search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர்"

    • லட்சக்கணக்கான வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள்.
    • திருப்பூர் மாநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் மழையின் காரணமாக கொசு உற்பத்தி அதிகரித்து ள்ளதால், அதனை தடுக்கு வீதிகள் தோறும் மாநகரில் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது.

    திருப்பூர் மாநகரில் பனியன் நிறுவனங்கள் உள்ள தால், லட்சக்கணக்கான வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இதன் காரணமாக பொதுமக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியாகவும் திருப்பூர் மாநகர் பகுதி இருந்து வருகிறது. இந்நிலையில் பருவமழை தொடங்கிய நிலையில் திருப்பூர் மாநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாநகர் பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியும் அதிகரி த்துள்ளது. கொசுக்கள் உற்பத்தியை தடுக்க மாநகராட்சி பருவகால முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது. இந்த 60 வார்டுகளிலும் சுழற்சி முறையில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களும் வீடு, வீடாக சென்றும், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிகளுக்கு சென்றும் குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து வருகிறார்கள். கொசுப்புழு உற்பத்தியை தடுக்கும் வகையில் கொசு மருந்து அடித்தும், அபேட் மருந்துகளை தெளித்தும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது :- திருப்பூர் மாநகராட்சியில் மழைக்காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பணிகள் திட்டமிட்டு மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. 60 வார்டுகளிலும் வீதிகள் தோறும் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. ஒரு பகுதி கூட விடுபடாமல் அனைத்து பகுதிகளுக்கு மருந்துகள் அடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தொழிலாளர்கள் நெருக்கம் அதிகமாக நிறைந்த பகுதிகள் கூடுதல் கவனத்துடன் கையா ளப்பட்டு வருகின்றன.

    பொதுமக்களும் தங்களது வீடுகள் அருகில் சிரட்டை, டயர்கள் போன்றவற்றில் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் வீட்டு உரிமையாளர்கள் வைத்திருந்தால், அவர்களு க்கு அபராதமும் விதி க்கப்படும். எனவே சுகாதார பணிகளுக்கு பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மாநகரில் பிற்பகல் முதலே வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
    • மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் சாரல் மழை நீடித்தது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. மாநகரில் பிற்பகல் முதலே வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இதைத்தொடா்ந்து, திருப்பூா் பழைய பேருந்து நிலையம், ரெயில் நிலையம், காந்திநகா், மங்கலம் சாலை, ஊத்துக்குளி சாலை, காங்கயம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் சாரல் மழை நீடித்தது. மழையின் காரணமாக பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள், பணிமுடிந்து சென்ற தொழிலாளா்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.மேலும் திருப்பூரில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.  

    • வேலைவாய்ப்பு முகாம் காலை 10.30 மணிக்கு அறை எண் 439, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருப்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
    • எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 28-ந்தேதி காலை 10.30 மணிக்கு புதிய மாவட்ட கலெக்டர் வளாகம், அறை எண் 439, 4வது தளம், பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருப்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

    முகாமில் தனியார் துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு பயன்தாரர்களை தேர்வு செய்ய வருகை தர இருக்கிறார்கள். அது சமயம் வேலைநாடுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். வேலையளிப்போரும் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

    அதனால் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். 28.10.2022 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமிற்கு வரும்போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால், அதனை சரிசெய்து கொள்ளலாம். புதுப்பித்துக்கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்து கொள்ளலாம். தகுதியிருப்பின் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது. இப்பணி முற்றிலும் இலவசமானது. மேலும் விவரங்களுக்கு 0421-2999152, 9499055944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை ஏற்படும்.
    • திருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை அவினாசிசாலை, புஷ்பா தியேட்டர், காலேஜ் சாலை, ஓடக்காடு, பங்களா பஸ் நிறுத்தம், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, கே.ஆர்.இ. லே அவுட், எஸ்.ஆர்.நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம்.ஜி.ஆர்.நகர், பாரதி நகர், வளையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோநகர், காமாட்சிபுரம், பூத்தார்நகர், சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர் பகுதி, கல்லம்பாளையம், எஸ்.ஏ.பி.தியேட்டர் பகுதி, ஆசர்நகர், நாராயணசாமிநகர், காந்திநகர், டிடிபி மில்லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணாகாலனி, ஜீவாகாலனி, அங்கேரிபாளையம் சாலை, சிங்காரவேலர் நகர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் இருந்து வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.
    • வாகன நெரிசலை பார்த்து போக்குவரத்து மாற்றத்தை அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் இருந்து வெளிமவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதற்காக திருப்பூரில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பயணிகள் வருகையை பொறுத்து 400 சிறப்பு பஸ்கள் தொடர்ச்சியாக இயக்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக அதிகாரி–ள் தெரிவித்தனர்.கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகை–யில் மாந–க–ரில் இன்று வாகன நெரிசலை பார்த்து போக்குவரத்து மாற்றத்தை அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து பழனி, திண்டுக்கல், மதுரை, தேனி வழித்தட பஸ்கள், தென்மாவட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, கோவை வழித்தடங்களில் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகிறது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சேலம், திருவண்ணாமலை, சென்னை பஸ்களும், அவினாசி வழியாக கோவை, மேட்டுப்பாளையம், ஊட்டி, சத்தியமங்கலம், ஈரோடு, கோபிசெட்டிப்பாளையம் பஸ்களும் இயக்கப்படுகிறது.

    பழைய பஸ் நிலையத்தில் இருந்து நகர பஸ்கள், அவினாசி, பெருமாநல்லூர், ஊத்துக்குளி, காங்கயம், கொடுவாய், பல்லடம், சோமனூர் வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • நீண்ட காலம் முன்னர் அமைந்த குடியிருப்புகளில் உரிய மழை நீர் வடிகால் வசதியில்லாத நிலை உள்ளது
    • மழை நாட்களில் மழை நீர் செல்ல வழியின்றி ரோட்டில் சென்று பாய்வதும் வாடிக்கையாக உள்ளது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் லட்சக்கணக்கான குடியிருப்புகள், தொழிற்சாலை, வர்த்தக கட்டடங்கள் உள்ளன. பிரதான ரோடுகள், முக்கிய வீதிகள் மற்றும் தெருக்களில் கழிவு நீர் கால்வாய்கள், பாதாள சாக்கடை திட்டம் ஆகியன உள்ளன. இருப்பினும் நீண்ட காலம் முன்னர் அமைந்த குடியிருப்புகளில் உரிய மழை நீர் வடிகால் வசதியில்லாத நிலை உள்ளது. பிரதான ரோடுகள், ெரயில்வே பாலங்கள் பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி அவதி ஏற்படுவதும், நீண்ட காலமாக தூர் வாராமல் உரிய பராமரிப்பில்லாத கால்வாய்களில் மழை நாட்களில் மழை நீர் செல்ல வழியின்றி ரோட்டில் சென்று பாய்வதும் வாடிக்கையாக உள்ளது.இதற்கு தீர்வு காணும் வகையில் அனைத்து வார்டுகளிலும் கழிவு நீர் கால்வாய் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தேங்கி கிடந்த மண் மற்றும் திடக்கழிவுகள் அகற்றிய நிலையில், கழிவு நீர் முறையாக கடந்து செல்ல வழி ஏற்பட்டுள்ளது.

    நகரின் மையமாக உள்ள நொய்யல் ஆறு மற்றும் இதில் சேரும் கிளை ஓடை, பள்ளம் மற்றும் வாய்க்கால்கள் நீர் வடிப் பகுதியாக உள்ளன. இவற்றின் கரைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் காரணமாக மழையின் போது மழை நீர் முறையாக செல்லாமல் அருகேயுள்ள குடியிருப்புகள், கட்டடங்களில் புகுவதும், ரோட்டில் சென்று பாய்வதும் பெரும் அவதியை ஏற்படுத்துவதாக இருந்தது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் தற்போது நீர் பாயத் தடையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த காலங்கள் போல் மழை பாதிப்புகள் ஏற்படாத வகையில், மாநகராட்சி நிர்வாகம் தற்போது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

    இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:-

    நகரைக் கடந்து செல்லும் ஏறத்தாழ 7 கி.மீ., நீளமுள்ள நொய்யல் ஆறு தூர் வாரும் பணி பெருமளவு நிறைவடைந்துள்ளது. இதில் வந்து சேரும் ஓடைகள், நல்லாறு, பள்ளம், வாய்க்கால் அனைத்தும் தூர்வாரும் பணி நடைபெறுகிறது. இதில் பொக்லைன் வாகனங்கள், செயின் டோசர் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இப்பணி முழுமையடையும் நிலையில் உள்ளது.நகரில் பெரும் சவாலாக இருந்து வரும் கழிவு நீர் கால்வாய்கள் தூர் வாரும் பணி துரிதமாக நடக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நிரந்தர கான்கிரீட் மூடிய நிலையில் உள்ளதால் அவற்றில் திடக்கழிவு அகற்றும் பணிக்கு முன்னுரிமை அளித்து பணி நடக்கிறது. இதில் நவீன ஸ்லிட்டிங் எந்திரங்கள்,ரீசைக்ளர் எந்திரம் ஒன்றும் சோதனை அடிப்படையில் களம் இறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் 9 டன் எடையுள்ள திடக்கழிவு அகற்றப்பட்டுள்ளது.மழையின் போது அதிகளவில் பாதிக்கப்படும் பகுதிகளாக 2,4,7,8,47 மற்றும் 58 ஆகிய வார்டுகளில் மொத்தம் 29 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் மழை நீர் தேங்கினால் உடனடியாக அகற்றும் வகையில் ஜெனரேட்டர் வசதியுடன் பம்பிங் மோட்டார் தயார் நிலையில் உள்ளது. இது தவிர 8 ஜெட் ராடு வாகனங்கள், 5 ஸ்லிட்டிங் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், 4 ஆட்டோக்களில் இது போல் பம்பிங் மோட்டார் அமைப்புடன் தயாராக உள்ளது. வேறு பகுதிகளில் தேவை ஏற்பட்டால் அவை அங்கு சென்று பயன்படுத்தப்படும். வார்டுவாரியாக மாநகராட்சி அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு இப்பணிகளை கண்காணித்து வருகின்றனர்.சுகாதாரப் பிரிவைப் பொறுத்தவரை வார்டு வாரியாக காய்ச்சல் கண்டறிதல் மற்றும் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. உரிய மருந்துகள் தேவையான அளவு இருப்பு உள்ளது. கொசு ஒழிப்பு பணியாளர்கள் பகுதி வாரியாக 3 நாளுக்கு ஒருமுறை சென்று கொசு மருந்து தெளித்தல், கொசுப்புழு ஒழித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நடப்பு பருவ மழையின் பாதிப்புகள் ஏற்படாத வகையிலும், ஏதும் இருப்பின் அதை எதிர்கொள்ளும் வகையிலும் மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

    பொதுமக்கள் தங்கள் வீடுகளில் நீர் தேங்காத வகையில் கவனமாக இருக்க வேண்டும்.மைய அலுவலகத்தை, 155304 என்ற டோல் பிரீ எண்ணில் தொடர்பு கொண்டு மழை பாதிப்புகள் இருப்பின் புகார் தெரிவிக்கலாம் என்றார். 

    • மின்பகிர்மான வட்ட கூடுதல் தலைமை பொறியாளர் தலைமையில் காலை 11 மணிக்கு செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.
    • பொதுமக்கள் மின் தொடர்பான தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருப்பூர் மின்பகிர்மான வட்ட கூடுதல் தலைமை பொறியாளர் தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு திருப்பூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. பொதுமக்கள் மின் தொடர்பான தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம்.

    இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • சாலை விரிவாக்கத்திற்காக உயரழுத்த மின்பாதையில் மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி நாளை நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.

    திருப்பூர் :

    அவினாசி மின்–சார வாரிய செயற்பொறியாளர் பி.பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    அனுப்பர்பாளையம் பிரதான சாலையில் வேலம்பாளையம் பிரிவு அருகில் சாலை விரிவாக்கத்திற்காக உயரழுத்த மின்பாதையில் மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. எனவே 11 கே.வி. சோளிபாளையம் மின்பாதை மற்றும் 11 கே.வி. வேலம்பாளையம் மின்பாதை ஆகியவற்றிற்குட்பட்ட காசிக்காடு, டி.டி.பி.மில், பி.டி.ஆர்.நகர், சிறுபூலுவப்பட்டி, சொர்ணபுரி, அம்மன் நகர், திலகர் நகர், புதுக்காலனி, மற்றும் வேலம்பாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல் குன்னத்தூர் 16 வேலம் பாளையம், குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குன்னத்தூர், ஆதியூர், தாளபதி, கருமஞ்சிறை, வெள்ளிரவெளி, சின்னியம்பாளையம், கணபதிபாளையம், வேலம்பாளையம், நவக்காடு, செட்டி குட்டை, எடைய பாளையம், கம்மாள குட்டை, சொக்கனூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை பெருந்துறை மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் அவசர கால பராமரிப்புப் பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காங்கயம், திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூர், அரசம்பாளையம், கீரனூர், மொட்டர்பாளையம், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயர்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆர்.பாளையம், ஜி.வி.பாளையம், புதூர், நாமக்காரன்புதூர், ரோகார்டன், கோயம்பேடு, மரவபாளையம், பரஞ்சேர்வழி, ராசிபாளையம், சிவியார்பாளையம், வளையன்காட்டுதோட்டம், ஜெ.ஜெ.நகர், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம், நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டுவலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்திரெட்டிபாளையம், நெய்க்காரன்பாளையம், ஆலாம்பாடி, கல்லேரி முத்தூர் துணை மின் நிலையத்திற்குப்பட்ட முத்தூர், வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இந்த தகவலை தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் வெ.கணேஷ் தெரிவித்துள்ளார்.

    • வேலைவாய்ப்பு தொடர்பாக தினந்தோறும் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர்.
    • தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தொழில் நகரமான திருப்பூருக்கு தினந்தோறும் வேலைவாய்ப்பு தொடர்பாக வடமாநிலங்கள் மற்றும் அண்டை மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். இதனால் பஸ் நிலையங்கள், ரெயில்வே நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் பனியன் நிறுவனங்களுக்கு பலர் பணிக்கு வந்து செல்வதால் காலை, மாலை மற்றும் வார விடுமுறை நாட்களில் பஸ் நிலைய பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது திருப்பூர் நகரில் சில வருடங்களாக வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பழைய பஸ் நிலையம் தொடங்கி ரெயில்வே நிலையம் வரை வாகனங்கள் வரை நீண்ட வரிசையில் ஆமை வேகத்தில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுக்கு மேலாக பழைய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால் பஸ்கள் பஸ் நிலையத்தின் வெளியே பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதுவே போக்குவரத்து நெருக்கடிக்கு காரணமாகும்.

    இது குறித்து பயணிகள் கூறுகையில், தற்போது பஸ் நிலையத்தில் இறுதி கட்ட பணிகள் (ஆர்ச் அமைப்பு) நடந்து வருவதால் முன்பு போல பஸ் நிலைய வளாகத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்ற முடியவில்லை. பல்லடம் சாலையில் இருபுறங்களிலும் கோவை மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. பல்லடம், அவினாசி, அனுப்பர்பாளையம், புதிய பஸ் நிலையம் வழியாக செல்லும் அனைத்து அரசு பஸ்கள், தனியார் மினி பஸ்கள் சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க வேண்டியிருப்பதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பயணிகள் நிற்பதற்கு இடம் இன்றி அவதிப்படுகின்றனர். ரோட்டில் நடந்து செல்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நடைபாதைகளில் திடீர் கடைகள் முளைத்து உள்ளதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நிற்க இடமின்றி அவஸ்தைப்படுகின்றனர்.

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. சாதாரண நாட்களிலேயே இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நெருக்கடி இருக்கும் நிலையில், பண்டிகை நாட்களில் எப்படி இருக்கும். இந்த பகுதிகளில் முக்கிய ஜவுளிக்கடைகள், நகைகடைகள் மற்றும் மளிகைகடைகள் அதிகளவில் உள்ளன. தினந்தோறும் மக்கள் வந்து செல்கின்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற சம்பவங்களும் நடக்க வாய்ப்புள்ளது. பஸ் நிலைய பணிகள் இறுதிக்கட்டத்தில் இருந்தாலும் முழுமையாக பணிகள் முடிய இன்னும் சில மாதங்கள் ஆகலாம். ஆகவே பழைய பஸ் நிலையம் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்வதற்கு போக்குவரத்து போலீசாரும், மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக மாற்று நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றனர்.  

    • திருப்பூா் மாவட்டத்தில் கருத்துக் கேட்புக்கூட்டம் நாளை 14-ந்தேதி பிற்பகல் 2 மணி அளவில் நடைபெறுகிறது.
    • மாவட்டக் கல்வி அலுவலா்கள் தலைமையில் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    மாநிலக் கல்விக் கொள்கை வகுப்பதற்காக திருப்பூா் மாவட்டத்தில் நாளை 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகத்துக்கு தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை வகுப்பதற்காக திருப்பூா் மாவட்டத்தில் கருத்துக் கேட்புக்கூட்டம் நாளை 14-ந்தேதி பிற்பகல் 2 மணி அளவில் நடைபெறுகிறது.

    இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டமானது மாவட்டக் கல்வி அலுவலா்கள் தலைமையில் நடைபெறுகிறது. கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கல்வியாளா்கள், தலைமை ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியா்கள், ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், பெற்றோா் கலந்துகொள்ளலாம்.

    கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பும் நபா்கள் தங்களது கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்து கூட்டத்தில் ஒப்படைக்கலாம்.இந்த கருத்துக் கேட்புக் கூட்டமானது திருப்பூா் கே.எஸ்.சி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தாராபுரம் என்சிபி நகரவை மேல்நிலைப் பள்ளி, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 2020ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற அதிகாரிகள், வெளிமாநிலங்களில் பயிற்சி பெற்று வந்தனர்.
    • ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 12 பேர் தமிழக அரசு பணிக்கு திரும்பியுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக ஸ்ருதன் ஜெய் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார் அவர் கடந்த, 2020ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற அதிகாரிகள், வெளிமாநிலங்களில் பயிற்சி பெற்று வந்தனர். பயிற்சி நிறைவடைந்த நிலையில், பல்வேறு அரசுத்துறைகளிலும் பணியாற்றி வந்தனர். புதுடில்லி மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 12 பேர் தமிழக அரசு பணிக்கு திரும்பியுள்ளனர். அவர்களில், மத்திய அரசின் திறன் வளர்ப்பு சார் செயலாளராக இருந்த ஸ்ருதன்ஜெய் நாராயணன், திருப்பூர் சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருப்பூர் வருவாய் கோட்டத்தின் சப்-கலெக்டராக நியமிக்கப்ப ட்டுள்ள ஸ்ருதன்ஜெய் நாராயணன், சினிமா நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை முதல் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணி நடைபெற உள்ளது.
    • கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினால் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவில் மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டிடம், எஸ்.கே.புதூர் கூட்டுறவு சங்க கட்டிடம் ஆகிய இடங்களில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நாளை (சனிக்கிழமை) முதல் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணி நடைபெற உள்ளது.

    விவசாயிகள் நேரடிநெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து, நெல் விற்பனை செய்ய வசதியாக கொள்முதல் பருவம் 2022-23-ல் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    எனவே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்து விவசாயிகள் தாங்கள் இருக்கும் கிராமங்களின் அருகில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலுக்கு தேவையான வருவாய் ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த விவசாயிகளின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாக நெல் விற்பனை செய்யும் நாள், நேரம் ஆகியவை தெரிவிக்கப்படும். சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 160-க்கும், பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 115-க்கும் விற்பனைசெய்யலாம். மேலும் விவரங்களுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூட மண்டல மேலாளர் அலுவலகத்தை 94437 32309 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×