search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிர்வாகி"

    • நிர்வாகம் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 29ந் தேதி சைமா வளாகத்தில் நடைபெற உள்ளது.
    • 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    சைமா சங்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிர்வாகம் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 29ந்தேதிசைமா வளாகத்தில் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் சைமா சங்க தேர்தலில் மாற்றத்திற்கான அணி சார்பில் போட்டியிடும் பாலச்சந்தர் தலைமையிலான நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தது. அதில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாலச்சந்தர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த சில ஆண்டுகளாக தொழில் சூழ்நிலைகளில் நடைபெற்று வரும் மாற்றங்களும்ஏற்படும் சிக்கல்களையும் களைவதற்கு சங்கத்தில் முனைப்புடன் கூடிய செயலாற்றும்திறன் அதிகமாக தேவைப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து பல ஆண்டுகளாகசங்கத்தில் பதவி வகித்து வரும் மூத்த உறுப்பினர்களில் பலர் தொழில் நிலையில் இருந்துவிலகி உள்ள காரணத்தினால் மாற்றம் செய்து அவர்களுக்கு பதிலாக புதிய இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு வேண்டும் என்று எங்கள் அணி சார்பாக வேண்டுகோள்வைக்கப்பட்டது.

    ஆயினும் சங்கத்தின் செயற்குழு கூடி வழக்கம்போல் ஏற்கனவே உள்ளஅனைவரும் தங்கள் பதவியிலேயே தொடர்வார்கள் என தீர்மானித்தனர். எனவே நாங்கள்தேர்தலை எதிர்கொள்வதற்காக வலியுறுத்தி கேட்டுக்கொண்டதன் பேரில் ஏறத்தாழ25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுகிறது.

    முன்னாள் இருந்த நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதாவது நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அவர்களது செயல்பாட்டில் திருப்தி இல்லை என்பதை முன்வைத்தும் பலர் தொழிலை விட்டு வெளியேறிய சூழ்நிலையிலும் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு வருவது தொழிலுக்கு தேவையான நன்மைகளை நிர்வாகிகளால் கோரிப் பெற முடியாது என்ற கோரிக்கையின் அடிப்படையில் மாற்றத்திற்கான அணியை உருவாக்கி தற்போது தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தலைவராக நியமன அடிப்படையில் வைக்கிங் ஈஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் துணைத்தலைவர் உள்ளிட்ட பிற பொறுப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற உள்ளது.இவர் அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிச்சாமிக்கு அ.தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.
    • மலர் கொத்துக்களை கொடுத்தும் சால்வைகள் அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அவினாசி

    திருப்பூர் மாவட்டம் அவினாசிக்கு வருகை வந்த முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி., வேலுமணி மற்றும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி .ஆர். ஜி .அருண்குமார் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அ.தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.

    இதில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மலர் கொத்துக்களை கொடுத்தும் சால்வைகள் அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். வழிநெடுக மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மங்கலத்தில் முன்னாள் அமைச்சரும் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை ராதாகிருஷ்ணன், பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான எம். எஸ் .எம் .ஆனந்தன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.  

    • ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அ.ம.மு.க. நிர்வாகி அ.தி.மு.க.வில் இணைந்தார்.
    • மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ், மாவட்ட பேரவைச் செயலாளர் அய்யனார், மாவட்ட மகளிரணி கவிதா சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மேற்கு மாவட்ட அ.ம.மு.க. இளைஞர் பாசறை மாவட்ட செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் கந்தபாரதி. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.

    விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.எஸ். கதிரவன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், கிழக்கு மாவட்ட செயலாளர் பாலகங்காதரன்,மத்திய மாவட்ட செயலாளர் தெய்வம், செய்தி தொடர்பாளர் கண்ணன், நகரச் செயலாளர்கள் ராமகுரு (ஸ்ரீவில்லிபுத்தூர்), முருகதாஸ் (ராஜபாளையம்), ஒன்றியச் செயலாளர்கள் செந்தில்காளைபாண்டியன் (ராஜபாளையம்), அலங்காரம் (வத்திராயிருப்பு வடக்கு), குண்டுமணி முத்தையா (வத்திராயிருப்பு மேற்கு), மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ், மாவட்ட பேரவைச் செயலாளர் அய்யனார், மாவட்ட மகளிரணி கவிதா சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    • 15-ந் தேதி அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் நடைபெறுகிறது.
    • மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகிற 15-ந் தேதி அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணி அளவில் நடைபெறும் பொது கூட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் சண்முகவேல் தலைமை தாங்குகிறார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி முன்னிலை வகிக்கிறார். பொதுக் கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

    பொதுக்கூட்டத்தில் 13 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் யூனியன் மில் ரோட்டில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் இடத்தை மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மேயருமான விசாலாட்சி, வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • கணேஷ் இந்து முன்னேற்றக் கழகத்தின் வர்த்தக அணி செயலாளராக உள்ளார்.
    • திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

    திருப்பூர் :

    திருப்பூர் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் கணேஷ் (வயது 48). இவர் இந்து முன்னேற்றக் கழகத்தின் வர்த்தக அணி செயலாளராக உள்ளார். இவர் சொந்தமான இரும்பு குடோனுக்கு முன் நேற்று முன்தினம் இரவு தனது சரக்கு ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது ஆட்டோ கண்ணாடியை மர்ம ஆசாமிகள் உடைத்து சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து கணேஷ் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    12 வது தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா உடுமலை ஐ. எம் .ஏ. அரங்கில் நடந்தது

    உடுமலை :

    உடுமலை தேஜஸ் சங்கத்தின் 12 வது தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா உடுமலை ஐ. எம் .ஏ .அரங்கில் நடந்தது..முன்னாள் தலைவர் பாலமுருகன் வரவேற்று பேசினார். மாவட்ட ஜெனரல் செகரட்டரி வரதராஜ் மாவட்ட கோ ஆர்டினேட்டர் ஆர். பி.ராஜ் ,ரீஜினல் கோ ஆர்டினேட்டர் யூ .கே .பி .எம். கார்த்திகேயன் ,உதவி கவர்னர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட கவர்னர் இளங்குமரன் ,சிறப்பு அழைப்பாளராக கோவை விஜிஎம். மருத்துவமனை சேர்மன் டாக்டர் மோகன் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தலைவராக சத்தியம் பாபு என்ற சண்முகசுந்தரம், செயலாளராக ஜெயப்பிரகாஷ் ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து புதிய தலைவர் சத்தியம் பாபு என்ற சண்முகசுந்தரம் ஏற்புரையாற்றினார். முன்னாள் தலைவர் பொறியாளர் பாலமுருகன் ,செயலாளர் கே .ஆர் .எஸ் ,செல்வராஜ் ஆகியோர் ரோட்டரி சங்கம் ஆற்றிய சமூகப் பணி குறித்து பேசினர். மாவட்ட கவர்னர் இளங்குமரன் உலக அளவில் ரோட்டரி சங்கம் ஆற்றி வரும் பணிகள் குறித்தும், ரோட்டரி சேவைகள் குறித்தும் பேசினார்.

    மேலும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை ரோட்டரி சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×