கோவையில் 22-வது வார்டுக்கு உட்பட்ட குமுதம் நகரில் தார்சாலை பணிகள்

நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவையில் 22-வது வார்டுக்கு உட்பட்ட குமுதம் நகரில் தார்சாலை பணிகள்
Published on

கோவை,

கோவை மாநகராட்சி 22-வது வார்டுக்கு உட்பட்ட குமுதம் நகரில் இருந்து சேரன்மாநகர் 3-வது பஸ் நிறுத்தம் வரை தார்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

இதனை நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், 22-வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு, 24-வது வார்டு கவுன்சிலர் பூபதி, மாநகராட்சி பொறியாளர் சுகந்தி, செயற்பொறியாளர் இளங்கோவன், உதவி கமிஷனர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி பொறியாளர் ரமேஷ், மண்டல சுகாதார ஆய்வாளர் பரமசிவம், சுகாதார ஆய்வாளர் ஜெரால்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது குமுதம் நகரில் உள்ள குறுக்கு சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் அதனை சீரமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com