மதுரை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க மதுரை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும். இதுகுறித்து மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி, மணிமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மதுரை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
Published on

மதுரை

மதுரை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

மதுரையில் வருகிற 6-ந்தேதி தி.மு.க. சார்பில் பாண்டி கோவில் ரிங் ரோட்டில் உள்ள கலைஞர் திடலில் 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறு கிறது.

இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இந்த விழாவுக்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு விமானம் மூலம் மதுரை வருகிறார்.

அவருக்கு மதுரை வடக்கு, மாநகர், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது.

எனவே இதில் இந்நாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளு மன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகி கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com