என் மலர்
உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க பிரமுகரின் இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து கொண்டிருக்கும் காட்சி.
அ.தி.மு.க பிரமுகர் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு
- அங்கமுத்து (வயது 55). இவர் பூசாரிபாளையம் அ.தி.மு.க கிளை செயலாளராக இருந்து வருகிறார். ஊராட்சி மன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
- இவரது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்தது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது 55). இவர் பூசாரிபாளையம் அ.தி.மு.க கிளை செயலாளராக இருந்து வருகிறார். ஊராட்சி மன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
இந்நிலையில் நேற்று அதிகாலையில், இவரது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த அங்கமுத்து மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக அங்கமுத்து மற்றும் அருகில் இருந்தவர்கள் சேர்ந்து, தீயை அணைத்தனர். இரு சக்கர வாகனங்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அங்கமுத்து நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? முன்விரோதம் காரணமா? கொடுக்கல் வாங்கல் தகராறா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க பிரமுகரின் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






