search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Duties"

    • நீலகிரி கலெக்டர் அருணா நேரில் ஆய்வு மேற்கொண்டார்
    • மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு சென்று அடிப்படை வசதிகளை பார்வையிட்டார்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பேரூராட்சியில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.49.83 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.

    இதனை கலெக்டர் அருணா நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சாம்ராஜ் அரசு பிற்படுத்தப்பட்ட மாணவியர் மற்றும் ஆதிதிராவிட மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு சென்று அங்கு சமையல்கூடம் மற்றும் அடிப்படை வசதிகளை பார்வையிட்டார்.

    முன்னதாக கிண்ணக் கொரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் நடத்தும் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரருக்கு அத்யாவசிய பொருட்களின் இருப்பு, தரம் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தினார்.

    அப்போது மாவட்ட கலெக்டருடன் ஊரகவ ளர்ச்சிமுகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, குந்தா தாசில்தார் கலைச் செல்வி, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஸ்ரீதரன், நந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • 315 திட்டங்களை நிறைவேற்றி மகத்தான சாதனை
    • ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், வட்டார வளரச்சி அலுவலர்கள் ஸ்ரீதரன், நந்தகுமார் ஆகியோர் உற்சாகம்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடப்பு நிதியாண்டில் ரூ.8.58 கோடி மதிப்பில் மக்கள் நலத்திட்டப்பணிகளை நிறைவேற்றி சாதனை படைத்து உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய தலைவராக மாயன், வட்டார வளரச்சி அலுவலர்களாக ஸ்ரீதரன், நந்தகுமார் ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களும் பயன்பெரும் வகையில் பல்வேறு மக்கள் நலப்பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது.

    அதிலும் குறிப்பாக மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதிதிட்டம் மூலம் 230 பணிகள், ரூ.523 லட்சம் மதிப்பிலும், அனைத்து கிராம ஆண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 மூலம் 24 பணிகள் சுமார் ரூ.133 லட்சம் மதிப்பிலும், மாவட்ட ஊராட்சி பொது நிதி பணிகள் மூலம் 5 திட்டப்பணிகள் ரூ.24 லட்சம் மதிப்பிலும் மேற்கொள்ளபட்டு வருகிறது.

    வட்டார வளர்ச்சி பொதுநிதி பணிகள் மூலம் 48 திட்டப்பணிகள் ரூ.94 லட்சம் மதிப்பிலும், கிராம வளர்ச்சி பொதுநிதி பணிகள் மூலம் 5 திட்டப்ப ணிகள் ரூ.4.60 லட்சம் மதிப்பிலும், நமக்குநாமே திட்டம் மூலம் 3 பணிகள், ரூ.77 லட்சம் மதிப்பில் நடந்து வருகின்றன.

    ஊட்டியில் ஒட்டு மொத்தமாக ஒரே நிதி ஆண்டில் 315 மக்கள் நலத்திட்டப்பணிகளை ரூ.8.58 கோடி மதிப்பில் செயல்படுத்தி ஊராட்சி ஒன்றியம் சாதனை படைத்து வருகிறது.

    • நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோவை,

    கோவை மாநகராட்சி 22-வது வார்டுக்கு உட்பட்ட குமுதம் நகரில் இருந்து சேரன்மாநகர் 3-வது பஸ் நிறுத்தம் வரை தார்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

    இதனை நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், 22-வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு, 24-வது வார்டு கவுன்சிலர் பூபதி, மாநகராட்சி பொறியாளர் சுகந்தி, செயற்பொறியாளர் இளங்கோவன், உதவி கமிஷனர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி பொறியாளர் ரமேஷ், மண்டல சுகாதார ஆய்வாளர் பரமசிவம், சுகாதார ஆய்வாளர் ஜெரால்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது குமுதம் நகரில் உள்ள குறுக்கு சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் அதனை சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டது.

    • குழந்தைகளுக்கான சட்ட பாதுகாப்பு வழிமுறைகள், உரிமைகள், கடமைகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டு மாணவிகளுக்கான பாதுகாப்பு, உரிமைகள் குறித்து பேசினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்யாகுரு குலம் பெண்கள்மேல்நிலை ப்பள்ளியில் குழந்தை களுக்கான சட்ட பாதுகா ப்பு வழிமுறைகள், உரிமைகள், கடமை கள் குறித்தான கலந்து ரையாடல் நிகழ்ச்சி குருகுலம் நிர்வாக அறங்கா வலர் கயிலை மணி வேதர த்தனம் தலைமையில் நடந்தது.

    நிகழ்ச்சியில் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் சரண்யா ஜெயக்கு மார், வேதாரண்யம் நீதிம ன்ற நீதிபதி (பொ) தீப்கா, வக்கீல் பாரிபாலன், துணை தாசில்தார் ராஜா உட்பட பலர் மாணவிகளுக்கான சட்ட பாதுகாப்பு, உரிமைகள், குறித்து பேசினர்.

    • பள்ளி சட்ட கல்வி மன்றம் மற்றும் செங்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பள்ளி மாணவிகளுக்கான சட்டவிழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
    • பெண் காவலர் தங்கமயில் காவலன் செயலி பயன் மற்றும் சேவைகள் குறித்து விழிப்புணா்வு உரையாற்றினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி சட்ட கல்வி மன்றம் மற்றும் செங்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பள்ளி மாணவிகளுக்கான சட்டவிழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

    காவலன் செயலி

    வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவருமான நீதிபதி எம்.சுனில்ராஜா தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியை தமிழ்வாணி, செங்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்சுந்தர், வழக்கறிஞா்கள் சங்கத் தலைவா் ஆ.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பள்ளி தமிழாசிரியா் பிச்சையா வரவேற்று பேசினார்.

    பின்னா் வழக்கறிஞா்கள் முத்துக்குமாரசாமி, ஆதிபாலசுப்பிரமணியன், சுடர்முத்தையா ஆகியோர் மகளிருக்கான சட்டங்கள் குறித்து விளக்கவுரையாற்றினா். அதனைத் தொடா்ந்து பெண் காவலர் தங்கமயில் காவலன் செயலி பயன் மற்றும் சேவைகள் குறித்து விழிப்புணா்வு உரையாற்றினார்.

    பின்னா் முகாமில் நீதிபதி எம்.சுனில்ராஜா பேசியதாவது:-

    அடிப்படை வசதி

    இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் மொத்தம் 6 அடிப்படை உரிமைகள் உள்ளது. அதேபோல் அடிப்படை கடமைகள் எத்தனை உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா? எங்கெல்லாம் அடிப்படை உரிமைகள் உள்ளதோ அங்கெல்லாம் அடிப்படை கடமையும் உள்ளது.

    எப்படி என்றால் நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று தலை, மற்றொன்று பூ. இந்த இரண்டில் ஏதேனும் ஒன்று மட்டும் இருந்தால் அந்த நாணயம் செல்லாத நாணயமாக ஆகிவிடுகிறது. அதேபோல்தான் உரிமை, கடமை என இரண்டு பக்கங்கள் கொண்டதுதான் நமது வாழ்க்கை உரிமை மறுக்கும்போதும் கடமையை செய்ய தவறும்போது பிரச்சனை உண்டாகிறது.

    குறிப்பாக மாணவிகளுக்கு கல்வி அடிப்படை உரிமை. கற்று கொடுப்பது ஆசிரியா்களின் கடமை. இந்த இரண்டில் ஒன்று தடைபடும்போது பிரச்சனைக்கான வழி பிறக்கிறது. எனவே மாணவிகள் தங்களது தற்போதைய முதற்கடமை கல்வி கற்பது மட்டுமே அதை திறம்பட செய்தல் வேண்டும். அதற்காக பெற்றோர், ஆசிரியா்களின் நல் அறிவுரைகளை கேட்டு வாழ்வில் உயர்ந்த இடத்திற்கும் உயர் பதவிகளுக்கும் வர தங்களை தயார் செய்து கொள்ளவும்.

    மேலும் இந்த முகாமின் மூலம் தாங்கள் அறிந்த சட்ட விழிப்புணா்வுகளை மற்றவா்களிடம் எடுத்துக்கூறி அவர்களது வாழ்வில் ஏற்பட்டுள்ள சட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க உதவி செய்ய வேண்டும்.

    எங்கள் நீதிமன்ற அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் வட்ட சட்டப்பணிகள் குழு அலுவலகத்தில் நேரில் சென்று சட்டம் சார்ந்த சட்டம் சாராத அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு தேடிக்கொள்ளலாம். மேலும் கணவரை இழந்த பெண்களுக்கு இழப்பீடு, விபத்து இழப்பீடு, குடும்ப அட்டை, மாணவ, மாணவிகளுக்கு மேற்படிப்பு படிக்க உதவி, நீண்ட காலமாக தீர்வு இல்லாமல் உள்ள வழக்குகள் விரைவில் தீர்த்து வைத்து தரப்படும் இன்னும் பல சேவைகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தேடிக்கொள்ளவும்.

    மேலும் 1098 என்ற இலவச தொலைபேசி சேவை மூலம் குழந்தை திருமணம் குறித்த தகவல்களை தெரிவித்தால் அந்த திருமணம் தடுக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். எனவே மாணவிகள் இந்த தகவல்களை மற்றவா்களுக்கு எடுத்து கூறிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் வழக்கறிஞா்கள் சங்க இணைச் செயலாளா் கார்த்திகைராஜன் மற்றும் வழக்கறிஞர்கள் சக்திவேல், ஆசாத், அருண், வெங்கடேஷ், மாலதி, சிதம்பரம், நித்தியானந்தன், வீரபாண்டியன், சிவசுந்தரவேலன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் சட்டகல்வி மன்ற ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் பிரேமா நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளா் ஜெயராமசுப்பிரமணியன் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

    ×