search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ வைப்பு"

    • வாலிபர் தப்பி ஓட்டம்
    • எங்கள் ஏரியாவில் வந்து கடை வைத்துவிட்டு, எனக்கே பழம் தர மாட்டாயா என மிரட்டல்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அருகே வடக்கு சூரங்குடி தட்டான் விளை பகுதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த் (வயது 30). இவர் ராமன்புதூர் பகுதி யில் பழக்கடை வைத்துள்ளார்.

    நேற்று பிரேம் ஆனந்த் வழக்கம்போல் கடையை திறந்து இருந்தார். இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு செல்வதற்கு தயாரானார். இதையடுத்து கடையில் இருந்த பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், பழம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

    அதற்கு பிரேம் ஆனந்த், பழங்களை கடையில் உள்ளே வைத்து விட்டதால் தற்பொழுது எடுக்க முடியாது என்று கூறியுள்ளார். எங்கள் ஏரியாவில் வந்து கடை வைத்துவிட்டு, எனக்கே பழம் தர மாட்டாயா என்று கூறி பிரேம் ஆனந்திடம் அந்த வாலிபர் தகராறில் ஈடுபட்டார். திடீரென தான் கையில் பாட்டிலில் வைத்தி ருந்த பெட்ரோலை பிரேம் ஆனந்த் மீது ஊற்றினார். பின்னர் கையில் வைத்தி ருந்த தீப்பெட்டியால் பிரேம் ஆனந்த் மீது தீ வைத்தார். பிரேம் ஆனந்த் உடலில் தீ எரிந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர்.

    அவர்கள் பிரேம் ஆனந்த் உடலில் எரிந்த தீயை அணைத்து சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதற்குள் தீ வைத்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற் கொண்டனர். ஆஸ்பத்திரி யில் பிரேம் ஆனந்த் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். பிரேம் ஆனந்த் கூறிய தகவல் மற்றும் சி.சி.டி.வி. கேமராவில் கைப்பற்றப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் பிரேம் ஆனந்த் மீது தீ வைத்த வாலிபரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    முதற்கட்ட விசாரணை யில் பிரேம் ஆனந்த் மீது தீ வைத்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர்.

    போலீசார் தேடுவது அறிந்த அந்த வாலிபர் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப் படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட் டுள்ளனர். இது குறித்து பிரேம் ஆனந்த் கொடுத்த புகாரின்பேரில் நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடைக் காரர் மீது பெட் ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்ததில் 3 பேர் பலியானார்கள்.
    • கேரளாவில் பயணிகள் ரயிலில் புகுந்த மர்மநபர்.

    கன்னியாகுமரி:

    கேரளாவில் பயணிகள் ரயிலில் புகுந்து மர்மநபர் ஒருவர் பயணிகள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்ததில் 3 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மர்ம நபரின் வரைபடத்தை வெளியிட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். மர்மநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் கன்னியாகுமரி, குளச்சல் என்று எழுதப்பட்டிருந்ததால் அந்த நபர் இங்கு வந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். உளவு பிரிவு போலீசாரும், தனி பிரிவு போலீசாரும் மாவட்டம் முழுவதும் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் நாகர்கோவில் ரயில் நிலையத்திலும் சோதனை தீவிரபடுத்தப்பட்டு உள்ளது.

    வெளியூர்களில் இருந்து வரும் ரயில்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணி களின் உடைமை களை போலீசார் சோதனை மேற்கொண்ட னர். பாட்டில் களையும் அவர்கள் சோதனை செய்தனர்.

    கன்னியாகுமரி, நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம், குழித் துறை உட்பட அனைத்து ரயில் நிலையங்களிலும் சோதனை நடந்தது.

    • மேல்முகம் கிராமம், வீ.கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் நித்யா என்பவர் கடந்த 11-ந் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
    • இதை தொடர்ந்து, போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் வட்டம், வடகரையாத்தூர், மேல்முகம் கிராமம், வீ.கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் நித்யா என்பவர் கடந்த 11-ந் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

    இதை தொடர்ந்து, போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    குடிசைக்கு தீ வைப்பு

    இக்கொலையை சிலர் தவறாக சித்தரித்தன் விளை வாக வடகரையாத்தூர் மேல்முகம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தகர சீட், ஓலை வேய்ந்த குடிசைகள் மற்றும் புதுப் பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான வெல்ல ஆலை கொட்டகை ஆகியவை மர்ம நபர்களால் தீ வைக்கப் பட்டது. தீ வைத்தவர்களை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் வடகரையாத்தூர் மேல்முகம் கிராமம் சரளைமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான 3 டிராக்டர்கள் மற்றும் தகர வீடு தீ வைக்கப்பட்டது. மேலும் வடகரையாத்தூரில் ஒரு வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் தொடர்ந்து கண்காணித்து இந்த சம்பவங்களீல் தொடர்பு உடையவர்களை தேடி வருகிறார்கள்.

    அடுத்தடுத்த சம்பவங்க ளால் அந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது. இதை தொடர்ந்து ஜேடர்பாளையத்தில் வடகரையாத்தூர், வீ.கரைப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த இருதரப்பினர் இடையே அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் நடை பெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார்ய. மாவட்ட போலீஸ் சூப் பிரண்டு கலைச்செல்வன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் கூறியதாவது:-

    இந்த பகுதியில் அசாதா ரண சூழ்நிலையை சிலர் தவறாக பயன்படுத்தி தேவையற்ற அசம்பா விதங்களை உருவாக்க நினைப்பார்கள். இது போன்ற சூழ்நிலைகள் உருவாகாமல் கிராமத்தில் அமைதி நிலை காக்க கிராமங்களை சேர்ந்த அனைவரும் முழு ஒத் துழைப்பு வழங்க வேண்டும்.

    கிராம மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மாவட்ட நிர்வாகத்தால் செய்து தரப்படும். மேலும் தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிடு பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக வடகரை யாத்தூர் மற்றும் வீ.கரைப் பாளையம் கிராம பகுதியை சேர்ந்த இருதரப்பினரின் கோரிக்கைகளை மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் டி.எஸ்.பி. கலையரசன், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா, பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி ஆகியோர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஆண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் 10 ஏக்கருக்கு மேல் கரும்பு நடவு செய்திருந்தார்.
    • தீ வைக்கப்பட்ட 10 ஏக்கர் கரும்பு வயல் முற்றிலும் எரிந்து சேதமானது

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஆண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் 10 ஏக்கருக்கு மேல் கரும்பு நடவு செய்திருந்தார். இவரைப் போலவே அருகில் உள்ள விவசாயிகள் பலரும் கரும்பு பயிரிட்டு தற்போது அறுவடை செய்து வருகின்றனர். இந்நிலையில் கருப்பையாவின் கரும்புஇன்னும் சில தினங்களில் அறுவடை செய்யவுள்ள நிலையில் அவரது கரும்பு வயலை அப்பகுதியை சேர்ந்தசிலர் முன்விரோதம் காரணமாக தீ வைத்ததாக கருப்பையா தெரிவித்து வருகிறார்.  தீ வைக்கப்பட்ட 10 ஏக்கர் கரும்பு வயல் முற்றிலும் எரிந்து சேதமானது.

                                                                                                           மேலும் விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வைத்திருந்த நீர்மூழ்கி மோட்டார் மற்றும் போர்வெல்லும் சேர்ந்து தீயில் சேதம் ஆனது. இதனால்   20 லட்சம் ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது. கரும்பு வயல் தீ விபத்தில் எரிந்து சேதமான நிலையில் இதுகுறித்து கரும்பு வயலைஅதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றுள்ளனர்.மேலும் இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதால் புகாரின் அடிப்படையில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளார். கரும்பு வெட்டி சர்க்கரை ஆலைக்கு அனுப்பும்போது தீயில் எரிந்த கரும்புவிற்கு அதிகாரிகள் சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனுமதி அளித்து கரும்புவைஎடுத்துக் கொண்டு முழு விலை தர வேண்டும் எனவும் கருப்பையா தெரிவித்துள்ளார். 

    • அரிய வகை மூலிகைச் செடிகள் எரிந்து நாசம்
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஆவின் பால் நிலையம் அருகில் உள்ள மலைப்பகுதியில் அரிய வகை மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளது.

    இந்த நிலையில் மர்ம கும்பல் சிலர் நேற்று முன்தினம் மலையில் தீவைத்துள்ளனர்.

    இதனால் காய்ந்த மஞ்சம்புற்கள் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கி, மலை முழுவதும் பரவியது.

    இதில் மூலிகை செடிகள், மரங்கள் தீயில் எரிந்து கருகி சாம்பலானது. மர்ம நபர்கள் தீ வைப்பது தொடர்கதையாக உள்ளது. மலைக்கு தீ வைக்கும் மர்ம நபர் களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • காட்டுக்கொட்டகை தீப்பிடித்து எறிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • வீட்டிலிருந்த கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தீக்கிரையானது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த புலிகாரம்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் முருகேசன் (வயது 45). விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் காட்டுக் கொட்டகை வீடு கட்டி வசித்து வருகிறார். வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வாங்குவதற்கு நேற்று இரவு 8 மணி அளவில் ராமநத்தம் சென்றார். இரவு 9.45 மணிக்கு வீடு திரும்பினார். அப்ேபாது இவரது காட்டுக்கொட்டகை தீப்பிடித்து எறிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதில் காட்டு கொட்டகை வீடு முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது. வீட்டிலிருந்த கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தீக்கிரையானது. இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் மேலும் விளை நிலத்திற்கு தீ பரவாமல் அணைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து காட்டுக்கொட்டைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் காட்டுக் கொட்டகை வீடு தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • மர்ம நபர் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி சென்றார்.

    கோவை,

    பொங்கல் பண்டிகை திருவிழாவையொட்டி வெளியூர் செல்வோர் பஸ், ெரயில் நிலையங்களில் காத்திருந்தனர். இந்நிலையில், கோவை சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் சாலையோரம் கூலி தொழிலாளி சுரேஷ் (வயது 30) என்பவர் படுத்து கொண்டிருந்தார்.

    இவர் மதுரையை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.சம்பவத்தன்று சுரேஷ் சாலையோரம் படுத்து இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி சென்றார்.

    தீ சுரேசின் உடல் முழுவதும் மளமளவேன பரவியது. தொழிலாளி சுரேஷ் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 90 சதவீதம் உடல் கருகிய நிலையில், சுரேஷை அக்கம்பக்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக தீ வைப்பு சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா, தீவைத்த மர்ம நபர் யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் நகர மக்கள் இருக்கும்போது நடந்த இந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • அங்கமுத்து (வயது 55). இவர் பூசாரிபாளையம் அ.தி.மு.க கிளை செயலாளராக இருந்து வருகிறார். ஊராட்சி மன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
    • இவரது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்தது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது 55). இவர் பூசாரிபாளையம் அ.தி.மு.க கிளை செயலாளராக இருந்து வருகிறார். ஊராட்சி மன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலையில், இவரது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த அங்கமுத்து மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக அங்கமுத்து மற்றும் அருகில் இருந்தவர்கள் சேர்ந்து, தீயை அணைத்தனர். இரு சக்கர வாகனங்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அங்கமுத்து நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? முன்விரோதம் காரணமா? கொடுக்கல் வாங்கல் தகராறா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அ.தி.மு.க பிரமுகரின் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அப்பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவர் துணி கடன் கேட்டு உள்ளார்.அதற்கு ஸ்ரீகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
    • இந்நிலையில் அங்கிருந்து திரும்பிச் சென்ற ஷாஜி நள்ளிரவில் மார்க்கெட்டிற்கு வந்து துணிக்கடைக்கு தீ வைத்துள்ளார்.

    குழித்துறை, அக்.27-

    மார்த்தாண்டம் அருகே நல்லூர் புளியங்விளாகத்தை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 67). இவர் மார்த்தாண்டம் மார்க்கெட்டில் துணிக்கடை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவர் துணி கடன் கேட்டு உள்ளார்.அதற்கு ஸ்ரீகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் அங்கிருந்து திரும்பிச் சென்ற ஷாஜி நள்ளிரவில் மார்க்கெட்டிற்கு வந்து துணிக்கடைக்கு தீ வைத்துள்ளார். தீ மளமளவென எரிவதை பார்த்ததும் மார்க்கெட்டில் இருந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். ஆனால் கடையின் முன் பகுதியில் கட்டப்பட்டு இருந்த பெட்ஷீட் மற்றும் துண்டுகள் எரிந்து நாசமானது. இதையடுத்து ஸ்ரீகுமார் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஷாஜியை தேடி வருகின்றனர்.

    • தபால் அலுவலக தெருவில் வசிக்கும் வியாபாரி முருகன் என்பவரது மோட்டார் சைக்கிளும் நள்ளிரவு தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்தது.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேடசந்தூரில் ஒரு மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் எரியோடு துரைச்சாமி நாடார் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்கச் சென்றார்.

    நள்ளிரவில் மர்ம நபர்கள் அந்த பைக்கை தீ வைத்து எரித்து விட்டு ஓடி விட்டனர். அக்கம் பக்கத்தினர் தீ பற்றி எரிவதை பார்த்து கூச்சலிட்டனர். மேலும் தீயை அணைக்க முயன்றனர். இருந்தபோதும் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து சேதமானது.

    இதே போல தபால் அலுவலக தெருவில் வசிக்கும் வியாபாரி முருகன் என்பவரது மோட்டார் சைக்கிளும் நள்ளிரவு தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்தது. இன்று காலையில் அதனை பார்த்த முருகன் அதிர்ச்சியடைந்தார். வெவ்வேறு இடங்களில் 2 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அப்பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்கள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா? என்றும் தீ வைத்த கும்பலின் உருவம் அதில் பதிவாகியுள்ளதா? என்றும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்றும் விசாரித்து வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேடசந்தூரில் ஒரு மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதே போல் திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியிலும் பா.ஜ.க. நிர்வாகியின் 6 மோட்டார் சைக்கிள்கள், 1 கார் தீ வைத்து எரிக்கப்பட்டது. தற்போது எரியோட்டிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடலூர் முதுநகர் குழந்தை காலனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் கொட்டகையில் இயங்கி வந்தது.
    • தீ வைத்து எரித்த மர்ம நபர்களை உடனடியாக பிடித்து குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் குழந்தை காலனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் கொட்டகையில் இயங்கி வந்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென்று கட்சி அலுவலகம் எரிந்து சாம்பலானது. அப்போது இதனை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதிர்ச்சி அடைந்து ஏராளமானோர் திரண்டனர். ஆனால் மர்ம நபர்கள் யார் கட்சி அலுவலகத்திற்கு தீ வைத்தனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அப்பகுதி முழுவதும் தீவிரமாக தேடி வந்தனர். 


    தகவல் அறிந்த மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அப்பகுதியில் திரண்டனர். இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையும் மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைசெல்வன் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கரிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை உடனடியாக பிடித்து குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்தன. மேலும் அப்பகுதி முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது.

    • ஆணைக்குளம் பஸ் நிறுத்தத்தில் பெட்டிகடை வைத்துள்ளார்.
    • பெட்டி கடை மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் விசாரித்து தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் திருச்சுழி ஆணைக்குளம் பஸ் நிறுத்தத்தில் பெட்டிகடை வைத்துள்ளார்.

    சம்பவத்தன்று அதிகாலை மர்ம நபர்கள் பெட்டிகடைக்கும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த முருகேசனின் மோட்டார் சைக்கிளுக்கும் தீ வைத்து விட்டு சென்றனர். இதில் பெட்டிகடை, மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வீரசோழன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×