வாலிபால் போட்டியில் சாதனை படைத்த வீரருக்கு உற்சாக வரவேற்பு

கொங்கல்நகரம் கிராமத்தைச்சேர்ந்த நகுல்நந்தன் விளையாடிசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.சொந்த கிராமத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

உடுமலை:

மத்திய அரசு சார்பில், ஹரியானா மாநிலத்தில், தேசிய அளவில்இளைஞர்களுக்கான, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடந்தது.இதில் தமிழக வாலிபால் போட்டியில் தமிழக அணி இறுதிப்போட்டியில், ஹரியானா மாநில அணியை 3-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.

இதில் தமிழக அணிக்காககுடிமங்கலம் ஒன்றியம், கொங்கல்நகரம் கிராமத்தைச்சேர்ந்த நகுல்நந்தன் விளையாடிசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தமிழக அணிக்காக போட்டியில் பங்கேற்று திரும்பிய அவருக்கு சொந்த கிராமத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.கொங்கல்நகரம் ஊராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஊராட்சித்தலைவர் விஸ்வநாதன் மற்றும் பாசன சபை தலைவர் நாகராஜன் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று நகுல்நந்தனுக்கு பாராட்டு தெரிவித்தனர். கிராம பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து மகிழ்ந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com