search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைக்கும் பணி"

    • 4 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட பணி மீண்டும் தொடங்கியது
    • வழக்குகள் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அனுப்பப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி-நாகர்கோ வில், காவல்கிணறு- நாகர்கோவில், நாகர்கோவில்-வில்லுக்குறி, வில்லுக்குறி-உச்சக்கடை என 4 பிரிவுகளாக நான்கு வழிச்சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முற்றிலும் புதிய வழித்தடமாக அமையும் இந்த சாலை நீர் நிலைகளை பாதிக்கும் என்றும் எனவே ஏற்கனவே இருக்கும் என்.எச்.47 சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் பல்வேறு வழக்குகள் உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டன. பின்னர் இந்த வழக்குகள் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அனுப்பப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் கமிட்டி ஆய்வு செய்து அளித்த அறிக்கை யின்படி நீர்நிலைகள் பாதிக் காமல் பாலங்கள் அமைத்து கொள்ள பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இதில் குமரி மாவட்டத்தில் 29 பெரிய பாலங்களும், 12 சிறிய பாலங்களும், 2 இடங்க ளில் தண்ணீர் செல்லும் குழாய்களும், 75 பெரிய கல்வெர்ட்களும் 8 இடங்களில் சிறியகல்வெர்ட்களும் அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    அந்த அடிப்படையில் இந்த 4 வழிசாலை பணிக்காக குமரி மாவட்டத்தில் உள்ள தாம ரைக்குளம், பொட்டக் குளம், புதுக்குளம், நட்டாலம் மவுதக்குளம், மாம்பள்ளி குளம், செட்டிகுளம், பகவதிக்குளம், ரெட்டை குளம், அரசமுத்துகுளம், பிலாஞ்சேரிகுளம், வெள்ளி யாகுளம், பாம்பாட்டிகுளம், செல்லாக்குளம்-1, செல்லா க்குளம்-2, நாச்சியார்குளம், கரிச்சான்குளம், அம்பலத்தடி குளம், குதிரை பாஞ்சான் குளம், அனந்தன்குளம்-1, அனந்தன்குளம்- 2, தேவன் குளம், பாணாகுளம், சுந்தர நைனார்குளம், நிலப் பாறைக்குளம், கிருஷ்ண சமுத்திரகுளம், புத்தேரிகுளம், பிராந்த நேரிகுளம், புரு ஷோத்தமநேரிகுளம், தாணு மாலையன்குளம், புளி யன்குளம், கண்டுகிருஷிகுளம், பள்ளக்குளம், ராஜேந்திரிகுளம், மந்தாரம்புதூர் குளம், தேவகுளம், கவற்குளம், அகஸ்தியர்குளம், பன்னிக்குண்டுகுளம், நுள்ளி குளம் ஆகிய குளங்களில் பாலம் அமைக்க பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது.

    இந்த பாலங்களை அமைக்க கூடுதலாக ரூ.490 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் வடுகன்பற்று அகஸ்தியர்குளம், பொற்றையடி பள்ளக்குளம் உள்பட பல குளங்களில் 4 வழிசாலைக்காக பாலங்கள் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பூர்வாங்க பணிகள் தொடங்கி உள்ளது. இதற்காக இந்த குளங்களில் மேம்பாலங்கள் அமைப்பதற்காக ராட்சத எந்திரங்கள் மூலம் சிமெண்ட் பிளாக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதில் கன்னியாகுமரி-களியக்காவிளை இடையி லான நான்கு வழிசாலையில் கொட்டாரம்-அகஸ்தீஸ்வரம் சாலையின் குறுக்கே வடுகன் பற்று பகுதியில் மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் இருபுறமும் மண் நிரப்பி இணைப்பு சாலை அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் கொட்டாரம் பகுதியில் நான்கு வழி சாலை முழுமை அடையாமல் இருந்தது.

    இந்த நிலையில் 4 வருடங்க ளுக்கு பிறகு கொட்டாரம் நான்கு வழிச்சாலை மேம் பாலத்தை இணைக்கு வகையில் தற்போது இருபுற மும் ஏராளமான டாரஸ் லாரிகள் மூலம் மண் கொண்டு வந்து நிரப்பப்பட்டு "ரோடுரோலர்" மூலம் இணைப்பு சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வரு கிறது. கொட்டாரம் பகுதியில் நடந்து வரும் இந்த நான்கு வழிசாலை மேம்பால இணைப்பு சாலை அமைக்கும் பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் என்ஜீ னியர்கள் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    • நெடுஞ்சாலை துறை மூலமாக நிதி பெற்று அங்கு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.
    • நேரில் சென்று பணி நடைபெறும் இடத்தை அருள் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களை சந்தித்து பேசினார்.

    சேலம்:

    சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட 22-வது கோட்டம் சிவதாபுரத்தில் பெரு மழை காலங்களில் சேலத்தாம்பட்டி ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் மழை நீர் ஒரு சொட்டு கூட ஊருக்குள் தேங்காமல் வெளியேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பிரச்சனை குறித்து பா.ம.க. அருள் எம்.எல்.ஏ. எடுத்துக் கூறினார்.

    இதையடுத்து நெடுஞ்சாலை துறை மூலமாக நிதி பெற்று அங்கு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

    ஆய்வு

    இந்த நிலையில் சித்தர் கோவில் மெயின் ரோட்டில் நடைபெற்று வரும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி மிகவும் தொய்வு ஏற்பட்ட காரணத்தினால் சாக்கடை கால்வாய் அருகில் உள்ள வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி செய்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்து உடனடியாக நேரில் சென்று பணி நடைபெறும் இடத்தை அருள் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களை சந்தித்து பேசினார்.

    நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக பணியினை தொடங்க வேண்டும். இல்லை என்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்க ளுடன் சேர்ந்து நானும் சாலை மறியல் ஈடுபடுவேன் கூறினார். அதன் அடிப்படையில் உடனடியாக அதிகாரிகள் பணியை தொடங்கினார்கள்.

    அப்போது அவருடன் மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட துணைச் செயலாளர் சேகர், பகுதி செயலாளர் சமயவேல், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் அருண், கோட்டச் செயலாளர் குமார், கோட்ட தலைவர் சுரேஷ், பகுதி அமைப்புச் செயலாளர் கோவிந்தன், மாணவரணி சஞ்சய், ஸ்ரீகாந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வள்ளுவன் தோப்பு கிராமத்தில் பிள்ளை வீட்டு குளம் உள்ளது.
    • படித்துறை அமைத்து தர வேண்டி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி வள்ளுவன் தோப்பு கிராமத்தில் பிள்ளை வீட்டு குளம் உள்ளது.

    இக்குளத்தில் படித்துறை இல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இருந்தது.

    இந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு படித்துறை அமைத்து தர வேண்டி அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.அரசு கோரிக்கையை ஏற்று பொது நிதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் படித்துறை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகளை ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுரேஷ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் உடனிருந்தனர்.

    • கீரிபள்ளம் ஓடையில் உயர்மட்டபாலம் அமைக்கும் பணி.
    • தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியினை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய த்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறை வேற்றும் வகையில் நீர்வளத்துறையின் சார்பில் பொதுநிதியில் இருந்து ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட,

    வெள்ளாள பாளையம் ஊராட்சி, பாரியூர் கீரிபள்ளம் ஓடையில் உயர்மட்டபாலம் அமைக்கும் பணியினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில்,

    அமைச்சர் முத்துசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து பாலம் அமைக்கும் பணியினை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டி ற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் இந்த உயர்மட்ட பாலம் சுமார் 16 மீட்டர் நீளத்திற்கு அமையவுள்ளது. ஓடையின் இருபுறமும் பக்க வாட்டு சுவர் அமைக்கப்படவுள்ளது.

    முன்னதாக கோபிசெட்டி பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட, பொலவகாளிபாளையம் கால்நடை மருத்துவமனை அருகில் தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியினை அமைச்சர் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி, கோபி செட்டி பாளையம் நகராட்சி தலைவர் நாகராஜ், செயற்பொ றியாளர் (பவானிசாகர் அணைக்கோ ட்டம்) அருள் அழகன்,

    உதவிசெய ற்பொறியாளர் சதீஷ்குமார், கோபிசெட்டி பாளையம் தாசில்தார் (பொறுப்பு) சிவசங்கர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விரைவில் கல்லூரி அமைக்கும் பணி தொடங்கும்
    • அதிகாரிகள் தகவல்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நாட்டறம்பள்ளி பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைப்ப தற்காக இடங்களை தேர்வு செய்ய உத்தரவிட்டார்.

    அதன் பேரில் நாட்டறம்பள்ளியை அடுத்த கே.பந்தாரப்பள்ளி பகுதியில் சர்வோதய சங்கத்தின் கட்டுப்பட்டில் உள்ள 15 ஏக்கர் இடத்தில் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவ லர் சந்தீப் மற்றும் வருவாய்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணியை தொடங்கினர்.

    அந்த இடத் தில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் அரசு நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டு விரைவில் அரசு கலைக் கல்லூரி அமைக்கும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×