search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசம்பாவிதம்"

    • மேலும் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.
    • நாங்கள் காலம், காலமாக இங்கு கடை நடத்தி வருகிறோம்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட கடற்கரை சாலை, பழைய கலெக்டர் அலுவலகம் சாலை மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகியபகுதிகளில் சாலையோரமாக நூற்றுக்கணக்கான கடைகள் இருந்து வருகின்றன. இதில் மாநகராட்சியில் உரிய அனுமதி பெற்று பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. மேலும் பல்வேறு கடைகள் அனுமதி இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்து இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி சார்பில் சாலையோரமாக 123 கடைகள் ஆக்கிரமித்து இயங்கி வருவதாக கணக்கெடுத்து அதன் உரிமையாளருக்கு உரிய நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உத்தரவின் பேரில் மாநகராட்சி செயற்பொறியாளர் கலைவாணி தலைமையில் அதிகாரிகள் குருமூர்த்தி, பாஸ்கரன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இவர்களுடன்2 ஜே.சி.பி. மற்றும் 4 டிப்பர் வாகனம் கொண்டு வந்தனர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் வளாகம் உள்ள இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

    முன்னதாக மாநகராட்சி கவுன்சிலர் அருள்பாபு மற்றும் அங்கு கடை வைத்திருப்பவர்கள் மாநகராட்சி அதிகாரிகள் வந்த வாகனத்தை முற்றுகையிட்டனர். நாங்கள் காலம், காலமாக இங்கு கடை நடத்தி வருகிறோம். இங்குள்ள கடைகளை அகற்றக் கூடாது. எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என வாக்குவாதம் செய்தனர். அதற்கு அங்கிருந்த அதிகாரிகள் இது குறித்து மேல் அதிகாரிகளிடம் தெரிவியுங்கள் என கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடை உரிமையாளர்கள் துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிக் கொண்டிருந்த அதிகாரியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, தற்போது அகற்றப்படும் கடைகளுக்கு கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வழங்கி கடைகளை அப்புறப்படுத்த அவகாசம் வழங்க வேண்டும். மேலும் கடந்த பல ஆண்டுகளாக ஏற்கனவே நகராட்சியிடம் இருந்து உரிய அனுமதி பெற்று வாடகை செலுத்தி வரும் கடைகளுக்கு நிரந்தரமாக அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது முதல் கட்டமாக தற்போது ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கின்றோம். மேலும் 15 நாட்களுக்கு பிறகு ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தால் கண்டிப்பாக அகற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி ஈடுபடும். வேறு ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் காலை முதல் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. 

    • வீட்டின் அருகே உள்ள மீன்குட்டையில் தவறி விழுந்துள்ளார்.
    • அசம்பாவிதங்கள் இனி ஏற்படாமல் தடுக்க மீன்குட்டையை உடனடியாக மூடவேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கருவாழக்கரை மேலையூர் அய்யர் காலனியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மகன் அபினேஷ் (வயது17). இவர் செம்பனார்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் அபினேஷ், தனது வீட்டின் அருகே உள்ள மீன்குட்டையில் தவறி விழுந்துள்ளார். அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது அங்கு மாணவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே அபினேஷ் இறந்தது விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே சாலையோரத்தில் எவ்வித பாதுகாப்பு இன்றியும் மீன்குட்டை அமைத்ததால் தான் அபினேஷ் தவறி விழுந்து இறந்துள்ளார்.

    எனவே மீன்குட்டை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்று அசம்பாவிதங்கள் இனி ஏற்படாமல் தடுக்க மீன்குட்டையை உடனடியாக மூடவேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி அருகே சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால், அவர்களை குண்டுகட்டாக தூக்கி சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.

    இந்த சம்பவத்தை கண்டித்து செம்பனார்கோயில் மேல் முக்கூட்டில் சி.பி.ஐ.கட்சியின் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் சங்கமித்திரன் ஆகியோர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர்.

    இசம்பவம் குறித்து செம்பனார்கோயில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சித்ரா, தரங்கம்பாடி தாசில்தார் இந்துமதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது இறந்த மாணவனின் குடும்பத்திற்கு இழப்பிடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் சாலை மறியலை கைவிட்டனர்.

    • முக்கிய சந்திப்புகளில் கூடுதல் கண்காணிப்பு
    • ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வீடுகளிலும் போலீசார் கண்காணிப்பு

    நாகர்கோவில்:

    கோவை மதுரை சேலம் பகுதிகளில் பாரதிய ஜனதா பிரமுகர் வீடுகளில் பெட்ரோல் கொண்டு வீசப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கல்யாண சுந்தரம் (வயது 55) என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குமரி மாவட்டத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கல்யாணசுந்தரம் வீட்டில் குண்டு வீசியது தொடர்பான வழக்கில் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து குளச்சல் பகுதியை சேர்ந்த முஸ்ஸாமில் என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் கோர்ட்டில் ஆஜர்ப டுத்தப்பட்டு நாகர்கோ வில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தலைமறைவாகியுள்ள மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகி றார்கள்.

    இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகி றார்கள். ஆரல்வா ய்மொழி களியக்காவிளை அஞ்சுகிராமம் சோதனை சாவடிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு உள்ளனர்.

    இதேபோல் தக்கலை குளச்சல் கன்னியாகுமரி சப் டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளிலும் வாகன சோதனை நடந்து வருகிறது. போலீசார் இரண்டு ஷிப்டுகளாக பிரிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடலோர கிரா மங்களிலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    முக்கிய சந்திப்புகள் மற்றும் கலெக்டர் அலுவலக பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    பாரதிய ஜனதா நிர்வாகிகள் வீடுகளுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கபட்டுள்ளது. நாகர்கோவிலில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், எம்.ஆர். காந்தி வெள்ளாடிச்சி விளையில் உள்ள பாரதிய ஜனதா மாவட்ட பொருளாளர் முத்துராமன் உள்பட முக்கிய நிர்வாகிகள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வீடுகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • இந்த குடிநீர் தொட்டியை தாங்கி நிற்கும் ஆறு தூண்களும் விரிசல் ஏற்பட்டு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் சிதிலமடைந்துள்ளன.
    • மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் மண் இளகி தூண்களில் விரிசல் ஏற்பட்டிருக்ககூடும் என்று பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஊராட்சி ஒன்றியம் கோவில்பத்து ஊராட்சியில் கெங்கைசமுத்திரம் செல்லும் வழியில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று அமைந்துள்ளது.1989-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் கெங்கைசமுத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள தெரு க்கள், அண்ணா நகர் அதன் அருகாமை குடியிருப்புகள் என 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் அமைப்பாக இது செயல்பட்டு வருகிறது.

    இந்த குடிநீர் தொட்டிக்கு அருகில் கோவில்பத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும், குடியிருப்புகளும் அமை ந்துள்ளன.இந்த குடிநீர் தொட்டியை தாங்கி நிற்கும் ஆறு தூண்களும் விரிசல் ஏற்பட்டு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் சிதிலம டைந்துள்ளன.

    மேலும் நாளுக்கு நாள் தூண்களில் உள்ள விரிசல்கள் விரிவ டைந்து கொண்டே வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மழை க்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் மண் இளகி தூண்களில் விரிசல் ஏற்பட்டிருக்க கூடும் என்று பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பாக ஆபத்தான நிலையில் உள்ள தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடி க்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×