என் மலர்

    நீங்கள் தேடியது "Hindu munnetra kazhagam"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோடை காலங்களையொட்டி பொது ம்க்களின் தாகங்களை தணிக்க நீர் மோர் பந்தல் தொடங்கப்பட்டது.
    • வழக்கறிஞர் கோபிநாத் திறந்து வைத்து மக்களுக்கு நீர் மோர் விநியோகம் செய்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கோடை காலங்களையொட்டி  பொது மக்களின் தாகங்களை தணிக்க ராமமூர்த்தி நகரில் நீர் மோர் பந்தல் தொடங்கப்பட்டது.

    இதனை மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் திறந்து வைத்து மக்களுக்கு நீர் மோர் தர்பூசணி ஆகியவற்றை விநியோகம் செய்தார். தண்ணீர் பந்தலை திறப்பு விழா ஏற்பாடுகளை மாநில அமைப்பாளர் மணிகண்டன்,

    மாநில இளைஞரணி தலைவர் தாமுஜி, ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் மாவட்டச் செயலாளர் கணேசன், மாவட்டத் தலைவர் ஸ்ரீகாந்த், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார், மாவட்ட துணைச் செல்வகுமார், மாவட்ட செயற்குழு சிவசண்முகம், மாநகரத் தலைவர் சத்தியமூர்த்தி. மாநகர இளைஞரணி செயலாளர் அருள் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருப்பூரில் காவல்துறையினர் மெத்தனமாக செயல்பட்டதாக கூறியிருந்தார்.
    • யாராக இருந்தாலும் தேவையில்லாத தவறான தகவல்களை தெரிவிக்கக்கூடாது.

    திருப்பூர் :

    திருப்பூர் இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் வடமாநிலத்தினர் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கிறார்கள். தமிழக அரசு அனைத்து விதமான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்பாடுகளை செய்து இருப்பது வரவேற்கத்தக்கது. பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் திருப்பூரில் காவல்துறையினர் மெத்தனமாக செயல்பட்டதாலும், அதனால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் கூறியிருந்தார். அவருடைய கருத்து தவறானது.

    வட இந்தியர்கள் விஷயத்தில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாநகர போலீஸ் கமிஷனர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்து பெரிய பிரச்சினைகளை தவிர்த்துள்ளனர். மாநில மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் வாழ்வாதாரத்தை காத்துள்ளனர். எனவே யாராக இருந்தாலும் தேவையில்லாத தவறான தகவல்களை தெரிவிக்கக்கூடாது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட மாநகர செயலாளர் கணேஷ் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பாண்டியன் நகரில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் இந்து முன்னேற்ற கழகத்தின் திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட மாநகர செயலாளர் கணேஷ் தலைமை தாங்கினார். கோவை கோட்ட பொறுப்பாளர் அருண்குமார், மாநில செயலாளர் கே.அரிகிருஷ்ணன், மாநில அமைப்பாளர் ஏ.எஸ்.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு இந்து முன்னேற்ற கழக நிறுவன தலைவர் வக்கீல் கே.கோபிநாத், மாநில பொது செயலாளர் எம்.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு இந்து முன்னேற்ற கழக அமைப்பை வலுப்படுத்தவும், புதிய உறுப்பினர்களை அதிக எண்ணிக்கையில் சேர்க்கவும், திருப்பூரில் இந்து கோவில்கள், இந்துக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக உதவுதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. முடிவில் மாநில இளைஞரணி தலைவர் தாமோதரன் நன்றி கூறினார். கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நீண்ட நாட்களுக்கு முன்பே அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவில் இந்தியை அறிமுகப்படுத்தி விட்டனர்.
    • இந்தி மொழி மீது மத சாயமோ, அரசியல் சாயமோ பூசுவது உகந்தது அல்ல.

    திருப்பூர் :

    இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் கே.கோபிநாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்தி மொழியை அறிமுகப்படுத்துவதை இந்து முன்னேற்ற கழகம் வரவேற்கிறது. நீண்ட நாட்களுக்கு முன்பே அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவில் இந்தியை அறிமுகப்படுத்தி விட்டனர். இந்தி மொழியை ஒரு மொழியாக அனைவரும் பார்க்க வேண்டும். அம்மொழி மீது மத சாயமோ, அரசியல் சாயமோ பூசுவது உகந்தது அல்ல. இந்தியை எதிர்க்கும் தலைவர்களின் மகன், மகள்களும் மற்றும் பேரக்குழந்தைகளும் இந்தி மொழியை கற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    மேலும் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற வகையில் தமிழகம் மட்டுமல்லாது பரந்த நமது இந்தியாவில் பயணம் செய்வதற்கு மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது. எனவே நம்முடைய எதிர்கால குழந்தைகளின் அறிவு மற்றும் அவர்களின் நலன் கருதி இந்தி மொழியை அரசியல் ஆக்காமல் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த அமைப்பை மத்திய அரசு 5 ஆண்டுக–ளுக்கு தடை செய்துள்ளது.
    • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ததை இந்து முன்னேற்ற கழகம் வரவேற்கிறது.

    திருப்பூர்:

    இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு சட்ட விரோதமான பண பரிவர்த்தனை செய்ததாலும், பயங்கரவாத செயல்களுக்கு திட்டம் தீட்டியதாகவும்கூறப்படுகிறது. இதனால் இந்த அமைப்பை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு தடை செய்துள்ளது.

    இந்த அமைப்பை ஏற்கனவே தடை செய்ய வேண்டும் என்று 2018-ம் ஆண்டு எனது சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் அரசாங்கம் தான் இதுபோன்ற அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தது. எனவே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ததை இந்து முன்னேற்ற கழகம் வரவேற்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கணேஷ் இந்து முன்னேற்றக் கழகத்தின் வர்த்தக அணி செயலாளராக உள்ளார்.
    • திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

    திருப்பூர் :

    திருப்பூர் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் கணேஷ் (வயது 48). இவர் இந்து முன்னேற்றக் கழகத்தின் வர்த்தக அணி செயலாளராக உள்ளார். இவர் சொந்தமான இரும்பு குடோனுக்கு முன் நேற்று முன்தினம் இரவு தனது சரக்கு ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது ஆட்டோ கண்ணாடியை மர்ம ஆசாமிகள் உடைத்து சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து கணேஷ் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆய்வு என்ற பெயரில் அறநிலையத்துறையினர் பிடிவாதம் பிடிப்பது கண்டனத்துக்குரியது
    • கோவில்களை நிர்வகிக்க மடாதிபதிகள், ஆதீனங்கள் மற்றும் சிவனடியார்கள் உள்ளனர்.

    திருப்பூர், 

    இந்து முன்னேற்ற கழக தலைவர் வக்கீல் கே.கோபிநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு என்ற பெயரில் அறநிலையத்துறையினர் பிடிவாதம் பிடிப்பது கண்டனத்துக்குரியது.நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது என்றும், அதன்நிர்வாகம் மற்றும் வரவு-செலவு கணக்குகளை அவர்களேபார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில்தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசும், அறநிலையத்துறையும் இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுகிறது. இதனைஇந்து முன்னேற்ற கழகம் வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாகஅனைத்து கோவில்களையும் விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும். எங்கள் கோவில்களை நிர்வகிக்க மடாதிபதிகள், ஆதீனங்கள் மற்றும் சிவனடியார்கள் உள்ளனர். இவ்வாறு அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×