search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்பத்துடன் உற்சாக வரவேற்பு
    X

    அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்க மதுரை வருகை தந்த பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி.

    மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்பத்துடன் உற்சாக வரவேற்பு

    • மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்பத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • வழியெங்கும் சாலையின் இருபுறமும் அ.தி.மு.க. தொண்டர்கள் நின்று எடப்பாடியார் வாழ்க என கோஷமிட்டனர்.

    மதுரை

    அ.தி.மு.க. பொதுச் செய லாளராக எடப்பாடி பழனி சாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் மதுரையில் தமிழ் நாடே திரும்பிப்பார்க்கும் வகையில் பிரமாண்ட பொன்விழா எழுச்சி மாநாடு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான முன் னேற்பாடு பணிகளை பார் வையிடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி வருகை தந்து பணிகளை முடுக்கி விட்டார்.

    அனைத்து மாவட்டங்க–ளில் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் வந்து மாநாட்டில் பங்கேற்று விட்டு, பத்திரமாக ஊர் திரும்பும் வகையில் மேற்கொள்ளப் பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோச னைக ளை யும் அவர் வழங்கினார்.

    25 ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க.வில் மாநில மாநாடு நடைபெறுவதால் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் மாநாட்டில் திரண்டுள்ளனர்.

    மதுரையில் நடைபெறும் இந்த மாநாட்டிற்காக சேலத்தில் இருந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் இருந்து காரில் மதுரை வருகை தந்தார். அவருக்கு கப்பலூர் தியாக ராஜர் மில் அருகே மதுரை மாநகர், மதுரை புறநகர், மதுரை கிழக்கு ஆகிய மாவட்ட கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகி–யோர் பூங்கொத்து கொடுத்து தொண்டர்கள் புடைசூழ எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து பெண்கள் பூரண கும்ப மரியா தை கொடுத்தும், பல்வேறு கோவில்களில் இருந்து பிரசாதங்கள் சிவாச் சாரியார் வழங்கியும் வர வேற்றனர். தொடர்ந்து மேள தாளங்கள், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வழியெங்கும் சாலையின் இருபுறமும் அ.தி.மு.க. தொண்டர்கள் நின்று எடப்பாடியார் வாழ்க என கோஷமிட்டனர். அதனை ஏற்றுக்கொண்ட அவர் இரட்டை விரலை காண்பித் தபடி சென்றார். மாநாடு திடலை கடக்கும்போது ஏராளமான தொண்டர்கள் விண்ணதிர கோஷம் எழுப் பினர். பின்னர் அவர் ரிங் ரோடு அருகே உள்ள தனியார் ஓட்டலில் இரவில் தங்கினார். இன்று காலை மாநாட்டில் கலந்து கொண்டார்.

    Next Story
    ×