எடப்பாடி பழனிச்சாமிக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு அ.தி.மு.க. நிர்வாகிகள்-தொண்டர்கள் குவிந்தனர்

எடப்பாடி பழனிச்சாமிக்கு அ.தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.மலர் கொத்துக்களை கொடுத்தும் சால்வைகள் அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பேசிய காட்சி. முன்னாள் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி மற்றும் பலர்  உள்ளனர். பெண்கள் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி.
 வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பேசிய காட்சி. முன்னாள் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி மற்றும் பலர் உள்ளனர். பெண்கள் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி.
Published on

அவினாசி

திருப்பூர் மாவட்டம் அவினாசிக்கு வருகை வந்த முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி., வேலுமணி மற்றும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி .ஆர். ஜி .அருண்குமார் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அ.தி.மு.க. தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.

இதில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மலர் கொத்துக்களை கொடுத்தும் சால்வைகள் அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். வழிநெடுக மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மங்கலத்தில் முன்னாள் அமைச்சரும் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை ராதாகிருஷ்ணன், பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான எம். எஸ் .எம் .ஆனந்தன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com