search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்பணம்"

    • ஓட்டலில் இருந்து புறப்பட்ட இளங்கோவன், ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.200 முன்பணமாக வாங்கி சென்றார்.
    • ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இளங்கோவனை பரிசோதித்து, அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

    விழுப்புரம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதிைய சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 45). இவர் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் தங்கி, தனியார் ஓட்டலில் பணி செய்து வந்தார். நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு ஓட்டலில் இருந்து புறப்பட்ட இளங்கோவன், ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.200 முன்பணமாக வாங்கி சென்றார். அங்கிருந்து டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சென்ற அவர், மதுபானத்தை வாங்கி குடித்துள்ளார். பின்னர், வீட்டிற்கு சென்ற அவர் உறங்கிவிட்டார். இன்று காலை நெடுநேரமாகியும் அவர், வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, இளங்கோவன் மூச்சு பேச்சின்றி கிடந்தார்.

    இது குறித்த தகவலின் பேரில் ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இளங்கோவனை பரிசோதித்து, அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து இளங்கோவன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக, புதுவை மாநிலம் கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மர்மமான முறையில் இறந்து போன இளங்கோ வன், மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது போலி மதுபானம் குடித்ததால் இறந்து போனாரா? என்பது குறித்து ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ் நிலையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் போனஸ் வழங்க வேண்டும்.
    • பண்டிகை முன்பணம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஏ .ஐ. டி. யூ. சி. தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக 25 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்,

    கடந்த கொரோனா காலத்தில் குறைக்கப்பட்ட போனஸ் சேர்த்து வழங்கப்பட வேண்டும், பேருந்து நிலையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் போனஸ் வழங்க வேண்டும், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் போனஸ் வழங்கப்பட வேண்டும், பண்டிகை முன்பணம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் நகரக் கிளைகள் முன்பாக சங்கத் தலைவர் சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாத்துரை முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தினை ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் தில்லைவனம் தொடக்கி வைத்து பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாநிலத் துணைத் தலைவர் துரை.மதிவாணன், பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன், பொருளாளர் ராஜமன்னன் , ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர் சேவையா,நுகர் பொருள் வாணிப கழக சங்க பொருளாளர் கோவிந்த ராஜன், ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் மனோகர், இருதயராஜ், குணசேகரன், சங்க நிர்வாகிகள் சுந்தர பாண்டியன், சண்முகம் , சுமன், சந்திரன், சுகு மார் உ ள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் தஞ்சாவூர் நகர கிளை செயலாளர் ரெங்கதுரை நன்றி கூறினார். 

    ×