search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர்கள்"

    • தனியார் மருத்துவ கல்லூரி அருகே நின்ற 3 பேரை பிடித்து சோதனை செய்தனர்.
    • தங்களது உபயோகத்துக்கு போக மீதி கஞ்சாவை நண்பர்களுக்கு விற்று வந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை கிருமாம் பாக்கத்தில் தனியார் மருத்துவம், என்ஜினீயரிங், நர்சிங் உள்ளிட்ட கல்லூரிகள் இயங்கி வருகிறது.

    கிருமாம்பாக்கம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா சப்ளை செய்வதாக தொடர் புகார் எழுந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் உள்ளிட்டோர் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் அந்த பகுதியிலிருந்த தனியார் மருத்துவ கல்லூரி அருகே நின்ற 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களில் 2 பேர் டாக்டர்கள் என்பது தெரியவந்தது.

    சென்னையை சேர்ந்த பல் டாக்டர் குற்றாலீஸ்வரன்(29), புதுச்சேரி கோரிமேட்டை சேர்ந்த டாக்டர் கார்த்திகேயன்(26) மற்றும் கடலூர் மாவட்டம் அன்னவல்லி கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் ரவிக்குமார்(29) என தெரியவந்தது.

    ரவிக்குமார் ரெட்டிச் சாவடியில் ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது டாக்டர்கள் குற்றாலீஸ்வரனும் கார்த்திகேயனும் டீ கடைக்கு வரும்போது அவர்களுடன் என்ஜினீயர் ரவிக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    3 பேரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான இவர்கள் முதலில் ஆரோவில் பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.

    அதன்பிறகு தங்களது உபயோகத்துக்கு போக மீதி கஞ்சாவை நண்பர்களுக்கு விற்று வந்துள்ளனர். அதில் நல்ல வருமானம் கிடைக்கவே சென்னையை சேர்ந்த கஞ்சா வியாபாரி விக்னேசிடம் கிலோ கணக்கில் கஞ்சா வாங்கி வந்து சிறு சிறு பொட்டலங்களாக கல்லூரி மாணவர்களுக்கு விற்று வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா, ரூ.21 ஆயிரம் ரொக்கம், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

    • மனைவியை பிரிந்து வாழ்ந்தவர்
    • பரிசோதித்த டாக்டர்கள், சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்

    கன்னியாகுமரி :

    தூத்துக்குடியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 29). இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.

    இந்த நிலையில் சரவணன், கடந்த ஒரு மாதமாக கன்னியாகுமரி அருகே உள்ள அஞ்சு கூட்டுவிளை அருந்ததியர் காலனியில் தனது பெரியம்மா வீட்டில் தங்கி இருந்தார். நேற்று அவர் வீட்டின் வெளியே உள்ள கழிவறைக்கு சென்றார்.

    அப்போது திடீர் என்று மயங்கி சுருண்டு கீழே விழுந்தார். உடனே உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அதன் பிறகு சரவணன் உடல் பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட் டது.

    இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கால்நடை வளர்ப்பு தொழில் மக்களுக்கு வருவாய் ஈட்டித் தருகிறது.
    • வெப்ப நிலையால் வாய் திறந்த நிலையில் சுவாசித்தல் உள்ளிட்டவை வெப்ப அயர்ச்சி பாதிப்பு அறிகுறிகள்.

    உடுமலை :

    உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் கால்நடை வளர்ப்புத்தொழில் முக்கிய வாழ்வாதாரமாக அமைந்துள்ளது. விவசாயம் அல்லாத காலங்களில், கால்நடை வளர்ப்பு தொழில் மக்களுக்கு வருவாய் ஈட்டித் தருகிறது.தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால், கால்நடைகளுக்கு வெப்ப அயர்ச்சி பாதிப்பு ஏற்படுகிறது.

    சுத்தமான தண்ணீரை வழங்குவதன் வாயிலாக, வெப்ப அயற்சி வராமல் தடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது இது குறித்து கால்நடை டாக்டர்கள் கூறியதாவது:- நிழலில்தஞ்சம் அடைதல், அதிகமானதண்ணீர் பருகுதல், பசியின்மை, அதிகமானஉமிழ்நீர் வடிதல், அதிக உடல் வெப்ப நிலை யால் வாய் திறந்த நிலையில் சுவாசி த்தல் உள்ளிட்டவை வெப்ப அயர்ச்சி பாதிப்பு அறிகுறிகள்.கலப்புத் தீவனத்தை தண்ணீரின் மேல் சிறிதளவு துாவும் போது,மாடுகளின் தண்ணீர் குடிக்கும்அளவு அதிகரிக்கும்.வறண்ட வெப்ப நிலையின்போது கால்நடைகள்அதிக ப்படியான உலர் மற்றும் நார் சத்துக்களையும், குறை வாக செரிக்க கூடிய தீவனங்களையும் உட்கொ ள்கின்றன.சுத்தமான தண்ணீரை முறையாக பருகினால் கால்நடை களுக்கு வெப்ப அயர்ச்சி நோய் ஏற்பட வாய்ப்பில்லை.இவ்வாறுஅவர்கள் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆண்கள் வைத்திருக்கும் தாடியில் பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.
    • தாடி வைத்த ஆண்களை முத்தமிடும்போது இதுபோன்ற தேமல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.


    இப்போதுள்ள வாலிபர்கள் பலரும் முகத்தில் தாடியுடன் சுற்றுவதையே விரும்புகிறார்கள். கல்லூரிக்கு செல்லும்போதும், ஏன் திருமணம் செய்து கொள்ளும்போது கூட அவர்கள் முகத்தில் தாடி இருப்பது பேஷனாகி விட்டது.

    இப்படி தாடியுடன் இருக்கும் ஆண்களை தான் பிடித்திருப்பதாக பல நிகழ்ச்சிகளில் பெண்கள் கூறியுள்ளனர். அப்படி கூறும் பெண்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல் ஒன்றை தோல் நோய் சிறப்பு டாக்டர் முனீப்ஷா என்பவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் வெளிநாட்டு பெண் ஒருவரின் கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அந்த பெண், தனது ஆண் நண்பரை முத்தமிட்ட பின்பு தனது கன்னத்தில் தேமல் ஏற்படுவதாக கூறியிருந்தார். அந்த ஆண் நண்பருக்கு முகத்தில் தாடி உள்ளது. அந்த தாடிகாரணமாகவே தனக்கு இதுபோன்ற தேமல் ஏற்படுவதை தோல் நோய் சிறப்பு டாக்டர் கண்டுபிடித்து கூறியதாக பதிவிட்டு இருந்தார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, ஆண்கள் வைத்திருக்கும் தாடியில் பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக தாடி வைத்த ஆண்களை முத்தமிடும்போது இதுபோன்ற தேமல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.

    மேலும் ஆண்கள் வைத்துள்ள தாடியை தினமும் சுத்தம் செய்வதில்லை. இதன் காரணமாகவும் பாதிப்பு ஏற்படும். எனவே தாடி வைத்த ஆண்களை முத்தமிடும் முன்பு பெண்கள் ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

    • சிறுநீர் வெளியேறாதால் உடலில் நீர் வறட்சி ஏற்படும்.
    • தர்பூசணி, வெள்ளரி போன்ற பழங்களைச் சாப்பிடலாம்.

    திருப்பூர் :

    வெய்யிலின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:- அதிக வெப்ப காலங்களில் சிறுநீர்த் தொற்று உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். வயதானவர்களுக்கு வெயிலால் உடல் பலவீனமாகி 'ஹீட் ஸ்ட்ரோக்' எனும் வெப்பத்தாக்கு நோய் வரலாம்.கோடைக் காலத்தில் வியர்வைச் சுரக்காதது, சுரந்தும் ஆவியாகாதது, 'ஹைபோதலமஸ்' சரியாக வேலை செய்யாமல் இருப்பதால் ஹீட் ஸ்ட்ரோக் வர வாய்ப்புகள் அதிகம்.நடுத்தர வயதினருக்கு சிறுநீரகப் பிரச்னைகளும், குழந்தைகளுக்கு தொண்டையில் பாதிப்புகளும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.வெப்பம் அதிகமுள்ள காலங்களில் அதிக வியர்வை மற்றும் அளவுக்கதிகமாக சிறுநீர் வெளியேறாதால் உடலில் நீர் வறட்சி ஏற்படும்.அதை தவிர்க்க இளநீர், மோர், நன்னாரி சர்பத் போன்ற இயற்கை பானங்கள், தர்பூசணி, வெள்ளரி போன்ற பழங்களைச் சாப்பிடலாம்.

    கோடைக்காலத்தில் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அல்சர் பிரச்னைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய நார்ச்சத்து அதிகமுள்ள முழுதானிய உணவு, காய்கறி, பருப்பு வகைகள் நீர்ச்சத்து நிறைந்த பழவகைகளை அதிகம் சாப்பிட வேண்டும்.குறிப்பாக, வழக்கமாக குடிக்கும் அளவை விட சற்று அதிகமாக நீர் அருந்த வேண்டும். சூரிய ஒளியில் உள்ள புறஊதாக் கதிர்களால் கோடைக்காலங்களில் சருமத்தில் அரிப்பு ஏற்படும்.எனவே பகலில் வெளியே செல்லும்போது முகம் மற்றும் கைகளை துணிகளால் மூடியபடி செல்வது நல்லது. தலைக்கு தொப்பி அணிவது குடை பயன்படுத்துவது நல்லது.வயதானவர்கள் வெளியே செல்வதைத் தவிர்க்கலாம். குழந்தைகள் மதியவேளையில் விளையாடுவதை தவிர்த்து மாலையில் விளையாடலாம்.பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. அடர் நிறத்திலான ஆடைகள், இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவேண்டும்.ஐஸ் வாட்டர் குடிப்பது, உடலுக்கு கேடு விளைவிக்கும். குறிப்பாக ஐஸ்கிரீமைத் தவிர்க்க வேண்டும். ப்ரிட்ஜில் வைத்த தண்ணீரையும் தவிர்க்க வேண்டும். இது தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.ஐஸ் வாட்டர் குடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும். குறிப்பாக ஐஸ்கிரீமைத் தவிர்க்க வேண்டும். ப்ரிட்ஜில் வைத்த தண்ணீரையும் தவிர்க்க வேண்டும். இது தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் முககவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
    • நோயாளிகளும் அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டு அவர்களும் முககவசம் அணிந்தனர்

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள். தமிழக அரசும் முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரிகளில் இன்று முதல் முககவசம் கட்டாயம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதையடுத்து குமரி மாவட்டத்திலுள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் முககவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

    குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரு கிறது.கடந்த ஒரு வாரத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று மேலும் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆண்கள் 6 பேரும் பெண்கள் 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    திருவட்டார், ராஜாக்க மங்கலம், குருந்தன்கோடு ஒன்றியத்தில் தலா 2 பேரும், தக்கலை ஒன்றியத்தில் 4 பேரும், அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இந்த நிலையில் இன்று முதல் முககவசம் கட்டாயமாக்கப்பட்டதையடுத்து ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த டாக்டர்கள் அனைவரும் முககவசம் அணிந்து பணிக்கு வந்தனர்.

    நோயாளிகளும் அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து நோயாளிகளும் முககவசம் அணிந்தனர்.புற நோயாளிகள் பிரிவில் மருந்து வாங்க வந்தவர்களும் முககவசம் அணிந்திருந்தனர்.இதே போல் மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி, குளச்சல், குழித்துறை உள்பட அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் உள்ள டாக்டர்கள், நர்சுகள் அனைவரும் முககவசம் அணிந்திருந்தனர். மருந்து வாங்க வந்தவர்களையும் முககவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தினார்கள்.

    வடிவீஸ்வரம், வடசேரி, அகஸ்தீஸ்வரம் உள்பட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டாக்டர்கள் முககவசம் அணிந்திருந்தனர். இங்கு வந்த நோயாளிகள் பெரும் பாலானோர் முககவசம் அணியாமல் வருகை தந்தனர். இதையடுத்து டாக்டர்கள் அவர்களை முககவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தினார்கள்.

    • ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் மீண்டும் கொரோனா வார்டு
    • 298 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கொரானா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு மற்றும் சளி தொல்லையால் அவதிப்படுபவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. நேற்று மாவட்டம் முழுவதும் 298 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ராஜாக்கமங்கலம், தக்கலை ஒன்றிய பகுதிகளில் தலா ஒருவரும், நாகர்கோவில் மாநகரப் பகுதியில் 2 பேரும், குருந்தன்கோடு ஒன்றிய பகுதியில் 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கொரோனா அதிகரித்து வருவதையடுத்து முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்து றை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசு உத்தர விட்டுள்ளது.

    அதன்படி தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை சுகாதாரத்து றை மேற்கொண்டு வரு கிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் ஒத்திகை நடை பெற உள்ளது. இந்த நிலையில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு நடவ டிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

    மருத்துவ கல்லூரி முதல்வர் பிரின்ஸ்பயஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அருள் பிரகாஷ் உறைவிட மருத்துவர் டாக்டர் ஜோசப்சென் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து மருத்துவக்கல்லூரி முதல்வர் பிரின்ஸ்பயஸ் கூறியதாவது:-

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்பொழுது காய்ச்சலுக்காக தனி புற நோயாளிகள் பரிசோதனை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் காய்ச்ச லுக்கு தனி வார்டும் செயல்பட்டு வருகிறது.

    ஏற்கனவே கொரோனா பரவல் இருந்த கால கட்டத் தில் கொேரானா சிகிச்சை வார்டுகள் தனியாக இருந்தது. தற்போது அங்கு மீண்டும் கொரானா சிகிச்சை வார்டுதொடங்கப்பட உள்ளது. பரிசோதனை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். போதுமான அளவு ஆக்ஸி ஜன் மருந்துகள் உள்ளது. பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.பாதிப்பு அதிகமாக ஏற்பட் டால் அதை சமாளிக்கவும் தயார் நிலையில் உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நாஞ்சில் சம்பத்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்
    • மயக்க நிலையில் உள்ள நாஞ்சில் சம்பத்துக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் இன்று வரை சுயநினைவு திரும்பவில்லை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் தக்கலை அருகே மணக்காவிளையைச் சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத் (வயது 68). பேச்சாளரும் இலக்கியவாதியுமான இவருக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து நேற்று மதியம் நாஞ்சில் சம்பத்தை அவரது உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நாஞ்சில் சம்பத்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மயக்க நிலையில் உள்ள நாஞ்சில் சம்பத்துக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் இன்று வரை சுயநினைவு திரும்பவில்லை.நாஞ்சில் சம்பத் அவரது மனைவி மற்றும் மகன் உடனிருந்து கவனித்து வருகிறார்கள். நாஞ்சில் சம்பத் உடல்நிலை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது மகனிடம் கேட்டறிந்தார்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரி சிகிச்சை பெற்று வரும் நாஞ்சில் சம்பத்தை நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

    • தொண்டை வலி, தடிப்புகள், வயிற்று உபாதைகள் உள்ளிட்ட பொதுவான அறிகுறிகள் இருக்கும்.
    • குடிநீரை காய்ச்சி குடிப்பது அவசியம். கைகளில் அழுக்கு படிந்து அதன் மூலம் கிருமி தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

    திருப்பூர்:

    டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், விழிப்புடன் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து திருப்பூர்அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:-டைபாய்டு காய்ச்சல் பொதுவாக மழைக்காலத்தில் பரவுகிறது. மாசுபட்ட நீர் முக்கிய காரணமாக உள்ளது. குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகம்.டைபாய்டு காய்ச்சல் ஏற்படுபவர்களுக்கு சோர்வு, அதிக காய்ச்சல், பசியின்மை, தலைவலி, வயிற்றுப்போக்கு, குமட்டல், மயக்கம், தொண்டை வலி, தடிப்புகள், வயிற்று உபாதைகள் உள்ளிட்ட பொதுவான அறிகுறிகள் இருக்கும்.இரு நாட்களுக்கு மேல் காய்ச்சல் உள்ளவர்கள் டாக்டரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். கவனிக்காமல் விட்டால் பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படலாம். குடிநீரை காய்ச்சி குடிப்பது அவசியம். கைகளில் அழுக்கு படிந்து அதன் மூலம் கிருமி தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றனர். 

    • பாவளிக்கு முதல் நாள் துவங்கி பண்டிகை முடியும் வரை 25 ந் தேதி சுழற்சி முறையில் பணியில் இருக்கும்.
    • மருத்துவமனைகளில் தீக்காயத்துக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தீபாவளி பண்டிகையின் போது அரசு மருத்துவ கல்லூரி, அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தீக்காயத்துக்கு சிகிச்சையளிக்க தேவையான ஏற்பாடுகளுடன் தயாராக இருக்க வேண்டும் என பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத்துறை இயக்குனர் தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு டாக்டர், 3 செவிலியர் அடங்கிய பிரத்யேக குழு தீபாவளிக்கு முதல் நாள் துவங்கி பண்டிகை முடியும் வரை (25 ந் தேதி) சுழற்சி முறையில் பணியில் இருக்கும். இதே போல் தாராபுரம், பல்லடம், காங்கயம், உடுமலை, அவிநாசி உள்ளிட்ட மருத்துவமனைகளில் தீக்காயத்துக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    காங்கயத்தில் உள்ள மாவட்ட மருந்துக்கிடங்கில் இருந்து, தீக்காய சிகிச்சைக்கான மருந்துகள், குளுக்கோஸ் பாட்டில், பிளாஸ்டிக் சர்ஜரி, அறுவை சிகிச்சை உட்பட தேவையான மருந்து பொருட்கள் இருப்பில் வைக்க தேவையான பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அத்துடன் மாவட்டத்தில் 3 நாட்கள் நடக்கும் தீக்காயம் தொடர்பான விபத்து, சிகிச்சைகளை மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் கண்காணித்து அறிக்கை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதேப்போல் தீ விபத்து ஏற்பட்டால் உடனே அணைக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் தீயணைப்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • செயலாளர் கோகுலகிருஷ்ணன், கவுரவ தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் பிரபு உள்பட 70-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பணி புரிந்து வருகின்றனர். தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அவர்களின் பணி நேரமாகும்.

    இந்நிலையில் தற்போது தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியும் டாக்டர்கள் வேலை நேரம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு மணி நேரம் வேலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி இன்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மதியம் டாக்டர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் கோகுலகிருஷ்ணன், கவுரவ தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் பிரபு உள்பட 70-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.

    கடலூர்:

    அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரின் பணி நேரத்தை நீடித்து வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணை தலைவர் டாக்டர் புலிகேசி தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் டாக்டர் சசிகுமார், மாவட்ட செயலாளர் டாக்டர் குலோத்துவச்சோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் டாக்டர்கள் சிவகுமார், பாலச்சந்தர், அமுதா, வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்க உரையாற்றினார்கள். இதனை தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். முடிவில் டாக்டர் அருண் குமார் நன்றி கூறினார்.

    ×