search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Link Road"

    • இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    கடலூர்:

    கடலூரில் பலத்த மழை பெய்த காரணத்தினால் 28-வது வார்டு திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீதேவி நகர், குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றிலும் மழை நீர் குளம் போல் தேங்கியது. இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர் சக்திவேல், பா.ஜனதா மாநகரத் தலைவர் வேலு வெங்கடேசன் தலைமையில் நத்தவெளி- சரவணா நகர் இணைப்பு சாலையில் ஆகாய தாமரைகளுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

    • திருப்புகலூர் மேலப்பகுதி முதல் அரசூர் வரை உள்ள இணைப்பு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
    • திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் திருப்புகலூர் மேலப்பகுதி முதல் கீழஆமப்பட்டம், வவ்வாலடி, அரசூர் வரை உள்ள இணைப்பு சாலை ரூ.4 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன் முன்னிலை வகித்து சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுஜாதா ஆசைத்தம்பி, பேபிசரளா பக்கிரிசாமி, ஒன்றிய பொறியாளர் செந்தில், ஊராட்சி செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

    ×