search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீயணைப்பு குழு"

    • பாவளிக்கு முதல் நாள் துவங்கி பண்டிகை முடியும் வரை 25 ந் தேதி சுழற்சி முறையில் பணியில் இருக்கும்.
    • மருத்துவமனைகளில் தீக்காயத்துக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தீபாவளி பண்டிகையின் போது அரசு மருத்துவ கல்லூரி, அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தீக்காயத்துக்கு சிகிச்சையளிக்க தேவையான ஏற்பாடுகளுடன் தயாராக இருக்க வேண்டும் என பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத்துறை இயக்குனர் தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு டாக்டர், 3 செவிலியர் அடங்கிய பிரத்யேக குழு தீபாவளிக்கு முதல் நாள் துவங்கி பண்டிகை முடியும் வரை (25 ந் தேதி) சுழற்சி முறையில் பணியில் இருக்கும். இதே போல் தாராபுரம், பல்லடம், காங்கயம், உடுமலை, அவிநாசி உள்ளிட்ட மருத்துவமனைகளில் தீக்காயத்துக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    காங்கயத்தில் உள்ள மாவட்ட மருந்துக்கிடங்கில் இருந்து, தீக்காய சிகிச்சைக்கான மருந்துகள், குளுக்கோஸ் பாட்டில், பிளாஸ்டிக் சர்ஜரி, அறுவை சிகிச்சை உட்பட தேவையான மருந்து பொருட்கள் இருப்பில் வைக்க தேவையான பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அத்துடன் மாவட்டத்தில் 3 நாட்கள் நடக்கும் தீக்காயம் தொடர்பான விபத்து, சிகிச்சைகளை மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் கண்காணித்து அறிக்கை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதேப்போல் தீ விபத்து ஏற்பட்டால் உடனே அணைக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் தீயணைப்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

    ×