search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stagnant rainwater"

      பள்ளிபாளையம்:

      நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே காவிரி பகுதியில் ெரயில்வே சுரங்கப் பாதை உள்ளது. இதன் வழியாக நாமக்கல், ஈரோடு, திருச்செங்கோடு, ராசிபுரம், கொக்கரா யன்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகிறது.

      குளம்போல்...

      மழை பெய்யும் சமயங்களில் மழைநீர் சுரங்கப் பாதையின் மையப்பகுதியின் வந்து சேரும். இவ்வாறு வரும் மழை நீரை உடனடியாக வெளியேற்றும் வகையில் தானியங்கி மோட்டார் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை மழை பெய்தது. மழை நீர் சுரங்கப் பாதையின் மையப்பகுதியில் தேங்கி குளம் போல் காட்சியளித்தது.

      தானியங்கி மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளதால் உடனடியாக மழை நீரை வெளியேற்ற வில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். குறிப்பாக மோட்டார்சைக்கிள், வாகனங்களில் சென்ற வர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

      மழை நின்றவுடன் சாலை பணியாளர்கள் வந்து சாதாரண மோட்டர் மூலம் தண்ணீரை வெளியேற்றி சரி செய்தனர்.

      • விவசாயிகள் வேதனை
      • தென்னை மரங்கள், பயிர்கள் சேதம்

      அணைக்கட்டு:

      அணைக்கட்டு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

      தற்போது, விவசாயிகள் நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டுள்ளனர். நன்கு வளர்ந்துள்ள நிலக்கடலை பயிர்கள் வெயிலின் தாக்கத்தால் கருகிய நிலையில் இருந்தது. இந்நிலையில், நேற்று முதல் அணைக்கட்டு சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்ய தொடங்கியது.

      சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

      இதனால், தென்னை மரங்கள் மற்றும் பயிர்கள் புத்துயிர் பெற்று செழுமையாக உள்ளது. இருந்தாலும், இந்த கனமழை நீடித்தால் மற்ற பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

      • வாகனங்கள் ஊர்ந்து சென்றன

      ஆம்பூர்:

      ஆம்பூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

      இதனால் வாணியம்பாடி, ஆம்பூர் சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றனர்.

      கடந்த 4 நாட்களாக அவ்வப்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசி வருகிறது.இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

      • நீண்ட காலம் முன்னர் அமைந்த குடியிருப்புகளில் உரிய மழை நீர் வடிகால் வசதியில்லாத நிலை உள்ளது
      • மழை நாட்களில் மழை நீர் செல்ல வழியின்றி ரோட்டில் சென்று பாய்வதும் வாடிக்கையாக உள்ளது.

      திருப்பூர் : 

      திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் லட்சக்கணக்கான குடியிருப்புகள், தொழிற்சாலை, வர்த்தக கட்டடங்கள் உள்ளன. பிரதான ரோடுகள், முக்கிய வீதிகள் மற்றும் தெருக்களில் கழிவு நீர் கால்வாய்கள், பாதாள சாக்கடை திட்டம் ஆகியன உள்ளன. இருப்பினும் நீண்ட காலம் முன்னர் அமைந்த குடியிருப்புகளில் உரிய மழை நீர் வடிகால் வசதியில்லாத நிலை உள்ளது. பிரதான ரோடுகள், ெரயில்வே பாலங்கள் பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி அவதி ஏற்படுவதும், நீண்ட காலமாக தூர் வாராமல் உரிய பராமரிப்பில்லாத கால்வாய்களில் மழை நாட்களில் மழை நீர் செல்ல வழியின்றி ரோட்டில் சென்று பாய்வதும் வாடிக்கையாக உள்ளது.இதற்கு தீர்வு காணும் வகையில் அனைத்து வார்டுகளிலும் கழிவு நீர் கால்வாய் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தேங்கி கிடந்த மண் மற்றும் திடக்கழிவுகள் அகற்றிய நிலையில், கழிவு நீர் முறையாக கடந்து செல்ல வழி ஏற்பட்டுள்ளது.

      நகரின் மையமாக உள்ள நொய்யல் ஆறு மற்றும் இதில் சேரும் கிளை ஓடை, பள்ளம் மற்றும் வாய்க்கால்கள் நீர் வடிப் பகுதியாக உள்ளன. இவற்றின் கரைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் காரணமாக மழையின் போது மழை நீர் முறையாக செல்லாமல் அருகேயுள்ள குடியிருப்புகள், கட்டடங்களில் புகுவதும், ரோட்டில் சென்று பாய்வதும் பெரும் அவதியை ஏற்படுத்துவதாக இருந்தது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் தற்போது நீர் பாயத் தடையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த காலங்கள் போல் மழை பாதிப்புகள் ஏற்படாத வகையில், மாநகராட்சி நிர்வாகம் தற்போது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

      இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:-

      நகரைக் கடந்து செல்லும் ஏறத்தாழ 7 கி.மீ., நீளமுள்ள நொய்யல் ஆறு தூர் வாரும் பணி பெருமளவு நிறைவடைந்துள்ளது. இதில் வந்து சேரும் ஓடைகள், நல்லாறு, பள்ளம், வாய்க்கால் அனைத்தும் தூர்வாரும் பணி நடைபெறுகிறது. இதில் பொக்லைன் வாகனங்கள், செயின் டோசர் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இப்பணி முழுமையடையும் நிலையில் உள்ளது.நகரில் பெரும் சவாலாக இருந்து வரும் கழிவு நீர் கால்வாய்கள் தூர் வாரும் பணி துரிதமாக நடக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நிரந்தர கான்கிரீட் மூடிய நிலையில் உள்ளதால் அவற்றில் திடக்கழிவு அகற்றும் பணிக்கு முன்னுரிமை அளித்து பணி நடக்கிறது. இதில் நவீன ஸ்லிட்டிங் எந்திரங்கள்,ரீசைக்ளர் எந்திரம் ஒன்றும் சோதனை அடிப்படையில் களம் இறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் 9 டன் எடையுள்ள திடக்கழிவு அகற்றப்பட்டுள்ளது.மழையின் போது அதிகளவில் பாதிக்கப்படும் பகுதிகளாக 2,4,7,8,47 மற்றும் 58 ஆகிய வார்டுகளில் மொத்தம் 29 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் மழை நீர் தேங்கினால் உடனடியாக அகற்றும் வகையில் ஜெனரேட்டர் வசதியுடன் பம்பிங் மோட்டார் தயார் நிலையில் உள்ளது. இது தவிர 8 ஜெட் ராடு வாகனங்கள், 5 ஸ்லிட்டிங் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், 4 ஆட்டோக்களில் இது போல் பம்பிங் மோட்டார் அமைப்புடன் தயாராக உள்ளது. வேறு பகுதிகளில் தேவை ஏற்பட்டால் அவை அங்கு சென்று பயன்படுத்தப்படும். வார்டுவாரியாக மாநகராட்சி அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு இப்பணிகளை கண்காணித்து வருகின்றனர்.சுகாதாரப் பிரிவைப் பொறுத்தவரை வார்டு வாரியாக காய்ச்சல் கண்டறிதல் மற்றும் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. உரிய மருந்துகள் தேவையான அளவு இருப்பு உள்ளது. கொசு ஒழிப்பு பணியாளர்கள் பகுதி வாரியாக 3 நாளுக்கு ஒருமுறை சென்று கொசு மருந்து தெளித்தல், கொசுப்புழு ஒழித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நடப்பு பருவ மழையின் பாதிப்புகள் ஏற்படாத வகையிலும், ஏதும் இருப்பின் அதை எதிர்கொள்ளும் வகையிலும் மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

      பொதுமக்கள் தங்கள் வீடுகளில் நீர் தேங்காத வகையில் கவனமாக இருக்க வேண்டும்.மைய அலுவலகத்தை, 155304 என்ற டோல் பிரீ எண்ணில் தொடர்பு கொண்டு மழை பாதிப்புகள் இருப்பின் புகார் தெரிவிக்கலாம் என்றார். 

      • கடந்த சில தினங்களாக பெய்த தொடர்மழையால் நீர் கிராமத்துக்குள் புகுந்து வீடுகளை சூழ்ந்துள்ளது.
      • இதே நிலை நீடித்தால் கிராமத்தில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

      நிலக்கோட்டை:

      நிலக்கோட்டை அருகே ராமராஜபுரம் ஊராட்சி, ஆர். மீனாட்சிபுரத்தில் சுமார் 250 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் விவசாயம், கூலித்தொழில், மற்றும் கைவினைப் பொருட்கள் செய்யும் தொழிலாளர்களாக உள்ளனர்.

      கடந்த சில தினங்களாக பெய்த தொடர்மழையால் நீர் கிராமத்துக்குள் புகுந்து வீடுகளை சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

      இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. மழைநீர் சூழ்ந்துள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

      இதே நிலை நீடித்தால் கிராமத்தில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

      ×