகர்கோ வில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தலைமறைவாகியுள்ள மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகி றார்கள்.

    இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகி றார்கள். ஆரல்வா ய்மொழி களியக்காவிளை அஞ்சுகிராமம் சோதனை சாவடிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு உள்ளனர்.

    இதேபோல் தக்கலை குளச்சல் கன்னியாகுமரி சப் டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளிலும் வாகன சோதனை நடந்து வருகிறது. போலீசார் இரண்டு ஷிப்டுகளாக பிரிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடலோர கிரா மங்களிலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    முக்கிய சந்திப்புகள் மற்றும் கலெக்டர் அலுவலக பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    பாரதிய ஜனதா நிர்வாகிகள் வீடுகளுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கபட்டுள்ளது. நாகர்கோவிலில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், எம்.ஆர். காந்தி வெள்ளாடிச்சி விளையில் உள்ள பாரதிய ஜனதா மாவட்ட பொருளாளர் முத்துராமன் உள்பட முக்கிய நிர்வாகிகள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வீடுகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×