காவிரி ரெயில்வே சுரங்கபாதையில் குளம்போல் தேங்கிய மழைநீர்

குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
Published on

பள்ளிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே காவிரி பகுதியில் ெரயில்வே சுரங்கப் பாதை உள்ளது. இதன் வழியாக நாமக்கல், ஈரோடு, திருச்செங்கோடு, ராசிபுரம், கொக்கரா யன்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகிறது.

குளம்போல்...

மழை பெய்யும் சமயங்களில் மழைநீர் சுரங்கப் பாதையின் மையப்பகுதியின் வந்து சேரும். இவ்வாறு வரும் மழை நீரை உடனடியாக வெளியேற்றும் வகையில் தானியங்கி மோட்டார் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை மழை பெய்தது. மழை நீர் சுரங்கப் பாதையின் மையப்பகுதியில் தேங்கி குளம் போல் காட்சியளித்தது.

தானியங்கி மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளதால் உடனடியாக மழை நீரை வெளியேற்ற வில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். குறிப்பாக மோட்டார்சைக்கிள், வாகனங்களில் சென்ற வர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மழை நின்றவுடன் சாலை பணியாளர்கள் வந்து சாதாரண மோட்டர் மூலம் தண்ணீரை வெளியேற்றி சரி செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com