பண்ருட்டி அருகே திருமணம் நிச்சியக்கப்பட்ட வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி அருகே திருமணம் நிச்சியக்கப்பட்ட வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

கடலூர்:

பண்ருட்டி அருகே திருவதிகை முத்துலட்சுமி நகரில் உள்ள மரத்தில் ஒரு வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாககிடந்தார். இதனை கண்ட அப்பகுதியினர் பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பண்ரு ட்டி அடுத்த தொரப்பாடியை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 29). முந்திரி வியாபாரி என்பதும், இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு பத்திரிக்கை வைக்கும் பணிகள் நடந்து வந்தது. நண்பர்களுக்கு பத்திரிக்கை வைக்க செல்வதாக கூறி வீட்டிலிருந்து மோகன்ராஜ் இன்று காலை வெளியில் சென்றவர் தூக்கில் தொங்கியபடி கிடந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து முந்திரி வியாபாரி மோகன்ராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா என்பது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com