search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Enthusiastic welcome"

    • மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்பத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • வழியெங்கும் சாலையின் இருபுறமும் அ.தி.மு.க. தொண்டர்கள் நின்று எடப்பாடியார் வாழ்க என கோஷமிட்டனர்.

    மதுரை

    அ.தி.மு.க. பொதுச் செய லாளராக எடப்பாடி பழனி சாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் மதுரையில் தமிழ் நாடே திரும்பிப்பார்க்கும் வகையில் பிரமாண்ட பொன்விழா எழுச்சி மாநாடு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான முன் னேற்பாடு பணிகளை பார் வையிடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி வருகை தந்து பணிகளை முடுக்கி விட்டார்.

    அனைத்து மாவட்டங்க–ளில் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் வந்து மாநாட்டில் பங்கேற்று விட்டு, பத்திரமாக ஊர் திரும்பும் வகையில் மேற்கொள்ளப் பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோச னைக ளை யும் அவர் வழங்கினார்.

    25 ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க.வில் மாநில மாநாடு நடைபெறுவதால் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் மாநாட்டில் திரண்டுள்ளனர்.

    மதுரையில் நடைபெறும் இந்த மாநாட்டிற்காக சேலத்தில் இருந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் இருந்து காரில் மதுரை வருகை தந்தார். அவருக்கு கப்பலூர் தியாக ராஜர் மில் அருகே மதுரை மாநகர், மதுரை புறநகர், மதுரை கிழக்கு ஆகிய மாவட்ட கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகி–யோர் பூங்கொத்து கொடுத்து தொண்டர்கள் புடைசூழ எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து பெண்கள் பூரண கும்ப மரியா தை கொடுத்தும், பல்வேறு கோவில்களில் இருந்து பிரசாதங்கள் சிவாச் சாரியார் வழங்கியும் வர வேற்றனர். தொடர்ந்து மேள தாளங்கள், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வழியெங்கும் சாலையின் இருபுறமும் அ.தி.மு.க. தொண்டர்கள் நின்று எடப்பாடியார் வாழ்க என கோஷமிட்டனர். அதனை ஏற்றுக்கொண்ட அவர் இரட்டை விரலை காண்பித் தபடி சென்றார். மாநாடு திடலை கடக்கும்போது ஏராளமான தொண்டர்கள் விண்ணதிர கோஷம் எழுப் பினர். பின்னர் அவர் ரிங் ரோடு அருகே உள்ள தனியார் ஓட்டலில் இரவில் தங்கினார். இன்று காலை மாநாட்டில் கலந்து கொண்டார்.

    • நாளை மதுரை வரும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    விருதுநகர்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு 2-ம் கட்டமாக ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி உயர்கல்வி உறுதி திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது 993 கல்லூரி மாணவிகளுக்கு தலா ரூ.1000 ஊக்கத்தொகையுடன், வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம், நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய "புதுமைப்பெண்" பெட்டகப்பை மற்றும் வங்கி ஏ.டி.எம்.களை வழங்கினார்.

    கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில், இந்தியா விலேயே தமிழகத்தில் தான் உயர்கல்விக்கு செல்லும் பெண்களின் மொத்த சேர்க்கை விகிதம் 51 சதவீதமாக உள்ளது. உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் பெண்க ளுக்கான தொழில் வாய்ப்பு களை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல், அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்தல் ஆகி யவை நோக்கமாகும் என்றார். இதில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க மதுரை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும்.
    • இதுகுறித்து மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி, மணிமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    மதுரை

    மதுரை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மதுரையில் வருகிற 6-ந்தேதி தி.மு.க. சார்பில் பாண்டி கோவில் ரிங் ரோட்டில் உள்ள கலைஞர் திடலில் 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறு கிறது.

    இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவுக்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு விமானம் மூலம் மதுரை வருகிறார்.

    அவருக்கு மதுரை வடக்கு, மாநகர், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது.

    எனவே இதில் இந்நாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளு மன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகி கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க மதுரை வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • 1000-த்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் தி.மு.க. கொடியுடன் வரவேற்பு அளித்தனர்.

    அவனியாபுரம்

    முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜையையொட்டி பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக சேலத்தில் இருந்து தனி விமானம் மூலம் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் மதுரை வந்தார். விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர்கள் பி.மூர்த்தி, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, ராஜ கண்ணப்பன், பெரிய கருப்பன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, சோழவந்தான் வெங்கடேசன், மாவட்ட செயலாளர் மணிமாறன், இளைஞரணி ராஜா, மாணவரணி மருதுபாண்டி, அதலை செந்தில்குமார், போஸ், முத்தையா, ஈஸ்வரன், சசிகுமார், வேட்டையன், விமல், ரோகினி, பொம்மதேவன் உள்பட 1000-த்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் தி.மு.க. கொடியுடன் வரவேற்பு அளித்தனர்.

    தையொட்டி விமான நிலையத்தில் துணை ஆணையாளர் பெருமாள் ராமானுஜம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • எடப்பாடி பழனிச்சாமிக்கு அ.தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.
    • மலர் கொத்துக்களை கொடுத்தும் சால்வைகள் அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அவினாசி

    திருப்பூர் மாவட்டம் அவினாசிக்கு வருகை வந்த முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி., வேலுமணி மற்றும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி .ஆர். ஜி .அருண்குமார் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அ.தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.

    இதில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மலர் கொத்துக்களை கொடுத்தும் சால்வைகள் அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். வழிநெடுக மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மங்கலத்தில் முன்னாள் அமைச்சரும் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை ராதாகிருஷ்ணன், பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான எம். எஸ் .எம் .ஆனந்தன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.  

    • தி.மு.க.கிழக்கு மாவட்டம், திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் தலைமையில் ஏராளமானோர் பஸ்கள் மூலமாக புறப்பட்டு சென்றனர்.

    மங்கலம் :

    தமிழக முதலமைச்சர் மு.௧.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி,நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    முன்னதாக நேற்று அவர் கோவை மாவட்டம்,பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அங்கிருந்து காரில் இரவு திருப்பூர் வந்தார். அப்போது திருப்பூர் மாவட்டம்,பல்லடம்-வடுகபாளையத்தில் தி.மு.க.கிழக்கு மாவட்டம்,திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பங்கேற்க மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமையில் ஏராளமானோர் மங்கலத்தில் இருந்து பஸ்கள் மூலமாக புறப்பட்டுச் சென்றனர்.இதில் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் மு.சகாபுதீன், மாவட்ட பிரதிநிதிகள் ரவிச்சந்திரன்,சுந்தரவடிவேல், திருப்பூர் தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர்கள் இடுவாய் ரவி, பாபு ,நூர்முகமது , திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் முகமது ஜீனைத், சசி, திருப்பூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சரவணகுமார், முகமது உசேன், திருப்பூர் வடக்கு மாவட்ட மாணவரணியை சேர்ந்தவரும் ,மங்கலம் ஊராட்சி மன்ற 9-வது வார்டு உறுப்பினருமான முகமது இத்ரீஸ், மற்றும் தி.மு.க. நிர்வாகிகளான இடுவாய் சுரேஷ், குமார், மயில்சாமி, ராமாத்தாள், திருமூர்த்தி உள்ளிட்ட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    • கொங்கல்நகரம் கிராமத்தைச்சேர்ந்த நகுல்நந்தன் விளையாடிசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • சொந்த கிராமத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    உடுமலை:

    மத்திய அரசு சார்பில், ஹரியானா மாநிலத்தில், தேசிய அளவில்இளைஞர்களுக்கான, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடந்தது.இதில் தமிழக வாலிபால் போட்டியில் தமிழக அணி இறுதிப்போட்டியில், ஹரியானா மாநில அணியை 3-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.

    இதில் தமிழக அணிக்காககுடிமங்கலம் ஒன்றியம், கொங்கல்நகரம் கிராமத்தைச்சேர்ந்த நகுல்நந்தன் விளையாடிசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தமிழக அணிக்காக போட்டியில் பங்கேற்று திரும்பிய அவருக்கு சொந்த கிராமத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.கொங்கல்நகரம் ஊராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஊராட்சித்தலைவர் விஸ்வநாதன் மற்றும் பாசன சபை தலைவர் நாகராஜன் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று நகுல்நந்தனுக்கு பாராட்டு தெரிவித்தனர். கிராம பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து மகிழ்ந்தனர்.

    ×