search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக்"

    • டாஸ்மாக் கடையில் நேற்று இரவு ஒருவர் மது பாட்டிலை வாங்கிச் சென்றார்.
    • குடிமகன்கள் வாக்குவாதம் செய்தனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த வீரகமோடு பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

    இந்த கடையில் நேற்று இரவு ஒருவர் மது பாட்டிலை வாங்கிச் சென்றார். அப்போது அதனை திறந்து பார்த்தபோது அந்த மது பாட்டிலில் பல்லி இறந்து கிடந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அந்த டாஸ்மாக் கடைக்கு சென்று இந்த மது பாட்டிலில் பல்லி உள்ளது. இதை மாற்றித் தரும்படி கேட்டார்.

    இதற்கு டாஸ்மாக் கடை ஊழியர்கள் மூடி திறந்த நிலையில் உள்ளது. இதனை நாங்கள் எப்படி நம்புவது மேலும் மது பாட்டிலை எதற்காக திறந்து எடுத்து வந்தீர்கள். அப்படியே எடுத்துக் கொண்டு வர வேண்டியது தானே என பல்வேறு கேள்விகளை கேட்டனர். அவர்களிடம் குடிமகன்கள் வாக்குவாதம் செய்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த நபர் தனது செல்போனில் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்தார்.

    மேலும் நான் மது போதையில் இருக்கிறேன். தெரியாமல் பல்லி விழுந்த பாட்டிலில் உள்ள மதுவை நான் குடித்திருந்தால் இந்த நேரம் செத்துபோய் இருப்பேன். எனது சாவுக்கு யார் காரணம்? என பல்வேறு கேள்விகளை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

    • கூடுதல் விலைக்கு மது விற்ற 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    • மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி பகுதியில், சிலர் மொத்தமாக டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து திருட்டுத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக மாமல்லபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வடக்கு மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் (வயது 53), இ.சி.ஆர் மணிகண்டன் (24) ஆகிய இருவரும் கூடுதல் விலைக்கு மது விற்றபோது போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கருத்தரங்குகளில் மது விநியோகிக்க அனுமதித்தால், சாதி அமைப்புகள், அரசியல் கட்சி மாநாடுகளிலும் மது விநியோகிக்க கோருவர்.
    • வழக்கு மீதான விசாரணை டிசம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் மேற்கொள்ளபட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன்னிலையில் வந்தது.

    அப்போது, "டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசு செயல்படுவதாக கூறுவது தவறு" என்று

    சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் செய்தது.

    இதற்கிடையே, கருத்தரங்குகளில் மது விநியோகிக்க அனுமதித்தால், சாதி அமைப்புகள், அரசியல் கட்சி மாநாடுகளிலும் மது விநியோகிக்க கோருவர். சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின்போது மதுபானம் விநியோகிப்பது அரசின் சட்டத்துக்கு எதிரானது என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்த தமிழக அரசு, விளையாட்டு மைதானங்கள், போட்டிகள் நடக்கும் இடங்களில் மதுபானங்கள் நிதியோகிக்கபட மாட்டாது என்றது.

    மேலும், இந்த வழக்கு மீதான விசாரணை டிசம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக் மதுபானம் ரூ.467 கோடிக்கு விற்பனையானதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • மகளிர் உரிமைத் தொகையாக இந்த மாதம் அரசு செலுத்தியது ரூ.1,138 கோடி.

    தீபாவளிப் பண்டிகைக்கு டாஸ்மாக் மதுபானம் ரூ.467 கோடிக்கு விற்பனையானதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை மகளிர் உரிமைத்தொகையுடன் இணைத்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறும்போது, இந்த மாதம் மகளிர் உரிமைத் தொகையாக அரசு செலுத்தியது ரூ.1,138 கோடி. இதில் பெரும் பகுதி மது விற்பனை மூலம் அரசுக்கு திரும்பி இருக்கிறது.

    இந்த நிலை நீடித்தால் தமிழக மக்களுக்கு விடியல் எப்படி வரும்? என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதையே பா.ம.க.வினர் பரப்புரையாக செய்து வருகிறார்கள்.

    • வருகிற 20-ந் தேதி நாகை தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்.
    • கூட்டமைப்பு துணைத் தலைவர் அம்பேத்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டமைப்பு தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் செந்தில்குமார், நீலமேகம், சிவன ருட்செல்வம், மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில், டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை பணியா ளர்கள் திரும்ப வாங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களை காலி பாட்டில்கள் சேகரிக்க நிர்பந்திக்க கூடாது. காலி பாட்டில்களை சேகரிக்க நிர்பந்திக்கும் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து வரும் 20-ந் தேதி நாகை தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. இதில் கூட்டமைப்பு துணைத் தலைவர் அம்பேத்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'காட்பாதர்' என்ற பீர் பாட்டில் புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது.
    • வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இன்னும் 5 வகைகளில் புதிய பீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் தற்போது புதிதாக 2 வகைகளில் பீர் பாட்டில்களை அறிமுகம் செய்துள்ளது. குடிமகன்களின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த பீர் பாட்டில்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

    தற்போது 'தண்டர்போல்ட் ஸ்டிராங்' என்ற புதிய வகை பீர் பாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் நேற்று முன்தினம் இரவு முதல் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த பீர் பாட்டிலின் விலை ரூ.160 ஆகும். மேலும் மற்றொரு ரகமாக 'காட்பாதர்' என்ற பீர் பாட்டிலும் புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது.

    இந்த புதிய பீர் பாட்டில் வகைகளை தீபாவளி விருந்தாக குடிமகன்கள் பார்க்கிறார்கள். வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இன்னும் 5 வகைகளில் புதிய பீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

    • இதுதான் தி.மு.க.வின் ஒப்பற்ற சாதனை.
    • பிரதமர் மோடி கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மணப்பாறை பகுதியில் யாத்திரை சென்றார். இது தொடர்பாக அவர் சமூக வலைத்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    மணப்பாறை தொகுதியில் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்தவர் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

    இந்த கட்சிக்கு தமிழகத்தில் இருக்கும் ஒரே வேலை பல உயிர்கள் பலியாக காரணமாக இருந்த 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த குண்டு வெடிப்பு தீவிரவாதிகளை சிறையில் இருந்து வெளியே கொண்டு வருவதுதான். இந்த கட்சியை மனிதநேய மற்ற கட்சி என்றுதான் அழைக்க வேண்டும்.

    மணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்கள். ஆனால் பணியின் போது கிடைக்கும் சரளை மண்ணுக்காக கல்லூரியை காலனி வாசல் பட்டிக்கு மாற்றிவிட்டார்கள். இது வரை கல்லூரி கட்டவில்லை. சொந்த கட்டிடம் இல்லாமல் பள்ளிக்கூட கட்டிடத்தில் கல்லூரி செயல்படுகிறது. எய்ம்ஸ் பற்றி பேச தி.மு.க. வுக்கு என்ன தகுதி இருக்கிறது?

    புதிதாக டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு குடிப்பழக்கம் கேடு விளைவிக்கும் என்று, டாஸ்மாக்கில் மது விற்பனை செய்பவர், அறிவுரை கூறுவார் என்றார் அமைச்சர் முத்துசாமி.

    மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். சென்ற ஆண்டு டாஸ்மாக்கில் சராசரியாக மது குடிப்போர் எண்ணிக்கை 80 லட்சமாக இருந்தது, தற்போது 90 லட்சமாக உயர்ந்துள்ளது என்று ஒரு ஆய்வு அறிக்கை சொல்கிறது. இதுதான் தி.மு.க.வின் ஒப்பற்ற சாதனை.

    தமிழ்நாட்டை முழுவதுமாக குடிகார மாநிலமாக மாற்றும் வரை அமைச்சர் முத்துசாமி ஓயமாட்டார். வரும் பாராளுமன்ற தேர்தலில், இத்தகைய மக்கள் விரோத தி.மு.க. கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிக்க வேண்டும். தமிழக மக்களுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கியுள்ள பிரதமர் மோடி கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பட்டுள்ளார்.

    • பெண்கள் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என கூறி டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள தோமலஅள்ளி கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் எதிர்ப்பினால் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் அதே இடத்தில் திறக்க ஏற்பாடுகள் நடப்பதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த பகுதிசை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என கூறி டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது;-

    டாஸ்மாக் கடையை திறந்தால் வெளியூர் பகுதியில் இருந்து ஏராளமானோர் மது அருந்த வருவார்கள். இதனால் கிராமத்து பெண்கள் மற்றும் மாணவிகள் சென்று வர அச்சுறுத்தல் ஏற்படும். அதிகமான வாகன போக்குவரத்து ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அன்றாடம் தினக்கூலிக்கு செல்லும் ஆண்கள் சம்பள பணத்தை குடித்து தீர்த்து விடுவார்கள்.

    ஊரில் உள்ள வாலிபர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மது பழக்கத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றனர்.

    மேலும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடையை திறந்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பேராட்டம் நடத்த போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் அவர்களிடம் பேச்சுவர்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக என உறுதியளித்ததின் பேரில் பெண்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • குடிமகன்களின் ஆடைகள் விலகி இருப்பதால் பொதுமக்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள் முகம் சுளித்தபடி செல்கின்றனர்.
    • பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் அரசு அனுமதி பெற்ற பார் திறக்க வேண்டும்.

    பொன்னேரி:

    பொன்னேரி, மீஞ்சூர், திருப்பாலைவனம், காட்டூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 20-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த மதுக்கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகின்றன. தற்போது இப்பகுதியில் அரசு அனுமதி பெற்ற பார் இல்லாததால் குடிமகன்கள் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு அருகில் உள்ள கடைகள், பஸ் நிலையம், வணிக வளாகம், சாலை ஓரங்கள், மரத்தடி பகுதிகள், வயல்வெளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் நடமாடும் பகுதியில் மதுகுடிக்கிறார்கள்.

    பின்னர் மதுபாட்டில்களை அங்கேயே உடைத்தும் போடுகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறாக சாலை ஓரங்களில் பாட்டில்கள் குவியலாக கிடக்கின்றன. மேலும் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு சாலை ஓரங்களில் போதையில் படுத்து கிடக்கிறார்கள். அவ்வாறு கிடக்கும் குடிமகன்களின் ஆடைகள் விலகி இருப்பதால் பொதுமக்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள் முகம் சுளித்தபடி செல்கின்றனர்.

    இது குறித்து குடிமகன்கள் கூறுகையில், 'டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு குடிப்பதற்கு இடம் கிடைக்காததால் வேறு வழி இல்லாமல் சாலையின் அருகே மது குடிக்கிறோம். பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் அரசு அனுமதி பெற்ற பார் திறக்க வேண்டும்' என்றனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அனைத்து மதுக்கடைகளும் இன்று அடைக்கப்பட்டன.
    • குடிமகன்கள் எந்த பேரமும் பேசாமல் மது கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் கூடுதல் பணம் கொடுத்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

    சென்னை:

    காந்தி ஜெயந்தியையொட்டி இன்று நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டன. தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் மூடப்பட்டன.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அனைத்து மதுக்கடைகளும் இன்று அடைக்கப்பட்டன. இன்று மதுக்கடை மூடப்படுவதை அறிந்த சிலர் நேற்றே ஏராளமான மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்தனர். அவற்றை இன்று கள்ளச்சந்தைகளில் விற்றனர். இதனால் இன்று பல இடங்களில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை ஜரூராக நடந்தது.

    சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலை வடக்கு போக் சாலை பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. காந்தி ஜெயந்தியையொட்டி இந்த மதுக்கடையும் இன்று மூடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து நேற்று இரவு அதிக அளவில் மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர் இன்று காலையில் மதுபாட்டில்களை ஸ்கூட்டரில் கொண்டு வந்து தி.நகர் ஜி.என்.செட்டி சாலை-வடக்கு போக் சாலை சந்திப்பு அருகே சாலை ஓரம் வைத்தபடி விற்றுக் கொண்டிருந்தார்.

    இந்த தகவல் அந்த பகுதியில் உள்ள குடிமகன்களுக்கு பரவியது. மதுக்கடைகள் இன்று அடைக்கப்பட்டிருந்ததால் விடுமுறை தினத்தை எப்படி கொண்டாடுவது என்று தவித்த குடிமகன்கள் உடனடியாக கள்ளச்சந்தையில் மது விற்கப்படும் இடத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஸ்கூட்டரில் வைத்து மது விற்றவரிடம் இருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

    வழக்கமாக ரூ.140-க்கு விற்கப்படும் மதுபாட்டில்கள் அந்த நபர் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.110 விலை வைத்து ரூ.250-க்கு விற்றுக் கொண்டிருந்தார். குடிமகன்கள் எந்த பேரமும் பேசாமல் மது கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் கூடுதல் பணம் கொடுத்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். இதனால் பட்டப்பகலில் சாலை ஓரத்தில் மது விற்பனை மிகவும் ஜரூராக நடந்தது.

    அதேபோல் சென்னையின் சில இடங்களிலும் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன.

    • ஓட்டலில் இருந்து புறப்பட்ட இளங்கோவன், ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.200 முன்பணமாக வாங்கி சென்றார்.
    • ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இளங்கோவனை பரிசோதித்து, அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

    விழுப்புரம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதிைய சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 45). இவர் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் தங்கி, தனியார் ஓட்டலில் பணி செய்து வந்தார். நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு ஓட்டலில் இருந்து புறப்பட்ட இளங்கோவன், ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.200 முன்பணமாக வாங்கி சென்றார். அங்கிருந்து டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சென்ற அவர், மதுபானத்தை வாங்கி குடித்துள்ளார். பின்னர், வீட்டிற்கு சென்ற அவர் உறங்கிவிட்டார். இன்று காலை நெடுநேரமாகியும் அவர், வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, இளங்கோவன் மூச்சு பேச்சின்றி கிடந்தார்.

    இது குறித்த தகவலின் பேரில் ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இளங்கோவனை பரிசோதித்து, அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து இளங்கோவன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக, புதுவை மாநிலம் கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மர்மமான முறையில் இறந்து போன இளங்கோ வன், மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது போலி மதுபானம் குடித்ததால் இறந்து போனாரா? என்பது குறித்து ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகத்தில் பெண்களுக்கான திட்டத்தில் முதலமைச்சர் மிகுந்த அக்கறை எடுத்து ஒவ்வொன்றாக செய்து கொண்டிருக்கின்றார்.
    • டாஸ்மாக் பிரச்சனையை பொறுத்தவரை நிறைய ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் 111 கர்ப்பிணி பெண்களுக்கும், மாவட்டம் முழுவதும் 3000 பேருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வெவ்வேறு நாட்களில் நடத்தப்படுகிறது.

    இது ஒரு நிகழ்ச்சிக்காக மட்டுமல்ல கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த நிகழ்ச்சி கர்ப்பிணி பெண்கள் பெரும்பாலும் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டு இருப்பவர்கள். அவர்களுக்கு ஓய்வு வீடுகளில் கிடைக்காத சூழல் உள்ளது. ஆனால் கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என பொதுவாக கருத்து சொல்வதுண்டு.

    எனினும் மருத்துவரிடம் ஆலோசித்து செயல்பட வேண்டும், பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் போன்ற கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன இந்த துறையின் சார்பாக அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி பயன்படுகிறது.

    தமிழகத்தில் பெண்களுக்கான திட்டத்தில் முதலமைச்சர் மிகுந்த அக்கறை எடுத்து ஒவ்வொன்றாக செய்து கொண்டிருக்கின்றார். பேருந்து பயணம், உரிமைத்தொகை அரசு, பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு உதவித்தொகை, காலை உணவு திட்டம் குடும்ப பெண்களுக்கு சுமையை குறைத்து மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. இவ்வாறாக ஒவ்வொன்றாக பெண்களின் நலன் கருதி முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    டெங்கு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம், மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் டெங்கு பாதிப்பு குறித்து தகவல் கிடைத்தால் அந்த பகுதிகளில் உரிய நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் உள்ளனர்.

    டாஸ்மாக் பிரச்சனையை பொறுத்தவரை நிறைய ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற மாநில ங்களில் என்ன நடக்கிறது என்பதை கண்டறிய தனிக்குழு அமைத்து இதில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன அதை தீர்ப்பதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் முழுமையாக அதைப்பற்றி கருத்துக்கள் சொல்ல முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×