search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நான்கு"

    • 4 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட பணி மீண்டும் தொடங்கியது
    • வழக்குகள் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அனுப்பப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி-நாகர்கோ வில், காவல்கிணறு- நாகர்கோவில், நாகர்கோவில்-வில்லுக்குறி, வில்லுக்குறி-உச்சக்கடை என 4 பிரிவுகளாக நான்கு வழிச்சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முற்றிலும் புதிய வழித்தடமாக அமையும் இந்த சாலை நீர் நிலைகளை பாதிக்கும் என்றும் எனவே ஏற்கனவே இருக்கும் என்.எச்.47 சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் பல்வேறு வழக்குகள் உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டன. பின்னர் இந்த வழக்குகள் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அனுப்பப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் கமிட்டி ஆய்வு செய்து அளித்த அறிக்கை யின்படி நீர்நிலைகள் பாதிக் காமல் பாலங்கள் அமைத்து கொள்ள பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இதில் குமரி மாவட்டத்தில் 29 பெரிய பாலங்களும், 12 சிறிய பாலங்களும், 2 இடங்க ளில் தண்ணீர் செல்லும் குழாய்களும், 75 பெரிய கல்வெர்ட்களும் 8 இடங்களில் சிறியகல்வெர்ட்களும் அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    அந்த அடிப்படையில் இந்த 4 வழிசாலை பணிக்காக குமரி மாவட்டத்தில் உள்ள தாம ரைக்குளம், பொட்டக் குளம், புதுக்குளம், நட்டாலம் மவுதக்குளம், மாம்பள்ளி குளம், செட்டிகுளம், பகவதிக்குளம், ரெட்டை குளம், அரசமுத்துகுளம், பிலாஞ்சேரிகுளம், வெள்ளி யாகுளம், பாம்பாட்டிகுளம், செல்லாக்குளம்-1, செல்லா க்குளம்-2, நாச்சியார்குளம், கரிச்சான்குளம், அம்பலத்தடி குளம், குதிரை பாஞ்சான் குளம், அனந்தன்குளம்-1, அனந்தன்குளம்- 2, தேவன் குளம், பாணாகுளம், சுந்தர நைனார்குளம், நிலப் பாறைக்குளம், கிருஷ்ண சமுத்திரகுளம், புத்தேரிகுளம், பிராந்த நேரிகுளம், புரு ஷோத்தமநேரிகுளம், தாணு மாலையன்குளம், புளி யன்குளம், கண்டுகிருஷிகுளம், பள்ளக்குளம், ராஜேந்திரிகுளம், மந்தாரம்புதூர் குளம், தேவகுளம், கவற்குளம், அகஸ்தியர்குளம், பன்னிக்குண்டுகுளம், நுள்ளி குளம் ஆகிய குளங்களில் பாலம் அமைக்க பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது.

    இந்த பாலங்களை அமைக்க கூடுதலாக ரூ.490 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் வடுகன்பற்று அகஸ்தியர்குளம், பொற்றையடி பள்ளக்குளம் உள்பட பல குளங்களில் 4 வழிசாலைக்காக பாலங்கள் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பூர்வாங்க பணிகள் தொடங்கி உள்ளது. இதற்காக இந்த குளங்களில் மேம்பாலங்கள் அமைப்பதற்காக ராட்சத எந்திரங்கள் மூலம் சிமெண்ட் பிளாக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதில் கன்னியாகுமரி-களியக்காவிளை இடையி லான நான்கு வழிசாலையில் கொட்டாரம்-அகஸ்தீஸ்வரம் சாலையின் குறுக்கே வடுகன் பற்று பகுதியில் மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் இருபுறமும் மண் நிரப்பி இணைப்பு சாலை அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் கொட்டாரம் பகுதியில் நான்கு வழி சாலை முழுமை அடையாமல் இருந்தது.

    இந்த நிலையில் 4 வருடங்க ளுக்கு பிறகு கொட்டாரம் நான்கு வழிச்சாலை மேம் பாலத்தை இணைக்கு வகையில் தற்போது இருபுற மும் ஏராளமான டாரஸ் லாரிகள் மூலம் மண் கொண்டு வந்து நிரப்பப்பட்டு "ரோடுரோலர்" மூலம் இணைப்பு சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வரு கிறது. கொட்டாரம் பகுதியில் நடந்து வரும் இந்த நான்கு வழிசாலை மேம்பால இணைப்பு சாலை அமைக்கும் பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் என்ஜீ னியர்கள் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தபின் அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி

    நாகர்கோவில்:

    வல்லன்குமாரன்விளை அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் மனோதங்கராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்து உணவை சாப்பிட்டு பார்த்தார்.

    பின்னர் மேலகிருஷ்ணன் புதூர் அரசு நடுநிலைப்பள்ளி யிலும் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப் பட்டு வருகிறது. அந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டோம். சுகாதாரமான ஆய்வு உணவு வழங்கப்படுகிறதா என்ப தை பார்வை யிட்டோம். குமரி மாவட்டத்தில் 325 அரசு பள்ளிகளில் 28,330 மாணவ-மாணவிகள் காலை உணவு திட்டத்தால் பயன்பெறுகிறார்கள். காலை உணவு திட்டம் வழங்கப்படும் பள்ளிகளில் பணம் வாங்குவதாக இது வரை எந்த புகாரும் இல்லை.

    அப்படி வாங்குவதாக புகார் வந்தால் சம்பந்தப் பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கனிம வளங்கள் கடத்தப்படுவதில் எந்த ஒரு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 10 சக்கரத்திற்கு மேல் உள்ள வாகனங்களில் கனிமவளங்களை கொண்டு செல்லக்கூடாது என்று கலெக்டர் தடை விதித்திருந்தார். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு மீண்டும் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இந்த விவகாரத்தை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த வழக்கை நாங்கள் நீதிமன்றத்தின் மூலம் சந்திப்போம்.சபாநாயகர் சட்டப்பேர வையில் மரபுடன் செயல்பட்டு வருகிறார். கடந்த காலங்களில் அ.தி.மு.க. ஆட்சியின் போது சந்தர்ப் பத்திற்கு ஏற்றார் போல பலமுறை மரபு மீறிய செயல்களை செய்துள்ளனர். ஆனால் தி.மு.க. அரசு ஒருபோதும் மரபுகளை மீறியது இல்லை என்பதே வரலாறு. மோடி பொறுப்பேற்ற பின்பு வழக்கத் திற்கும், நாட்டின் நடைமுறைகளுக்கும் மாறாக எதிர் கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மீது அம லாக்கத் துறை சோதனை நடத்தப்படு கிறது. அமலாக்கத்துறை சோதனைகளில் 0.5 சதவீதம் மட்டுமே அம லாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த புள்ளி விபரங்களே அமலாக்கத்துறையின் தவறை காட்டுகிறது.

    அமலாக்கத்துறையின் சோதனை என்பது தனிப்பட்ட நபரின் பெயரை களங்கப்படுத்தும் செயல். ஜெகத்ரட்சகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை என்பது இப்போது நடப்பது இல்லை. பல ஆண்டுகள் நடந்துள்ளது. அவர் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர். சாதாரணமாக கைவிடப் பட்ட திட்டங்களை எந்த அரசும் திரும்ப தொடங்கியதாக சரித்திரம் இல்லை. ஆனால் குமரியில் நான்கு வழிச்சாலை பணி கள் கைவிடப்பட்டும் உடனடியாக தொடங்கி துரிதப்படுத்தியுள்ளோம். விரைவில் கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடையும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கலெக்டர் ஸ்ரீதர், முதன்மை கல்வி அதிகாரி முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×