search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலைமுத்துவாரி பால கட்டுமான பணி அடுத்த மாதம் முடிவடையும்- கலெக்டர் தகவல்
    X

    கட்டுமான பணிகளை கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆய்வு செய்தார்.

    முதலைமுத்துவாரி பால கட்டுமான பணி அடுத்த மாதம் முடிவடையும்- கலெக்டர் தகவல்

    • ரூ.6.04 கோடியில் உயா்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கியது.
    • 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதம் 15-ந் தேதி முடிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் அருகே வல்லம் - கள்ளப்பெரம்பூா் சாலையில் முதலைமு த்துவாரி கால்வாய் குறுக்கே நடைபெறும் பால கட்டுமானப் பணிகளை கலெக்டர் தீபக்ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது :-

    முதலைமுத்துவாரி கால்வாய் குறுக்கே 43.6 மீட்டா் நீளத்திலும், 10.5 மீட்டா் அகலத்திலும் ரூ. 6.04 கோடியில் உயா்மட்ட பாலம் கட்டும் பணி 2020, நவம்பா் 9 ஆம் தேதி தொடங்கியது.

    அடித்தளப் பணிகள், மேல்தளங்கள், தாங்கு சுவா் அமைக்கும் பணிகள் முடிவுற்று, தற்போது பாலத்தின் தளம், அணுகுசாலைப் பணிகள் நடைபெறுகின்றன. கிட்டத்தட்ட 80 சதவீத பணிகள் நிறைவடை ந்துள்ளன. இக்கட்டுமான பணி நவம்பா் 15 ஆம் தேதி முழுமையாக முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். பின்னா், அவர் திருமலை சமுத்திரம் ஊராட்சியில் மகளிா் சுயஉதவிக் குழுவினா் ரெக்சின் பைகள் தயா ரிப்பதைப் பாா்வையிட்டு, அவா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா். இதையடுத்து, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் செயல்படுகிற நூலகத்தை பாா்வையிட்டு, வருகைப் பதிவேடு, புத்தகங்களின் இருப்பு விவரத்தையும் ஆய்வு செய்தாா்.

    அப்போது நெடுஞ்சா லைத் துறைக் கோட்டப் பொறியாளா் செந்தில்கு மாா், உதவி கோட்டப் பொறியாளா்கள் செந்தி ல்குமாா், கீதா, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் உமாமகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்கொடி , ராஜா, பெர்சியா ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×