search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணிகள்"

    • நாமக்கல் மாவட்டத்தில் நாளை (27-ந் தேதி) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
    • நவம்பர் மாதம் 4, 5, 18 மற்றும் 19-ந் தேதி ஆகிய 4 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் நாளை (27-ந் தேதி) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அதன் தொடர்ச்சியாக நாளை முதல் டிசம்பர் மாதம் 9-ந் தேதி வரை புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் குறித்த சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது.

    தவிர நவம்பர் மாதம் 4, 5, 18 மற்றும் 19-ந் தேதி ஆகிய 4 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அந்நாட்களில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த வாக்குசாவடி மையங்களில் பொதுமக்கள் அளிக்கலாம்.

    நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுடைய இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளது. எனவே 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர்களாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள், வருவாய் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் அல்லது தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களுக்கு சென்று படிவம் 6-ல் விண்ணப்பம் செய்து வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • ஊராட்சி துணைத்தலைவர் மஞ்சை.வி. மோகன் ஆய்வு
    • பணிகளை தரமாகவும், குறித்த நேரத்தில் முடிக்கவும் அறிவுறுத்தல்

    ஊட்டி,

    பாலகொலா ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்தின்கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இதன்ஒருபகுதியாக மைனலைமட்டம் பஜார் பகுதியில் ரூ.4.80 லட்சம் மதிப்பில் புதிய கழிவுநீர் கால்வாய்ப்பணிகள் நடக்கிறது.

    இதனை பாலகொலா ஊராட்சி துணைத்தலைவர் மஞ்சை.வி. மோகன் நேரடியாக ஆய்வு செய்து பணிகளை தரமாகவும், குறித்த நேரத்தில் முடிக்கும்படியும் அறிவுறுத்தினார். அப்போது மைனலைமட்டம் வார்டு உறுப்பினர் சுப்பிரமணி, ஊராட்சி செயலாளர் கார்த்திக், ஒப்பந்ததாரர் ராஜன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • ரூ.6.04 கோடியில் உயா்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கியது.
    • 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதம் 15-ந் தேதி முடிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் அருகே வல்லம் - கள்ளப்பெரம்பூா் சாலையில் முதலைமு த்துவாரி கால்வாய் குறுக்கே நடைபெறும் பால கட்டுமானப் பணிகளை கலெக்டர் தீபக்ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது :-

    முதலைமுத்துவாரி கால்வாய் குறுக்கே 43.6 மீட்டா் நீளத்திலும், 10.5 மீட்டா் அகலத்திலும் ரூ. 6.04 கோடியில் உயா்மட்ட பாலம் கட்டும் பணி 2020, நவம்பா் 9 ஆம் தேதி தொடங்கியது.

    அடித்தளப் பணிகள், மேல்தளங்கள், தாங்கு சுவா் அமைக்கும் பணிகள் முடிவுற்று, தற்போது பாலத்தின் தளம், அணுகுசாலைப் பணிகள் நடைபெறுகின்றன. கிட்டத்தட்ட 80 சதவீத பணிகள் நிறைவடை ந்துள்ளன. இக்கட்டுமான பணி நவம்பா் 15 ஆம் தேதி முழுமையாக முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். பின்னா், அவர் திருமலை சமுத்திரம் ஊராட்சியில் மகளிா் சுயஉதவிக் குழுவினா் ரெக்சின் பைகள் தயா ரிப்பதைப் பாா்வையிட்டு, அவா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா். இதையடுத்து, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் செயல்படுகிற நூலகத்தை பாா்வையிட்டு, வருகைப் பதிவேடு, புத்தகங்களின் இருப்பு விவரத்தையும் ஆய்வு செய்தாா்.

    அப்போது நெடுஞ்சா லைத் துறைக் கோட்டப் பொறியாளா் செந்தில்கு மாா், உதவி கோட்டப் பொறியாளா்கள் செந்தி ல்குமாா், கீதா, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் உமாமகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்கொடி , ராஜா, பெர்சியா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • முதல் தளத்தில் 7 கடைகளும், 6 தங்கும் அறைகளும், கழிப்பறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
    • இனிமேல் ஆம்னி பஸ்கள் இந்த நிலையத்திலிருந்து தான் இயக்கப்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை சாலையோரத்தில் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டு இயக்கப்படுவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 10.41 கோடி மதிப்பில் ஆம்னி பஸ் நிலையம் கட்டப்பட்டது.

    சுமார் 5,400 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்நிலையத்தில் 25 பஸ்கள் நிறுத்துவதற்கு ஏற்ப நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தரைதளத்தில் 9 கடைகள், ஆம்னி பேருந்துகளின் 18 அலுவலகங்கள், ஆண், பெண் கழிப்பறைகள், பொருள்கள் வைப்பறை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. முதல் தளத்தில் 7 கடைகளும், 6 தங்கும் அறைகளும், கழிப்பறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிலையத்தைத் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை 27 ஆம் தேதி திறந்து வைத்தார். அதன் பின்னரும் பணிகள் நடைபெற்று வந்ததால், மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், ஆம்னி பஸ் நிலையத்தை நேற்று மாலை பயன்பாட்டுக்கு மேயர் சண். ராமநாதன் கொண்டு வந்தார். இதையடுத்து அங்கிருந்து பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

    அப்போது மேயர் சண் ராமநாதன் கூறுகையில், இனிமேல் ஆம்னி பஸ்கள் இந்நிலையத்திலிருந்து தான் இயக்கப்பட வேண்டும். இதை மீறினால் போக்குவரத்து துறை, காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி, மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சேகர் ,புண்ணியமூர்த்தி மற்றும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • சமூக பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
    • முடிவில் நாட்டு நலத்திட்ட இயக்குனர் முரளிதரன் நன்றி கூறினார்.

    சீர்காழி:

    தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டு தோறும் நாட்டு நல பணி திட்டத்தில் மேல்நிலை முதலாம் ஆண்டு பள்ளி மாணவர்களை வைத்து சமூகப் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    இதன்படி சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நல திட்ட பணி 30 மாணவர்கள் சீர்காழி ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் உள்ள செடிகள்,புற்கள், மற்றும் குப்பைகளை அப்புற ப்படுத்தினர்.

    ரோட்டரி கிளப் ஆப் சீர்காழி டெம்பிள் டவுன் தலைவர் தலைவர் பா. கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை சீர்காழி ரயில் உபயோகிப்பாளர் சங்கத் தலைவர் கஜேந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பி, ரோட்டரி சங்கம் மாவட்ட உதவி ஆளுநர் கணேஷ், செயலாளர் ரவி ,பொருளாளர் சந்தோஷ், முன்னாள் தலைவர்கள் துரைசாமி, மோகனசுந்தர் ரயில் பயணிகள் சங்க செயலாளர் முஸ்தபா, பொருளாளர் நந்தகுமார், இணைச் செயலாளர் மார்க்ஸ் பிரியன், ரயில் சங்க உறுப்பினர் ராஜராஜன், சுதாகர் அப்பாஸ் அலி, சண்முகம் மற்றும் சீர்காழி ரயில் நிலைய அலுவலர் மற்றும் டி.சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலத்திட்ட இயக்குனர் முரளிதரன் நன்றி கூறினார்.

    • தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே திருவதிகை முத்துலட்சுமி நகரில் உள்ள மரத்தில் ஒரு வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாககிடந்தார். இதனை கண்ட அப்பகுதியினர் பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பண்ரு ட்டி அடுத்த தொரப்பாடியை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 29). முந்திரி வியாபாரி என்பதும், இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு பத்திரிக்கை வைக்கும் பணிகள் நடந்து வந்தது. நண்பர்களுக்கு பத்திரிக்கை வைக்க செல்வதாக கூறி வீட்டிலிருந்து மோகன்ராஜ் இன்று காலை வெளியில் சென்றவர் தூக்கில் தொங்கியபடி கிடந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து முந்திரி வியாபாரி மோகன்ராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா என்பது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த ஆண்டு சதய விழா அரசு விழாவாக நடைபெறுகிறது.
    • 2 நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    தஞ்சாவூர்:

    உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் இராஜராஜன் சதய விழா வருகிற 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு சதய விழா அரசு விழாவாக நடைபெறுகிறது. 2 நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    சதய நாளான 25ஆம் தேதி மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. இதேபோல் பல்வேறு கட்சியினர், இயக்கம், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளனர்.

    சதய விழாவை ஒட்டி பெரிய கோயில் வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்காக பந்தல் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. தொடர்ந்து விழா மேடையும் அமைக்கப்படும்.

    • 384 குடியிருப்புகள் ரூ. 31.60 கோடி மதிப்பில் கட்டுமான பணிகள் முடிவு பெற்றுள்ளது.
    • அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளை உரிய காலத்துக்குள் முடிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அய்யனார் கோவில் பகுதி வல்லத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் திட்டத்தின் கீழ் 384 குடியிருப்புகள் ரூ. 31.60 கோடி மதிப்பில் கட்டுமான பணிகள் முடிவு பெற்றுள்ளது.

    இதனை தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குனர் சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் இரண்டாவது திட்டம் பகுதியில் 969 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ. 149.32 கோடி மதிப்பில் வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணிகளை தரமானதாகவும் குறித்த காலத்திற்குள்ளும் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தி னார்.

    இந்த ஆய்வின்போது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் இளம்பரிதி, உதவி செயற்பொறியாளர்கள் யோகேஸ்வரன், உதவி பொறியாளர் கார்த்திக் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நீலகிரி கலெக்டர் அருணா நேரில் ஆய்வு மேற்கொண்டார்
    • மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு சென்று அடிப்படை வசதிகளை பார்வையிட்டார்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பேரூராட்சியில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.49.83 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.

    இதனை கலெக்டர் அருணா நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சாம்ராஜ் அரசு பிற்படுத்தப்பட்ட மாணவியர் மற்றும் ஆதிதிராவிட மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு சென்று அங்கு சமையல்கூடம் மற்றும் அடிப்படை வசதிகளை பார்வையிட்டார்.

    முன்னதாக கிண்ணக் கொரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் நடத்தும் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரருக்கு அத்யாவசிய பொருட்களின் இருப்பு, தரம் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தினார்.

    அப்போது மாவட்ட கலெக்டருடன் ஊரகவ ளர்ச்சிமுகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, குந்தா தாசில்தார் கலைச் செல்வி, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஸ்ரீதரன், நந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தபின் அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி

    நாகர்கோவில்:

    வல்லன்குமாரன்விளை அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் மனோதங்கராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்து உணவை சாப்பிட்டு பார்த்தார்.

    பின்னர் மேலகிருஷ்ணன் புதூர் அரசு நடுநிலைப்பள்ளி யிலும் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப் பட்டு வருகிறது. அந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டோம். சுகாதாரமான ஆய்வு உணவு வழங்கப்படுகிறதா என்ப தை பார்வை யிட்டோம். குமரி மாவட்டத்தில் 325 அரசு பள்ளிகளில் 28,330 மாணவ-மாணவிகள் காலை உணவு திட்டத்தால் பயன்பெறுகிறார்கள். காலை உணவு திட்டம் வழங்கப்படும் பள்ளிகளில் பணம் வாங்குவதாக இது வரை எந்த புகாரும் இல்லை.

    அப்படி வாங்குவதாக புகார் வந்தால் சம்பந்தப் பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கனிம வளங்கள் கடத்தப்படுவதில் எந்த ஒரு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 10 சக்கரத்திற்கு மேல் உள்ள வாகனங்களில் கனிமவளங்களை கொண்டு செல்லக்கூடாது என்று கலெக்டர் தடை விதித்திருந்தார். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு மீண்டும் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இந்த விவகாரத்தை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த வழக்கை நாங்கள் நீதிமன்றத்தின் மூலம் சந்திப்போம்.சபாநாயகர் சட்டப்பேர வையில் மரபுடன் செயல்பட்டு வருகிறார். கடந்த காலங்களில் அ.தி.மு.க. ஆட்சியின் போது சந்தர்ப் பத்திற்கு ஏற்றார் போல பலமுறை மரபு மீறிய செயல்களை செய்துள்ளனர். ஆனால் தி.மு.க. அரசு ஒருபோதும் மரபுகளை மீறியது இல்லை என்பதே வரலாறு. மோடி பொறுப்பேற்ற பின்பு வழக்கத் திற்கும், நாட்டின் நடைமுறைகளுக்கும் மாறாக எதிர் கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மீது அம லாக்கத் துறை சோதனை நடத்தப்படு கிறது. அமலாக்கத்துறை சோதனைகளில் 0.5 சதவீதம் மட்டுமே அம லாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த புள்ளி விபரங்களே அமலாக்கத்துறையின் தவறை காட்டுகிறது.

    அமலாக்கத்துறையின் சோதனை என்பது தனிப்பட்ட நபரின் பெயரை களங்கப்படுத்தும் செயல். ஜெகத்ரட்சகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை என்பது இப்போது நடப்பது இல்லை. பல ஆண்டுகள் நடந்துள்ளது. அவர் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர். சாதாரணமாக கைவிடப் பட்ட திட்டங்களை எந்த அரசும் திரும்ப தொடங்கியதாக சரித்திரம் இல்லை. ஆனால் குமரியில் நான்கு வழிச்சாலை பணி கள் கைவிடப்பட்டும் உடனடியாக தொடங்கி துரிதப்படுத்தியுள்ளோம். விரைவில் கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடையும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கலெக்டர் ஸ்ரீதர், முதன்மை கல்வி அதிகாரி முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கோர்ட்டு பணிகளை ஒருநாள் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு காவிரி நதிநீர் ஆணைய உத்தரவின் படியும் உச்ச நீதிமன்ற உத்தரவின் படியும் காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், பெற்று தர முயற்சிகாத மத்திய அரசை கண்டித்தும் காவிரி கூட்டியக்கம் சார்பில நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சீர்காழி வக்கீல்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற பணிகளை ஒருநாள் புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    வழக்குரைஞர் சங்க தலைவர் ஜீவானந்தம் தலைமையில், செயலாளார் மணிவண்ணன் , பொருளாளர் ராம்குமார் முன்னிலையில் துணைத் தலைவர்கள் கவிதா, தாமஸ் குமார், துணை செயலாளர்கள் சுதா,ஆனந்த ,செந்தில்குமார் ,விஜய் பொருளாளர் ராம்குமார் மூத்த வழக்கறிஞர்கள் வீரமணி, சுந்தரையா,வெங்கடேசன், ரங்கராஜ் அப்துல்லாசா,குமரேசன்,ஆத்மநாதன்,கார்த்திக் கலந்து கொண்டனர்.

    • 315 திட்டங்களை நிறைவேற்றி மகத்தான சாதனை
    • ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், வட்டார வளரச்சி அலுவலர்கள் ஸ்ரீதரன், நந்தகுமார் ஆகியோர் உற்சாகம்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடப்பு நிதியாண்டில் ரூ.8.58 கோடி மதிப்பில் மக்கள் நலத்திட்டப்பணிகளை நிறைவேற்றி சாதனை படைத்து உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய தலைவராக மாயன், வட்டார வளரச்சி அலுவலர்களாக ஸ்ரீதரன், நந்தகுமார் ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களும் பயன்பெரும் வகையில் பல்வேறு மக்கள் நலப்பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது.

    அதிலும் குறிப்பாக மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதிதிட்டம் மூலம் 230 பணிகள், ரூ.523 லட்சம் மதிப்பிலும், அனைத்து கிராம ஆண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 மூலம் 24 பணிகள் சுமார் ரூ.133 லட்சம் மதிப்பிலும், மாவட்ட ஊராட்சி பொது நிதி பணிகள் மூலம் 5 திட்டப்பணிகள் ரூ.24 லட்சம் மதிப்பிலும் மேற்கொள்ளபட்டு வருகிறது.

    வட்டார வளர்ச்சி பொதுநிதி பணிகள் மூலம் 48 திட்டப்பணிகள் ரூ.94 லட்சம் மதிப்பிலும், கிராம வளர்ச்சி பொதுநிதி பணிகள் மூலம் 5 திட்டப்ப ணிகள் ரூ.4.60 லட்சம் மதிப்பிலும், நமக்குநாமே திட்டம் மூலம் 3 பணிகள், ரூ.77 லட்சம் மதிப்பில் நடந்து வருகின்றன.

    ஊட்டியில் ஒட்டு மொத்தமாக ஒரே நிதி ஆண்டில் 315 மக்கள் நலத்திட்டப்பணிகளை ரூ.8.58 கோடி மதிப்பில் செயல்படுத்தி ஊராட்சி ஒன்றியம் சாதனை படைத்து வருகிறது.

    ×