search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணைப்பு சாலை"

    • இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    கடலூர்:

    கடலூரில் பலத்த மழை பெய்த காரணத்தினால் 28-வது வார்டு திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீதேவி நகர், குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றிலும் மழை நீர் குளம் போல் தேங்கியது. இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர் சக்திவேல், பா.ஜனதா மாநகரத் தலைவர் வேலு வெங்கடேசன் தலைமையில் நத்தவெளி- சரவணா நகர் இணைப்பு சாலையில் ஆகாய தாமரைகளுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

    • மழைக்காலம் தொடங்கும் முன்பே சாலை சேதமடைந்து காணப்பட்டது.
    • மக்கள் பிரதிநிதிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை

    இரணியல் :

    கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட குருந்தன்கோடு ஒன்றியத்தில் தலக்குளம் வள்ளியாற்று பாலத்தில் இரு பக்கங்களிலும் சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக் கற்ற நிலையில் உள்ளது.

    கடந்த ஆண்டு வள்ளி ஆற்றின் மேல் சுமார் ரூ.2 கோடி செலவில் புதிய பாலம் அமைக்கப்பட்டது. அத்துடன் இரணியல் முட் டம் வழித்தடத்தில் செல்லும் சாலைக்கு இணைப்பு சாலை அமைக்கப்பட்டது. மழைக்காலம் தொடங்கும் முன்பே சாலை சேதமடைந்து காணப்பட்டது. தற்போது மழைநீர் பள்ளங்களில் நிரம்பிய நிலையில் காணப் படுகிறது. திங்கள்நகரில் இருந்து வெள்ளிமலை, முட்டம், அம்மாண்டிவிளை செல்லும் மினி பஸ், அரசு பஸ் மற்றும் தனியார் வாக னங்கள் வள்ளி ஆற்றின் வழியாக செல்லும்போது குண்டு குழியாக உள்ள சாலையில் தள்ளாடியபடி ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது.

    மேலும் அப்பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவ வாய்ப் புள்ளது. எனவே தலக்குளம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 4 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட பணி மீண்டும் தொடங்கியது
    • வழக்குகள் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அனுப்பப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி-நாகர்கோ வில், காவல்கிணறு- நாகர்கோவில், நாகர்கோவில்-வில்லுக்குறி, வில்லுக்குறி-உச்சக்கடை என 4 பிரிவுகளாக நான்கு வழிச்சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முற்றிலும் புதிய வழித்தடமாக அமையும் இந்த சாலை நீர் நிலைகளை பாதிக்கும் என்றும் எனவே ஏற்கனவே இருக்கும் என்.எச்.47 சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் பல்வேறு வழக்குகள் உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டன. பின்னர் இந்த வழக்குகள் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அனுப்பப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் கமிட்டி ஆய்வு செய்து அளித்த அறிக்கை யின்படி நீர்நிலைகள் பாதிக் காமல் பாலங்கள் அமைத்து கொள்ள பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இதில் குமரி மாவட்டத்தில் 29 பெரிய பாலங்களும், 12 சிறிய பாலங்களும், 2 இடங்க ளில் தண்ணீர் செல்லும் குழாய்களும், 75 பெரிய கல்வெர்ட்களும் 8 இடங்களில் சிறியகல்வெர்ட்களும் அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    அந்த அடிப்படையில் இந்த 4 வழிசாலை பணிக்காக குமரி மாவட்டத்தில் உள்ள தாம ரைக்குளம், பொட்டக் குளம், புதுக்குளம், நட்டாலம் மவுதக்குளம், மாம்பள்ளி குளம், செட்டிகுளம், பகவதிக்குளம், ரெட்டை குளம், அரசமுத்துகுளம், பிலாஞ்சேரிகுளம், வெள்ளி யாகுளம், பாம்பாட்டிகுளம், செல்லாக்குளம்-1, செல்லா க்குளம்-2, நாச்சியார்குளம், கரிச்சான்குளம், அம்பலத்தடி குளம், குதிரை பாஞ்சான் குளம், அனந்தன்குளம்-1, அனந்தன்குளம்- 2, தேவன் குளம், பாணாகுளம், சுந்தர நைனார்குளம், நிலப் பாறைக்குளம், கிருஷ்ண சமுத்திரகுளம், புத்தேரிகுளம், பிராந்த நேரிகுளம், புரு ஷோத்தமநேரிகுளம், தாணு மாலையன்குளம், புளி யன்குளம், கண்டுகிருஷிகுளம், பள்ளக்குளம், ராஜேந்திரிகுளம், மந்தாரம்புதூர் குளம், தேவகுளம், கவற்குளம், அகஸ்தியர்குளம், பன்னிக்குண்டுகுளம், நுள்ளி குளம் ஆகிய குளங்களில் பாலம் அமைக்க பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது.

    இந்த பாலங்களை அமைக்க கூடுதலாக ரூ.490 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் வடுகன்பற்று அகஸ்தியர்குளம், பொற்றையடி பள்ளக்குளம் உள்பட பல குளங்களில் 4 வழிசாலைக்காக பாலங்கள் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பூர்வாங்க பணிகள் தொடங்கி உள்ளது. இதற்காக இந்த குளங்களில் மேம்பாலங்கள் அமைப்பதற்காக ராட்சத எந்திரங்கள் மூலம் சிமெண்ட் பிளாக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதில் கன்னியாகுமரி-களியக்காவிளை இடையி லான நான்கு வழிசாலையில் கொட்டாரம்-அகஸ்தீஸ்வரம் சாலையின் குறுக்கே வடுகன் பற்று பகுதியில் மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் இருபுறமும் மண் நிரப்பி இணைப்பு சாலை அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் கொட்டாரம் பகுதியில் நான்கு வழி சாலை முழுமை அடையாமல் இருந்தது.

    இந்த நிலையில் 4 வருடங்க ளுக்கு பிறகு கொட்டாரம் நான்கு வழிச்சாலை மேம் பாலத்தை இணைக்கு வகையில் தற்போது இருபுற மும் ஏராளமான டாரஸ் லாரிகள் மூலம் மண் கொண்டு வந்து நிரப்பப்பட்டு "ரோடுரோலர்" மூலம் இணைப்பு சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வரு கிறது. கொட்டாரம் பகுதியில் நடந்து வரும் இந்த நான்கு வழிசாலை மேம்பால இணைப்பு சாலை அமைக்கும் பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் என்ஜீ னியர்கள் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    • 2 மாநில நெடுஞ்சாலைகளையும் இணைக் கின்ற இணைப்பு சாலையாக இருப்பதால் அதிகப்படியான கனரக வாகனங்கள் செல்கின்றன.
    • காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

    மார்த்தாண்டம் :

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூசாரி- பாலூர் சாலையானது சுமார் 420 மீட்டர் நீளம் கொண்ட சாலை. இந்த சாலை கருங்கல்- – மார்த்தாண்டம், கருங்கல் –- புதுக்கடை ஆகிய 2 மாநில நெடுஞ்சாலைகளை இணைப்பதும், திப்பிறமலை கிராம ஊராட்சியையும் பாலூர் கிராம ஊராட்சி யையும் இணைப்பதுமான இணைப்பு சாலையாகும்.

    2 மாநில நெடுஞ்சாலைகளையும் இணைக் கின்ற இணைப்பு சாலையாக இருப்பதால் அதிகப்படியான கனரக வாகனங்கள் செல்கின்றன. நீண்டகாலமாக இந்த சாலை செப்பனிடாத காரணத்தினாலும், கடந்த வருடம் பெய்த பெரும் கனமழையினாலும் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் கணப்பட்டது. இதனால் இந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வ தற்கும் முடியாத நிலையில் அவதிப்பட்டனர்.

    எனவே இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மூசாரி – பாலூர் செல்லும் சாலையை நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் துறையின் மூலமாக தேர்வு செய்து அரசாணை பிறப்பித்து தரம் உயர்த்தி உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுக்கள் அளித்து கோரிக்கை வைத்து வந்தார்.

    இதனையடுத்து இந்த சாலையை கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து நெடுஞ்சாலை துறைக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டது. நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராம சாலை அலகினால் மாவட்ட இதர சாலையாக தரம் உயர்த்தி ரூ.30 லட்சத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

    இப்பணிக்கான மதிப்பீடு தயாரிக்கும் போது பொது மக்களால் சாலையின் மொத்த அகலத்திற்கும் ஓடுதளம் அமைக்க கோரப்பட்டதை தொடர்ந்து 3.75 மீட்டர் தார் தளமும் அதன் இரு புறங்களிலும் பாவு தளமும் அமைத்திட ரூ.80 லட்சம் வரை தேவைப்பட்டதால் இப்பணிக்கான கூடுதல் தொகை ரூ.50 லட்சம், கூடுதலாக ரூ.80 லட்சத்திற்கு திருத்திய நிர்வாக அனுமதிக்கான கருத்துரு தலைமை பொறியாளர் நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராம சாலைகள் சமர்பிக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் ரூ.80 லட்சம் திருத்தி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பால்வளத்துறை அமைச்சர் மற்றும் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் சேர்த்து சாலை சீரமைக்கும் பணியினை தொடங்கி வைத்தனர். இதனையடுத்து சாலை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சாலை சீரமைக்கும் பணியை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், பாலூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் சுரேஷ் கியூபர்ட் ராஜ், திப்பிறமலை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் பிறைட், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் லெனின் குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

    • கரையிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர்.
    • பெரும்பாலும் ரெயில்வே கேட் மூடப்பட்டே இருப்பதால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர்.

    நெல்லை:

    தி.மு.க. மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், தமிழக அரசு சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தார். அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாநகராட்சி 2-வது வார்டுக்குட்பட்ட கரையிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இங்கு நெல்லை விதை ஆராய்ச்சி மையம் சுமார் 100 ஏக்கரில் உள்ளது. இங்குள்ள அமிர்தம்மாள் உயர்நிலைப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

    இதனை சுற்றியுள்ள கிராமங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் பணி நிமித்தமாக மதுரை சாலைக்கு வந்து தான் பஸ் ஏறவேண்டிய நிலை உள்ளது. இந்த சாலையில் ரெயில்வே தண்டவாளம் குறுக்காக உள்ளது. இந்த வழித்தடம் வழியாக சென்னை செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் செல்கின்றன. இதனால் பெரும்பாலும் ரெயில்வே கேட் மூடப்பட்டே காட்சியளிக்கிறது.

    இதனால் இந்த பாதையை பயன்படுத்தும் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். எனவே அமிர்தம்மாள் பள்ளி அருகில் இருந்து தச்சநல்லூர் பைபாஸ் சாலைக்கு இணைப்பு சாலை அமைத்து கொடுத்தால் கரையிருப்பு, குறிச்சிகுளம், சுந்தராபுரம், செட்டிகுளம் கிராம மக்கள் பயன் அடைவார்கள்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ்- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
    • தமிழ்நாடு அரசால் ரூ.80 லட்சம் திருத்திய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி : 

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூசாரி-–பாலூர் சாலையானது சுமார் 420 மீட்டர் நீளம் கொண்டது. இந்த சாலை கருங்கல்-– மார்த்தாண்டம், கருங்கல்-–புதுக்கடை ஆகிய 2 நெடுஞ்சாலைகளை இணைப்பதும், திப்பிறமலை கிராம ஊராட்சியையும், பாலூர் கிராம ஊராட்சியையும் இணைப்பதுமான இணைப்பு சாலையாகும்.

    இந்த சாலை 2 மாநில நெடுஞ்சாலைகளையும் இணைக்கின்ற இணைப்பு சாலையாக இருப்பதால் அதிகப்படியான கனரக வாகனங்கள் செல்கின்றன. நீண்ட காலமாக இந்த சாலை செப்பனிடாத காரணத்தினாலும், கடந்த வருடம் பெய்த மழையினாலும் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது.

    இந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் முடியாத நிலை இருந்தது. இதனால் சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அவர் நபார்டு மற்றும் கிராம சாலைகள் துறையின் மூலமாக உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுக்கள் அளித்து கோரிக்கை வைத்து வந்தார்.

    இதனையடுத்து இந்த சாலையை கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நெடுஞ்சாலை துறைக்கு ஒப்படைப்பு செய்யப் பட்டதா கும். நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராம சாலை அலகினால் மாவட்ட இதர சாலையாக தரம் உயர்த்தி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு அரசால் ரூ.80 லட்சம் திருத்திய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதனையடுத்து சாலை சீரமைக்கும் பணியை அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோபால், ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணிபாய் மற்றும் காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராள மானோர் கலந்துகொண்டனர்.

    • திருப்புகலூர் மேலப்பகுதி முதல் அரசூர் வரை உள்ள இணைப்பு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
    • திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் திருப்புகலூர் மேலப்பகுதி முதல் கீழஆமப்பட்டம், வவ்வாலடி, அரசூர் வரை உள்ள இணைப்பு சாலை ரூ.4 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன் முன்னிலை வகித்து சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுஜாதா ஆசைத்தம்பி, பேபிசரளா பக்கிரிசாமி, ஒன்றிய பொறியாளர் செந்தில், ஊராட்சி செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

    ×