search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சைமா சங்க தேர்தலில் மாற்றத்திற்கான அணி சார்பில் துணைத்தலைவர், நிர்வாகிகள் பதவிக்கு போட்டி
    X

    சைமா சங்க தேர்தலில் மாற்றத்திற்கான அணி சார்பில் போட்டியிடும் துணைத்தலைவர் மற்றும் நிர்வாகிகள் பேட்டியளித்ததை படத்தில் காணலாம்.  

    சைமா சங்க தேர்தலில் மாற்றத்திற்கான அணி சார்பில் துணைத்தலைவர், நிர்வாகிகள் பதவிக்கு போட்டி

    • நிர்வாகம் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 29ந் தேதி சைமா வளாகத்தில் நடைபெற உள்ளது.
    • 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    சைமா சங்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிர்வாகம் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 29ந்தேதிசைமா வளாகத்தில் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் சைமா சங்க தேர்தலில் மாற்றத்திற்கான அணி சார்பில் போட்டியிடும் பாலச்சந்தர் தலைமையிலான நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தது. அதில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாலச்சந்தர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த சில ஆண்டுகளாக தொழில் சூழ்நிலைகளில் நடைபெற்று வரும் மாற்றங்களும்ஏற்படும் சிக்கல்களையும் களைவதற்கு சங்கத்தில் முனைப்புடன் கூடிய செயலாற்றும்திறன் அதிகமாக தேவைப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து பல ஆண்டுகளாகசங்கத்தில் பதவி வகித்து வரும் மூத்த உறுப்பினர்களில் பலர் தொழில் நிலையில் இருந்துவிலகி உள்ள காரணத்தினால் மாற்றம் செய்து அவர்களுக்கு பதிலாக புதிய இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு வேண்டும் என்று எங்கள் அணி சார்பாக வேண்டுகோள்வைக்கப்பட்டது.

    ஆயினும் சங்கத்தின் செயற்குழு கூடி வழக்கம்போல் ஏற்கனவே உள்ளஅனைவரும் தங்கள் பதவியிலேயே தொடர்வார்கள் என தீர்மானித்தனர். எனவே நாங்கள்தேர்தலை எதிர்கொள்வதற்காக வலியுறுத்தி கேட்டுக்கொண்டதன் பேரில் ஏறத்தாழ25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுகிறது.

    முன்னாள் இருந்த நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதாவது நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அவர்களது செயல்பாட்டில் திருப்தி இல்லை என்பதை முன்வைத்தும் பலர் தொழிலை விட்டு வெளியேறிய சூழ்நிலையிலும் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு வருவது தொழிலுக்கு தேவையான நன்மைகளை நிர்வாகிகளால் கோரிப் பெற முடியாது என்ற கோரிக்கையின் அடிப்படையில் மாற்றத்திற்கான அணியை உருவாக்கி தற்போது தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தலைவராக நியமன அடிப்படையில் வைக்கிங் ஈஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் துணைத்தலைவர் உள்ளிட்ட பிற பொறுப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற உள்ளது.இவர் அவர் கூறினார்.

    Next Story
    ×