search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக மீனவர்கள்"

    • நடுக்கடலில் தங்களை மீட்ட கடலோர காவல் படை அதிகாரிகள், வீரர்களுக்கு தமிழக மீனவர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.
    • கடந்த டிசம்பரில் டிரோன் தாக்குதலுக்கு உள்ளான இந்திய சரக்கு கப்பலை, விக்ரம் ரோந்து கப்பல் வெற்றிகரமாக மீட்டது குறிப்பிடத்தக்கது.

    கொழும்பு:

    தமிழகத்தை சேர்ந்த 11 மீனவர்கள், அரபிக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். கடந்த 5-ந்தேதி அவர்களது விசைப்படகின் என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக 11 தமிழக மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்தனர்.

    அந்த வழியாக சென்ற இந்திய கடலோர காவல் படையினர் விக்ரம் ரோந்து கப்பலை சேர்ந்த அதிகாரிகள், தமிழக மீனவர்கள் நடுக்கடலில் பரிதவிப்பதை கண்டுபிடித்தனர். மீன்பிடி விசைப்படகின் என்ஜின் கோளாறை சரி செய்ய கடலோர காவல் படை வீரர்கள் தீவிர முயற்சி செய்தனர். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.

    இதைத் தொடர்ந்து விக்ரம் ரோந்து கப்பல் மூலம் 280 கடல் மைல் தொலைவுக்கு விசைப்படகை இழுத்து வந்து லட்சத்தீவின் மினிக்காய் தீவில் உள்ள இந்திய கடலோர காவல் படை தளத்தில் ஒப்படைத்தனர். அங்கு விசைப்படகு என்ஜின் கோளாறை சரி செய்யும் பணி நடைபெறுகிறது.

    இது தொடர்பாக இந்திய கடலோர காவல் படை சமூக வலை தளத்தில் வெளியிட்ட பதிவில், விசைப்படகு என்ஜின் கோளாறால் நடுக்கடலில் தத்தளித்த 11 மீனவர்களை மீட்டு லட்சத்தீவின் மினிக் காய் தீவில் உள்ள கடலோர காவல் படை தளத்தில் ஒப்படைத்தோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக விசைப்படகையும், தமிழக மீனவர்களையும் மீட்டபோது எடுத்த புகைப் படங்களையும் கடலோர காவல் படை சமூக வலை தளத்தில் வெளியிட்டு உள்ளது. நடுக்கடலில் தங்களை மீட்ட கடலோர காவல் படை அதிகாரிகள், வீரர்களுக்கு தமிழக மீனவர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர். அதோடு சமூக வலை தளத்தில் கடலோர காவல் படைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கட்டுமான தளத்தில் விக்ரம் ரோந்து கப்பல் தயார் செய்யப்பட்டது. இந்த கப்பல் தற்போது அரபிக்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.

    கடந்த டிசம்பரில் டிரோன் தாக்குதலுக்கு உள்ளான இந்திய சரக்கு கப்பலை, விக்ரம் ரோந்து கப்பல் வெற்றிகரமாக மீட்டது குறிப்பிடத்தக்கது.

    • மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றது மிகவும் கண்டிக்கத்தக்கது.
    • மீன்பிடித்தொழிலுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் இழப்புக்கு நிவாரணம் பெற்றுத்தரவும், சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்களை, படகுகளை மீட்கவும் மத்திய அரசு உரிய பேச்சுவார்த்தையை இலங்கை அரசிடம் மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதும், ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றதும், படகுகளை பறிமுதல் செய்ததும் மிகவும் கண்டிக்கத்தக்கது.

    தமிழக அரசு, தமிழக மீனவர்களின் பாதுகாப்பான மீன்பிடித்தொழிலுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு மீனவக்குடும்பங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    ராமேஸ்வரம்:

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றது இலங்கைக் கடற்படை.

    இதனால் கவலை அடைந்துள்ள தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நெடுந்தீவு அருகே மூன்று விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கைக் கடற்படையினரால் சிறை.
    • மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை வேண்டும்.

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (14-01-2024) கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், 13.01.2024 (நேற்று) நெடுந்தீவு அருகே மூன்று விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இவ்விவகாரத்தை இலங்கை அரசுடன் உரிய தூதரக வழிமுறைகள் மூலம் எடுத்துச் சென்று இலங்கை சிறையில் தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • 250 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
    • கைது செய்யப்பட்ட மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல்.

    தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    சுமார் 250 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்ட காரைநகர் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 32 பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

    கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மிச்சாங் புயல் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடலுக்கு செல்லாத மீனவர்கள் கடந்த சில நாட்களாகத் தான் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
    • இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மற்றும் புதுவை காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 25 மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை அவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

    தனுஷ்கோடி அருகே ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகு மீது தங்களின் படகை மோதி சேதப்படுத்தி உள்ளது சிங்களக் கடற்படை.

    இத்தாக்குதலில் சேதமடைந்த படகில் இருந்த 5 மீனவர்கள் உயிர் பிழைத்து உள்ளனர். சிங்களக் கடற்படையினரின் இத்தகைய செயல்கள் கண்டிக்கத்தக்கவை.

    மிச்சாங் புயல் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடலுக்கு செல்லாத மீனவர்கள் கடந்த சில நாட்களாகத் தான் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அதற்குள்ளாகவே அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வங்கக்கடலில் பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது சட்டப்பூர்வ உரிமையாக்கப்பட வேண்டும். இது தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். இப்போது கைது செய்யப்பட்ட 25 மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் வாடும் அனைத்து மீனவர்களையும், இலங்கை அரசிடம் உள்ள அனைத்து படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
    • பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து மீனவர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது அவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. மேலும் தமிழக மீனவர்களை கடற்கொள்ளையர்கள் தாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்த சம்பவம் மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகை அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், படகின் உரிமையாளர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர், நாகையன், திவ்யநாதன், மாயவன், பாக்கியராஜ், சக்திவேல், மணிகண்டன், ராமச்சந்திரன், கோதண்டபானி, ராமச்சந்திரன், செல்வமணி ஆகிய 12 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

    அவர்கள் நேற்று நள்ளிரவு கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 35 கடல்மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி 12 பேரையும் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதைப்போல் காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஆச்சியம்மாள் என்ற விசைப்படகும் அதில் இருந்த 13 மீனவர்களும் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களது படகும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 25 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மீன்பிடிப் படகிற்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய நடவடிக்கை.
    • தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்த மீனவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய நிவாரணத்தை அளிக்கும்.

    மாலத்தீவு கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 12 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்கள், IND-TN-12-MM-6376 என்ற பதிவு எண் கொண்ட 'ஹோலி ஸ்பிரிட்' என்ற படகில் கடந்த 22-10-2023 அன்று மீன்பிடிக்கச் சென்ற போது மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையினை ரத்து செய்திடவும், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்தக் கடிதத்தில், மாலத் தீவு கடலோரக் காவல் படையினரால்

    சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடிப் படகின் ஓட்டுநருக்கு, கடந்த 1.11.2023 அன்று, மாலத்தீவு குடியரசின் மீன்வளம், கடல் வளம் மற்றும் வேளாண்மை அமைச்சகம், மாலத்தீவின் பணமதிப்பில் 42,00,000, அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் அவர்கள், அறிவிப்பு கிடைத்த 30 நாட்களுக்குள் மேற்படி அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்றும், அதுவரை, அந்த மீன்பிடிப் படகு மாலத்தீவு காவல் படையினரின் வசம் இருக்கும் என்றும் மாலத் தீவு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதை தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களும், அவர்களது குடும்பத்தினரும், மீன்பிடித் தொழிலை மட்டுமே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், தற்போது விதிக்கப்பட்டிருக்கும் இந்த அபராதத் தொகை மிக அதிகமானது என்றும் அவர்களது சக்திக்கு அப்பாற்பட்டது என்றும், இது அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் நிரந்தரமாக வறுமையில் தள்ளிவிடும் என்றும் கவலைபடத் தெரிவித்துள்ளார்.

    இந்தப் பிரச்சினையில், மாலத்தீவில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் சார்பாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, மீன்பிடிப் படகிற்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யவும், மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்கள் இதில் தக்க நேரத்தில் தலையிட்டு மேற்கொள்ளும் நடவடிக்கை, கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்த மீனவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய நிவாரணத்தை அளிக்கும் என தான் நம்புவதாக தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    • நிச்சயமாக இன்று ஒன்றிய அமைச்சரை தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்வேன்.
    • மீனவர்களை பாதுகாக்கக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும்

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் மாநகராட்சிக்குட்பட்ட 5 இடங்களில் மொத்தம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 5 இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

    அதனை கனிமொழி எம்.பி. திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    புயல் அபாயத்தை தொடர்ந்து கரை ஒதுங்கிய தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்கள் உள்பட 12 தமிழக மீனவர்கள் மாலத்தீவில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உதவ வேண்டும் என்பதற்காக கடிதம் எழுதி உள்ளேன்.

    நிச்சயமாக இன்று ஒன்றிய அமைச்சரை தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்வேன். விரைவிலேயே அந்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு மறுபடியும் அவர்கள் தூத்துக்குடிக்கு வந்து அவர்களது குடும்பங்களை வந்து சேர வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை ஒன்றிய அரசு செய்து அவர்கள் மீட்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார்.

    இதுபோன்ற பிரச்சனைகள் மாலத்தீவிலும் தொடர்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கனிமொழி எம்.பி., இலங்கை-தமிழக மீனவர்கள் பிரச்சனையை அங்குள்ள மீனவ அமைப்புகளோடு இங்குள்ள மீனவ அமைப்புகளும் பேசி அதற்கு ஒரு தீர்வை காண வேண்டும் என ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டது.

    அந்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறாத சூழல் உள்ளது. அதை மறுபடியும் தொடர்ந்து நடத்தினாலே இப்பிரச்சனைகள் தீர்க்க முடியும்.

    ஒவ்வொரு இடத்திலும் மீனவர்கள் கைது செய்யப்படுவதும், மிகப்பெரிய போராட்டத்திற்கும் பிறகு அவர்கள் விடுதலை செய்யப்படுவதும், படகுகளை பிடித்து வைத்துக்கொள்வதும் அவர்களது வாழ்வாதாரங்களை பறிப்பது என்பது தொடர்கதையாக மாறிக்கொண்டிருக்க கூடிய சூழலில் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். மீனவர்களை பாதுகாக்கக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

    பேட்டியின்போது தமிழக சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
    • மீனவர்கள் தாக்கப்படுவதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆகஸ்ட் 10-ந்தேதி வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி,பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

    ஆகஸ்ட் 20-ந் தேதி அதே வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    ஆறுகாட்டுத்துறைக்கு மிக அருகில் இந்திய கடல் எல்லைப் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியும், இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டை ஆகியவற்றால் தாக்கியும் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 11 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இந்திய மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி கொள்ளை நடத்துவது 6-வது முறையாக நடந்திருக்கிறது.

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையினர் தொடர் தாக்குதல் நடத்துவதை இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல் படை வேடிக்கை பார்ப்பது வேதனை தருகிறது.

    இலங்கை கடற்கொள்ளையர்களால் நமது மீனவர்கள் தாக்கப்படுவதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கைது நடவடிக்கை மீனவர்களிடையே மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
    • தமிழக மீனவர்களின் உரிமையையும்; வாழ்வாதாரத்தையும் காக்க, மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வங்ககடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்து ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படை சிறைப் பிடித்துள்ளது வன்மையாக கண்டிக்கதக்கது. கச்சதீவிற்கும் தனுஷ்கோடிக்கும் இடையே இரண்டு படகுகளில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்களை, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 16 மீனவர்களை கைது செய்தும், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. மேலும் அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 11 மீனவர்களையும் கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கை மீனவர்களிடையே மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    இலங்கை கடற்படையினராலும், இலங்கை கடற்கொள்ளையர்களாலும் தொடர்ந்து பாதிக்கப்படும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக மீனவர்களின் உரிமையையும்; வாழ்வாதாரத்தையும் காக்க, மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிறை.
    • எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக கூறி சிறைபிடிப்பு.

    தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2 படகுகளுடன், மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடித்துள்ளனர்.

    கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.

    எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக கூறி சிறைபிடித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×