என் மலர்

  தமிழ்நாடு

  திண்டுக்கல் அருகே நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த கும்பல்
  X

  திண்டுக்கல் அருகே நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த கும்பல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தபால் அலுவலக தெருவில் வசிக்கும் வியாபாரி முருகன் என்பவரது மோட்டார் சைக்கிளும் நள்ளிரவு தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்தது.
  • கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேடசந்தூரில் ஒரு மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது.

  வடமதுரை:

  திண்டுக்கல் மாவட்டம் எரியோடு துரைச்சாமி நாடார் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்கச் சென்றார்.

  நள்ளிரவில் மர்ம நபர்கள் அந்த பைக்கை தீ வைத்து எரித்து விட்டு ஓடி விட்டனர். அக்கம் பக்கத்தினர் தீ பற்றி எரிவதை பார்த்து கூச்சலிட்டனர். மேலும் தீயை அணைக்க முயன்றனர். இருந்தபோதும் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து சேதமானது.

  இதே போல தபால் அலுவலக தெருவில் வசிக்கும் வியாபாரி முருகன் என்பவரது மோட்டார் சைக்கிளும் நள்ளிரவு தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்தது. இன்று காலையில் அதனை பார்த்த முருகன் அதிர்ச்சியடைந்தார். வெவ்வேறு இடங்களில் 2 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  அப்பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்கள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா? என்றும் தீ வைத்த கும்பலின் உருவம் அதில் பதிவாகியுள்ளதா? என்றும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்றும் விசாரித்து வருகின்றனர்.

  கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேடசந்தூரில் ஒரு மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதே போல் திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியிலும் பா.ஜ.க. நிர்வாகியின் 6 மோட்டார் சைக்கிள்கள், 1 கார் தீ வைத்து எரிக்கப்பட்டது. தற்போது எரியோட்டிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×