அ.ம.மு.க. நிர்வாகி அ.தி.மு.க.வில் இணைந்தார்

ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அ.ம.மு.க. நிர்வாகி அ.தி.மு.க.வில் இணைந்தார். மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ், மாவட்ட பேரவைச் செயலாளர் அய்யனார், மாவட்ட மகளிரணி கவிதா சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.
அ.ம.மு.க. நிர்வாகி அ.தி.மு.க.வில் இணைந்தார்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மேற்கு மாவட்ட அ.ம.மு.க. இளைஞர் பாசறை மாவட்ட செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் கந்தபாரதி. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.

விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.எஸ். கதிரவன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், கிழக்கு மாவட்ட செயலாளர் பாலகங்காதரன்,மத்திய மாவட்ட செயலாளர் தெய்வம், செய்தி தொடர்பாளர் கண்ணன், நகரச் செயலாளர்கள் ராமகுரு (ஸ்ரீவில்லிபுத்தூர்), முருகதாஸ் (ராஜபாளையம்), ஒன்றியச் செயலாளர்கள் செந்தில்காளைபாண்டியன் (ராஜபாளையம்), அலங்காரம் (வத்திராயிருப்பு வடக்கு), குண்டுமணி முத்தையா (வத்திராயிருப்பு மேற்கு), மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ், மாவட்ட பேரவைச் செயலாளர் அய்யனார், மாவட்ட மகளிரணி கவிதா சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com