என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அ.ம.மு.க. பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் நிர்வாகிகள் ஆய்வு
  X

  பொதுக்கூட்ட மேடை அமைக்கும் இடத்தை மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மேயருமான விசாலாட்சி, வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

  அ.ம.மு.க. பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் நிர்வாகிகள் ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 15-ந் தேதி அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் நடைபெறுகிறது.
  • மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள்.

  திருப்பூர் :

  திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகிற 15-ந் தேதி அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணி அளவில் நடைபெறும் பொது கூட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் சண்முகவேல் தலைமை தாங்குகிறார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி முன்னிலை வகிக்கிறார். பொதுக் கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

  பொதுக்கூட்டத்தில் 13 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள்.

  இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் யூனியன் மில் ரோட்டில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் இடத்தை மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மேயருமான விசாலாட்சி, வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

  Next Story
  ×